பதவி! அதிகாரத்திற்கு, போட்டி போடும் அரசியல் கட்சிகள்! மக்களின் சேவைக்கு ஏன் போட்டி போடுவதில்லை? -மக்கள் அதிகாரம் .

 

தமிழ்நாட்டில் பதவி அதிகாரத்திற்கு போட்டி போடும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்ன தேவை என்று செய்ய எந்த அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சியினரும் போட்டி போடுவதில்லை. எல்லோரும் நான் வந்தால் ,இதை செய்வேன் அதை செய்வேன். இந்த பேச்சுக்களை தான் கொடுக்கிறார்களே ஒழிய, பதவி இல்லாமல் நீங்கள் செய்வது என்ன? ,செய்தது என்ன?

நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டி ,அதை தடுக்க முடியும். இங்கே எதிர் கட்சிகள் மீடியாவில் பேசிவிட்டு போவது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய எதிர்க்கட்சி ,நாளைய ஆளுங்கட்சியாகக் கூட வரட்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, அதனுடைய பணியை எடப்பாடி பழனிசாமி சரிவர செய்யவில்லை.

எதிர்க்கட்சியின் ஒவ்வொரு கேள்விக்கும் ,ஆளும் கட்சி பதில் சொல்லிவிட்டு தான் ,அடுத்த நகர்வுக்கு செல்ல வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சியின் கூட்டணி அரசியல் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல கடமைப்பட்டவர். இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுகிறார்கள். அதை தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக 5 ஆண்டு காலம் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டது.மேலும்,

எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி திமுகவின் மணல் கொள்ளை, ஊழல், டாஸ்மாக் ஊழல், அமைச்சர்களின் ஊழல், இப்படி எந்த ஊழலையும் ,ஊழல் நிர்வாகத்தையும் கண்டித்து அரசியல் செய்யவில்லை. அது பற்றி எந்த ஒரு பெரிய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி நிறுவனங்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு செய்தியும் வெளியிடவில்லை. அவரைக் கேள்வியும் கேட்கவில்லை.

மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால், அதேபோல் ஊழலை செய்யவா? அல்லது ஊழல் நிர்வாகத்தை செய்ய வா? மக்கள் இவருக்கு அவர் பரவாயில்லை, அவருக்கு இவர் பரவாயில்லை ,இந்த பேச்சை நிறுத்துங்கள். இப்படி மக்கள் பேசுவதும், நினைப்பதும் தவறு. இந்த சோசியல் மீடியாக்களிலும், தொலைக்காட்சி மைக்கைகளிலும் இவ்வாறு பேசுவதே தவறு.

நீங்கள் சொன்னதை செய்யவில்லை. ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கவில்லை. மக்களுக்கான ஆட்சியை கொடுக்கவில்லை. இதுதான் மக்களின் முக்கிய கேள்வியாக மற்றும் பதிலாக இருக்க வேண்டும். மேலும், இன்றைய எதிர்க்கட்சிகள் ஒரே பதிலை கொடுத்து சமாளிப்பார்கள். அது என்னவென்றால்! நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தால்தான் செய்ய முடியும். எதிர்கட்சியாக இருந்தால் செய்ய முடியாது. அதிகாரம் எங்கள் கையில் இல்லை என்று சொல்லிவிட்டு போவது சுலபமான வேலை. ஆனால் நீங்கள் செய்ய வைக்கும் இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறீர்கள்.

நீங்கள் கேள்வி கேட்டால், ஸ்டாலின் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கு சரியான பதில் இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடலாம், கவர்னரிடம், ,ஜனாதிபதியிடம் முறையிடலாம். இப்படி பல வரைமுறைகள் உள்ளது. தேர்தலில் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் மற்றும் பகுதி நேர பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் காற்றில் கரைந்து போய் இருக்கிறது.


