இது எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கே இது போர் அடித்து விட்டது. அதனால், மாற்றி ஏதாவது சொல்லி ஏமாற்ற முடியுமா? என்பதை பாட்டாளி மக்கள் கட்சியும் யோசிக்கலாம். மற்ற வன்னியர் சமுதாய அமைப்புகளும் யோசிக்கலாம். ஆனால், இது ஒன்றுதான் சரியான ஆயுதம் ,ஏதாவது காரணங்களை சொல்லி அல்லது பொய்யை சொல்லி தப்பித்துக் கொண்டிருக்க முடியும். மற்றது எதுவும் அவ்வளவு எளிதில் சொல்லி தப்பிக்க முடியாது.மேலும்,
இதே பாணியை தான், இந்த கட்சியினர் வன்னிய சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் எம்ஜிஆர் உடைய பாடலில் மனுஷனை, மனுஷன் சாப்பிடறான்டா தம்பி பயலே என்று பாடல் வரிகள் வரும். ஆனால் இப்போது ஜாதியை, ஜாதி சாப்பிடுகிறது என்றால் அது வன்னிய சமுதாயம் தான். இவர்களால் இந்த சமுதாயத்தின் ஒற்றுமையை அழித்து விட்டார்கள். மேலும்,எத்தனை நாளைக்கு இவர்கள் ஏமாற்ற முடியும்?
சமுதாயத்தில் எல்லோரும் இவர்கள் நினைப்பது போல் பணத்தைக் காட்டி விலைக்கு வாங்கலாம் என்றால் ,இந்த சமுதாயத்தில் அது முடியாது. அது விலை போகிறவர்கள் ,உங்கள் பின்னால் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், சமுதாயம் கொஞ்சம் ,கொஞ்சமாக இந்த ஏமாற்றத்திலிருந்து அது விழித்துக் கொண்டு வெளி வருகிறது.
அதனால், நீங்கள் இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுக்கவில்லை என்றாலும் ,அவர்கள் கஷ்டப்பட்டு , உங்கள் காலை பிடிப்பதை விட ,ஏதோ யார் காலையாவது பிடித்தாவது அவர்கள் பிழைப்பார்கள். ஆனால், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒரு சொல் தொடர்ந்து வன்னியர் சமுதாயம் ஏமாறுமா? அல்லது இதையே சொல்லி யார் வேண்டுமானாலும் வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றலாமா? மேலும்,
இனி யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ,எத்தனை இட ஒதுக்கீடு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். யார் செய்கிறார்களோ, அதை நிரூபித்து காட்டட்டும் ,பிறகு அவர்கள் பின்னால் நாம் செல்லலாம்.
பேசிவிட்டு ,ஏமாற்றிவிட்டு வாக்குகளை வாங்கிக் கொண்டு டாடா காட்டும் வேலை யெல்லாம் தேவையில்லை . நாட்டில் எந்த அரசியல் கட்சியும் தற்போது நம்ப முடியவில்லை. அதிலும் சொந்த ஜாதி கட்சிகள் சொல்லவே தேவையில்லை. தேர்தல் வரும்போது மட்டும் தான் நம்ம ஆளு, அதுக்கப்புறம் இவர் வேற ஆளு. இதுவும் உங்களுக்கு தெரியும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அதனால், இந்த இட ஒதுக்கீடு பேச்சை எடுத்து யார் ,பேசினாலும் ,யாருமே ஏமாறாதீர்கள். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், செய்து காட்டட்டும் பார்க்கலாம் என்று திடமாக இந்த உண்மையை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.