அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.

 




தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்து விட்டால்! அரசியல் கட்சிகள் புது, புது திட்ட பெயர்களுடன் கிளம்புவது தமிழக வாக்காளர்களை ஏமாற்றும் வேலையா? மேலும்,

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,புது ,புது பெயர்களுடன் மக்களிடம் பிரச்சாரத்தை மேற் கொள்ள கிளம்பி விட்டார்கள். அதுமட்டுமல்ல,

மேடை பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் ,மாநாடுகள், கூட்டங்கள் என ஒவ்வொரு கட்சியினரும், இது ஒரு தொழிலாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,


தொழிலுக்கும், சமூக சேவைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், அரசியல் வியாபாரத்திற்கும், அரசியல் சேவைக்கும், வித்தியாசம் இருக்கிறது. இது அவசியம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் போனால், இந்த கார்ப்பரேட் பத்திரிகை ஊடகங்களும், அரசியல் வியாபாரிகளும் ,உங்களை நிச்சயம் பேசியே அரசியல் இதுதான் என்று ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். தவிர,இதை காட்டி, பத்திரிக்கையில் செய்தியாக போட்டு, பத்திரிக்கை தொலைக்காட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். இது நான்காவது தூணின் கடமையல்ல.மேலும்,

அரசியல் சுயநலமாகிவிட்டால், அரசியல் வியாபாரம் ஆகிவிட்டால், மக்களையும், சமூகத்தையும், இந்த தேசத்தையும் காப்பது நான்காவது தூணின் முக்கிய கடமை. ஆனால்,

அரசியல் வியாபாரத்திற்கும், வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளோடும், அரசியல் கட்சிகளோடும்,சேர்ந்து கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், மக்களை ஏமாற்றுவது நான்காவது தூணில் கடமை அல்ல. இதற்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசாங்கம் செலவு செய்து கொண்டிருப்பது,அதைவிட ஒரு மோசடி வேலை எதுவும் இல்லை.

எனவே, மக்கள் அதிகாரம் எந்த அளவுக்கு உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ, அந்த அளவுக்கு இந்த உண்மைகளை கொண்டு சேர்க்கிறது. அதை புரிந்துக் கொண்டு, இந்த ஏமாற்று அரசியலில் இருந்து காப்பாற்றிக் கொள்வது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அது வாழ வைக்கும். ஆனால் ,அலட்சியப்படுத்தினால், இன்று வாழ்க்கையோடு மக்கள் எவ்வளவு போராட்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை செய்திகளாக போட்டு, படம் பிடித்து காட்டுவது, பெரிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் என்று மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.

ஒரு இடத்தில் அதாவது போகும் பாதையில் பெரிய பள்ளம் இருக்கிறது. அங்கே முள்ளும், கற்களும், புதர்களாக இருக்கிறது. அந்தப் பக்கம் போகாமல், வேறு வழியில் செல்லுங்கள் என்று சொல்வது தான், எங்களுடைய கடமை. ஆனால், சென்று அந்தப் பள்ளத்தில் விழுந்து ஐயோ ,அம்மா என்று கத்தினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், மக்கள் அரசியலை பற்றி சிந்திக்க வேண்டிய காலமிது. அரசியல் சுயநலமாகிவிட்டால், அரசியல் வியாபாரம் ஆகிவிட்டால் ,அங்கே பொது நலம் இருக்காது. எத்தனை கோடி நான் சம்பாதிக்கலாம் ?எத்தனை ஊரை நான் வாங்கலாம்? என்ற கனவுகளோடு, அதுதான் லட்சியம் என்று இன்றைய அரசியல்வாதிகள் புறப்பட்டு இருக்கிறார்கள்.