ஆனால், அது பற்றி என்ன ஆனது ?என்று கூட எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கவில்லை. அரசியல் தெரியாத மக்களை வைத்துக் கொண்டு, ஓட்டுக்கு ஆயிரம், ஐநூறு கொடுத்துக் கொண்டு கையெடுத்து கும்பிட்டு காலில் விழுவது, இவர்களுடைய அரசியலாகிவிட்டது. வலுவான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், ஸ்டாலின் தினறி ஓடி இருப்பார். இவர்கள் சட்டமன்றம் நடத்துகிறார்களா? இல்லை சட்டமன்றத்தில் பேச்சு போட்டி நடத்திக் கொண்டு இருக்கிறார்களா? அல்லது இந்த கார்ப்பரேட் ஊடகங்களில் நடத்துகின்ற விவாத மேடை என்று சொல்வார்களே ,அந்த மேடை நடத்துகிறார்களா?

நாட்டில் பதவி, அதிகாரத்திற்காக தான் இன்றைய அரசியல் கட்சிகள் போட்டி போடுகிறது. மக்களின் நலனில் அக்கறை காட்டி இருந்தால், எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தான், அவர் சட்டமன்றமே நடத்தி இருக்க முடியும். சட்டமன்றத்தில் இவர்களை வெளியேற்றினாலும், மக்களின் பிரச்சினைகளுக்காக கார்ப்பரேட் மைக்கைகளில் பேசி விட்டுப் போவது அரசியல் அல்ல ,அது ஏமாற்று வேலை. அந்த வேலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து வாக்களியுங்கள்.

இவர்களுக்கு தனி மெஜாரிட்டி வந்தால், இப்படித்தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தமிழ்நாட்டில் மெஜாரிட்டி என்பது எந்த அரசியல் கட்சிக்கும் இருக்கக் கூடாது. அப்போதுதான் இவர்கள் இஷ்டத்துக்கு கொள்ளையடிக்க முடியாது. இவர்கள் இஷ்டத்துக்கு அராஜகமான ஆட்சியை நடத்த முடியாது. இவர்களுடைய கட்சி ரவுடிகளை எல்லாம் நிர்வாகி என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

மக்களுக்கு சேவை செய்ய போட்டி போடாத இன்றைய கூட்டணி அரசியல் கட்சிகள் மைக்கைகளில் பேசி விட்டு, கருத்துக்களை சொல்லிவிட்டு, போவது எளிதான அரசியல் வேலை. அதாவது இவர்கள் மக்களுக்காக எந்த ஒரு செயலையும் செய்யாமலே, பதவி அதிகாரத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இந்த ஜாதி கட்சிகளான பாமக ,விடுதலை, சிறுத்தைகள் ,தேமுதிக, மதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மக்களுக்காக இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன ?செய்தது என்ன? ,அதிகாரம் ,இவர்கள் அனைவரும் பதவி, அதிகாரத்திற்கு போட்டி கொண்டிருப்பது மக்களுக்கு அரசியல் புரியவில்லையா?

மேலும், இவர்கள் சேவை என்பதை முக்கிய நோக்கமாக இருந்தால், ரவுடிசமும், ஊழலும் ஒருகாலும் இருக்காது. இப்படி சேவை செய்ய வருபவர்கள் ஏன்? பதவி அதிகாரத்திற்கு போட்டி போட வேண்டும்? தவிர,சேவை செய்ய வருபவர்கள் எதற்காக ஓட்டுக்கு பணத்தை கொடுக்க வேண்டும்? அன்று ஒரு நாளைக்கு பணத்தை கொடுத்து விட்டு, பிரியாணி, மது பாட்டல்கள், இலவசங்கள் அறிவிப்பு, இலவச பொருட்களை கொடுத்து , அரசியல் தெரியாத மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை ஏமாற்றும் வேலையா?ஓட்டுக்கு பணம் வாங்குகின்ற மக்கள் ஒரு நாளாவது இதைப் பற்றி சிந்தித்து இருப்பார்களா?மேலும்,

ஒருவன் நமக்காக சேவை செய்ய வருபவன், நமக்கு பணத்தையும் கொடுத்து, சேவையும் செய்வானா? என்பதை துளி கூட இவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை, .சிந்திக்கவில்லை.தவிர, இந்த அரசியல் கட்சிகளின் நோக்கமெல்லாம் பதவி, அதிகாரம் கிடைத்தவுடன் எத்தனை கோடி சம்பாதிக்கலாம்? இப்படி தான் எண்ணம் வருகிறதே ஒழிய ,இவர்களுக்கு மக்களைப் பற்றியே மறந்து விடுகிறார்கள். இவர்களுடைய மனசாட்சி எல்லாம் அடகு வைத்து விட்டு, கொள்ளையடிப்பதில் போட்டி போடுகிறார்கள்.

