நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி !  ராஜேந்திர சோழனின் உருவ  நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், தூத்துக்குடியில் 1032 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை ஆதிரை திருவிழாவில், வெளியிடுகிறார். அதன் பிறகு ,காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். 

இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. பிறகு, அவ் ஆலையத்தில், சாமி தரிசனம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, சில மணி நேரம் கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளார். 

பிறகு கோயிலில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சிகளையும், பிரதமர் பார்வையிட்ட பிறகு ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து பகல் 2:30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Popular posts
பதவி! அதிகாரத்திற்கு, போட்டி போடும் அரசியல் கட்சிகள்! மக்களின் சேவைக்கு ஏன் போட்டி போடுவதில்லை? -மக்கள் அதிகாரம் .
படம்
அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.
படம்
அருள்வெளி சித்தர் பாபாவின் 32 ஆம் ஆண்டு மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்றது
படம்
வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?
படம்