அதைப் புரிந்து எது சமூக நோக்கம்? எது மக்களுக்கான அரசியல்? எது மக்கள் சேவைக்கான அரசியல் ?என்பதை தேர்வு செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, ஸ்டாலின் ஆட்சியில் இந்த ஐந்தாண்டுகளில் செய்தது என்ன? அதே போல் பிஜேபி இந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு செய்தது என்ன? இது எல்லாவற்றையும் மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது. ஆனால், இதையெல்லாம் சிந்திக்காமல் தொலைக்காட்சி மைக்கை நீட்டிக் கொண்டு, எடப்பாடி தனித்து ஆட்சி சொன்னாரே, இல்லை இன்னொருத்தர் அவர் தவறாக புரிந்து கொண்டார் .கூட்டணி ஆட்சி தான் என்று சொல்வார். நீ கூட்டணி ஆட்சி வைத்தால் என்ன? வைக்கா போனால் என்ன? இதை யார் கேட்டது? இதுதான் இந்த கார்ப்பரேட் வியாபார பத்திரிகை, தொலைக்காட்சிகளின் அரசியல்.

எனவே,மக்கள் அதைப் புறக்கணித்து, உங்களுக்கான சேவையில் ,எந்த அரசியல் கட்சி ஈடுபடுகிறது? என்பதை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு எந்தெந்த பத்திரிகைகள் உண்மையை சொல்கிறது? எந்தெந்த தொலைக்காட்சிகள் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது? இதைத் தேர்வு செய்யுங்கள்.

ஆனால், இன்று அரசியல்வாதிகளோடு சேர்ந்து ஏமாற்றுவதற்கு, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும், உங்களுடன் ஸ்டாலின் என்று இவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ஆட்சி அதிகாரம் எல்லாம் இவர்களில் தான் இருக்கிறது. இருப்பினும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் மக்களை சந்திக்க கிளம்புகிறார். அன்புமணி தமிழகத்தின் உரிமைகளை மீட்போம் என்று புது திட்டத்தை பெயர் சூட்டி கிளம்பி இருக்கிறார். இதுவரையில் ஏன் ? இவர் தமிழகத்தின் உரிமையை மீட்கவில்லை? இப்போது தான் மீட்க போகிறாரா? ஏனென்றால், வன்னியர் சமுதாயம் தான் ஒரு ஏமாந்த சமுதாயம். வேறு சமுதாயத்திடம் இப்படியெல்லாம் சொல்லி பிழைப்பு நடத்த முடியாது. அடுத்தது எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம் என்கிறார் இதுவரை ஏன் மீட்கவில்லை? மேலும்,

அன்புமணி தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்கிறார். ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்கிறார். இப்படி ஆளாளுக்கு ஒரு பெயரை ,புதுமையாக வைத்துக் கொண்டு ,அரசியல் செய்ய கட்சியினரை கூட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.

இவர்களுடன் சேர்ந்து கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளும், இவர்களுடைய பேச்சு உண்மையா? பொய்யா? என்று கூட தெரியாமல் இவர்கள் செய்திகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அரசியல் புரிந்தவர்களுக்கு புரியும். அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால், அப்பாவி மக்களுக்கு தெரியுமா? அங்குதான் நான்காவது தூண் அவர்களை காப்பாற்ற வேண்டும். அங்கு தான் இங்கு சமூகத்தின் நலனை நான்காவது தூண் காப்பாற்ற வேண்டும்.அப்படி எத்தனை பத்திரிகை, தொலைக்காட்சிகள், தமிழ்நாட்டில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது? என்பதை பொதுமக்கள் தான் சிந்திக்க வேண்டும் .

அரசியல்! தெரியாத மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள். அந்த ஏமாற்றத்தில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் முக்கிய நோக்கம். இது தான் நான்காவது தூணின் கடமை.

Popular posts
பதவி! அதிகாரத்திற்கு, போட்டி போடும் அரசியல் கட்சிகள்! மக்களின் சேவைக்கு ஏன் போட்டி போடுவதில்லை? -மக்கள் அதிகாரம் .
படம்
அருள்வெளி சித்தர் பாபாவின் 32 ஆம் ஆண்டு மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்றது
படம்
நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.
படம்
வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?
படம்