அந்த கொள்ளையும், ஊழலையும் மறைப்பதற்கு கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் வாங்குகின்ற சலுகை, விளம்பரங்கள் அவர்களின் சுயநலத்திற்காக,அவர்களை பயன்படுத்திக் கொண்டு ,மக்களை ஏமாற்றும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய ஊழலையும், ஊழல் நிர்வாகத்தையும் மறைக்கும் வெளியிடுவார்கள்.மேலும்,

மக்கள் வாக்களிக்கும் போது ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளரும் என்ன செய்திருக்கிறார்? அவருடைய மக்கள் பணி என்ன? இவர் நேர்மையானவரா? இவர் அராஜகம் ஆனவரா? இவர் தொகுதி மக்களை சந்திப்பாரா? தொகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்பாரா? இது எல்லாவற்றையும் உங்களுக்குள் நீங்கள் கேள்வி கேட்டு, ஒவ்வொருவருக்கும் உங்கள் வாக்கு இருக்க வேண்டும், என்பது தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மூலம் மக்களுக்காக கொடுக்கப்படும் அரசியல் விழிப்புணர்வு கருத்துக்கள்.மேலும்,

ஒவ்வொரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளும், ஏதோ ஒரு ஊழல் பிரச்சனைகளில் சிக்கி இருப்பவர்கள். அல்லது தவறான முறையில் பணத்தை சம்பாதித்து அந்த கருப்பு பணத்தை வைத்து, பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால், உண்மையை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது. அதனால் தான் , இந்த சமூகநலன் பத்திரிகைகளுக்கு இவர்கள் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதில்லை. இவர்கள் வீட்டில் இருந்து இதை கொடுக்கப் போவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்களை, ஏன் தொடர்ந்து கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது? இவர்களுக்கு வேண்டுமானால் சட்டத்தை எப்படியெல்லாம் வளைத்துக் கொண்டு, வேண்டிய சட்டம் கொண்டு வந்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?அதுபோல் இதற்கு கொண்டு வர முடியாதா?மேலும்,

ஐந்து வருடம் எம்பி ,எம்எல்ஏ பதவி இருந்து விட்டால், உங்களுக்கு பென்ஷன் தேவைப்படுகிறது. உங்களுக்கு சம்பள உயர்வு தேவைப்படுகிறது. ஆனால், 30, 40 வருடம் அரசு ஊழியர்களாக வேலை செய்பவர்களுக்கு நீங்கள் பென்ஷன் கொடுக்கக் கூடாது.

ஏனென்றால், நீங்கள் சம்பளத்தை மட்டுமே வாங்கி மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இனியாவது மக்கள் பதவி ,அதிகாரத்திற்கு போட்டி போடக்கூடிய அரசியல் கட்சிகள்! மக்கள் நலனை பற்றி சிந்திப்பார்களா?

மேலும், நேர்மையான ஆட்சியும்,ஊழளற்ற ஆட்சியும், நடத்தக் கூடியவர்களால் மட்டுமே மக்கள் பணியை செய்ய முடியும். மற்றவர்களால் செய்ய முடியாது. வாயிலே கதையை பேசி விட்டு, கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்கைகுகளில் ,மக்களுக்காக ஆட்சி! என்பதை வசனம் பேசி விட்டு, நடித்து விட்டு போவார்கள்.தவிர ,வெத்து விளம்பர அரசியல் செய்பவர்களால், ஊழலற்ற ஆட்சியும் , ஊழற்ற நிர்வாகத்தையும் , மக்களுக்கான ஆட்சியும், கொடுக்க முடியாது.

இதையெல்லாம் மக்கள் எப்போது சிந்திக்கிறார்களோ! அப்போதுதான் உங்களுக்கான அதாவது மக்களுக்கான ஆட்சி! என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

Popular posts
அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.
படம்
அருள்வெளி சித்தர் பாபாவின் 32 ஆம் ஆண்டு மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்றது
படம்
நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.
படம்
வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?
படம்