அருள்வெளி சித்தர் பாபாவின் 32 ஆம் ஆண்டு மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீலஸ்ரீ அருள்வெளி சித்தர் பாபாவின் குருபூஜை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூதேரி கிராமத்தில் நடைபெற்றது.


அக்கிராமத்தில் தான் அவருடைய ஜீவசமாதி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலை அருள்வெளி சித்தர் பாபாவின் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.


மேலும், இந்நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் ஆன்மிக அன்பர்களும் கலந்து கொண்டனர் இங்கு சிறப்பான அன்னதானம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது.


மேலும், பாபாவின் குரு பூஜையில் அவருடைய சீடர் செந்தில் சுவாமிகள் திருமூலர் திருமந்திர வேள்வி மற்றும் பாராயணத்தை நடத்தினர்.


அதைத் தொடர்ந்து பிரபாவதி அம்மையார் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பாபாவிற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.


மேலும், இந்நிகழ்ச்சியில் 108 பால்குடம் எடுத்து வந்து அதை பக்தர்களே களே அவருடைய திருக்கரங்களால் அருள்வெளி சித்தருக்கு பாலபிஷேகம் செய்தனர்.


இதைவிட சிறப்பு இந்நிகழ்ச்சியில் கலந் துகொண்ட அனைத்து ஆன்மீக பக்தர்களுக்கும், பாபாவின் பிரசாதங்கள் மற்றும் அவருடைய திருவுருவம் அச்சிட்ட பைகளில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.


மேலும், இம்மகா குரு பூஜையில்!


சத்குரு சதாசிவ பிரம்மேந்திர அம்மா குரு பூஜையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, அவருடைய பிரச்சனைகளுக்கு அருள் வாக்கும் அருளினார்.


 பாபாவின் அருளால் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. மேலும், இக்கோயிலில்எக்காரணம் கொண்டும்அரசியல் கட்சியினருக்கு முக்கியத்துவம் தருவதில்லை.


தவிர சித்தர் பாபாவின் அனுமதி இன் ஒருவரும் இக்கோயிலுக்கு வரமுடியாது அவர் உத்தரவு இல்லாமல் வாசற்படி கூட மிதிக்க முடியாது என்கின்றனர் சில ஆன்மீக அன்பர்கள்.


மேலும் பாபாவின் கருணையும் அருளும் ஏட்டில் எழுத முடியாத ஒன்று அவர் ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அங்கே உள்ளே நுழைய விடுவார்.


இல்லையென் றால், அவரை அங்கு ஐந்து நிமிடம் கூட உள்ளே இருக்க விடமாட்டார்.


அதனால் அவருடைய இடத்திற்கு வந்து போகும் பக்தர்கள் பாக்கியவான்கள். மேலும் அவருடைய அருள் இருந்தால் மட்டுமே! இங்கு வர முடியும்.


மேலும் ,இக்கோயில் கட்டப்பட்டது முதல்பராமரிக்கப்பட்டு வருவது வரை எல்லாமே ஒரு அதிசயம் தான். சில தான். சுவாமியின் திருவுளத்தால் ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமேதான் இதை ஏற்று செய்ய முடியும்.


அவருடைய கருணையும், அருளும், அவரையே சரணாகதி அடைந்த பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை கொடுப்பதில் வள்ளல்!


அவருடைய வள்ளல் தன்மை ,அவரை வணங்கும் பக்தர்களுக்கு மட்டுமே! தெரிந்த உண்மை .


பாபாவின் அருள் சக்தியும் ,பக்தியும் ,சர்வமும் அருளும் சதாசிவம் ஆகவிளங்கி வருகிறார் .அவர் அருள் இன்றி அவரை வணங்க முடியாது -


தொடரும் அவர் ஆன்மிக வரலாறு.


Popular posts
பதவி! அதிகாரத்திற்கு, போட்டி போடும் அரசியல் கட்சிகள்! மக்களின் சேவைக்கு ஏன் போட்டி போடுவதில்லை? -மக்கள் அதிகாரம் .
படம்
அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.
படம்
நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.
படம்
வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?
படம்