நாட்டில் முக்கியத்துறைகள் ஆன அரசியல்! ,நீதித்துறை!மற்றும் பத்திரிக்கை துறையில்!போலிகள் ஒழிக்கப்படாமல் தகுதியானவர்களுக்கு ,உழைக்கும் மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.

 


நாட்டில் நீதித்துறையும் , பத்திரிக்கை துறையும் ,இன்று போலிகளால் தத்தளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு துறையிலும் போலிகள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?

அவர்களால், பத்திரிக்கை துறைக்கு என்ன நன்மை? நீதித்துறையில் இருக்கக்கூடிய போலி வழக்கறிஞர்களால் என்ன நன்மை? என்ன தீமை? அதேபோல் பத்திரிக்கை துறை!

ஒருவன் படித்து சட்டம் பயின்று, அந்த சட்ட நுணுக்கத்தை வைத்து வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை வெற்றிக் கொள்பவன் தான் வழக்கறிஞர்.

ஆனால், அரசியல் கட்சி பின்புலத்தில், ஜாதி கட்சி பின்புலத்தில், நானும் சட்டம் பயின்றேன். நானும் வழக்கறிஞர் தான், இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஏனென்றால் சர்டிபிகேட் பேசும்.

ஆனால் ,உன்னுடைய வாத திறமையும், சட்ட நுணுக்கமும் தெரிந்திருந்தால் தான், வழக்கறிஞராக வழக்கில் வெற்றி கொள்ள முடியும். இது கடினமான வேலை தான்.

முடியாதவர்கள் அரசியல் கட்சிகளில் பதவி வாங்கிக்கொண்டு , அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்வதற்கு அரசியல் அதிகாரம் அதற்கு அரசியல்வாதிகளின் பின்னால் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர,கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு, ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலை பார்த்துக்கொண்டு, இப்படி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பார்த்தால் இவர்களும் தினமும் கோர்ட்டுக்கு செல்வார்கள். அங்கே சீனியர் வழக்கறிஞர் யாராவது ஒருவரை பிடித்துக் கொண்டு ,அவர்கள் சொல்லுகின்ற எடுபிடி வேலைகளை செய்து கொண்டு ,இப்படி பணம் சம்பாதிக்க கட்டப்பஞ்சாயத்தும் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையும் பார்ப்பவர்கள் ஆக தான் இருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள்தான் சங்கத்தையே கையில பிடித்துக் கொண்டு, நீதித்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அரசியல்வாதிகளுக்கு பின்புலமாக கொண்டிருக்கிற கூட்டம் இதுதான். மேலும் இப்படிப்பட்ட இந்தக் கூட்டம்தான் இப்போது கூட ஜி .ஆர். சுவாமிநாதன் நீதிபதியை விமர்சனத்திற்கு உள்ளாக்கி, பேசி இருக்கிறார்கள். அவர் வெளிப்படையாக கேட்டு விட்டார் ..என் மீது குற்றச்சாட்டு சுமத்துகிறீர்கள் .

அந்த குற்றச்சாட்டை நிரூபி அதற்கு தகுதி இல்லாத இந்த வாஞ்சிநாதன், அதற்கு ஒத்து ஓதக்கூடிய முன்னாள் நீதிபதிகள் ,மிகப்பெரிய கேவலம் .இவர்கள் நீதிபதிகளாக இருந்து எப்படி தீர்ப்பு சொல்லி இருப்பார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.மேலும்,

எங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளர்களுக்கே தெரிகிறது .ஒருவருடைய தீர்ப்பு எப்படி இருக்கிறது? என்பது நாங்கள் ஆய்வு செய்யாமல் இல்லை. தகுதியான பத்திரிகையாளர்கள் நிச்சயம் நீதிபதியின் தீர்ப்பை ஆய்வு செய்து பார்ப்பார்கள். இவர் நடுநிலையோடு தீர்ப்பு வழங்கி இருக்கிறாரா? இல்லை அரசியல் கட்சியினருக்கு சார்பாக வழங்க இருக்கிறாரா?

இப்படி பல கேள்விகள் பத்திரிகையாளர்களுக்கும், மக்களுக்கும் எழத்தான் செய்கிறது. நீதிபதியின் தீர்ப்பின் மீது விமர்சனம் வரலாம் .ஆனால், நிரூபிக்கப்பட வேண்டுமே ,அது முக்கியமான கருத்தல்லவா? யார்? மீது யார் ,வேண்டுமானாலும் ,எந்த குற்றச்சாட்டானாலும் ,சொல்லிவிட்டு போகலாம் .ஆனால் அந்த குற்றச்சாட்டை நிருபிக்கணும்.

அதைத்தான் நீதிபதி ஜி .ஆர் .சுவாமிநாதன் ஓபன் டாக் ஆகவே கேட்டுள்ளார். சட்டம் படித்தவர்கள் அரசியலுக்கு போக மாட்டார்கள் .ஏன் அரசியல்வாதி பின்னால் கூட நிற்க மாட்டார்கள். காரணம் என்னவென்றால், அவர்களுக்கு என்று ஒரு தனி பிரிஸ்டிஜ் கௌரவம் இருக்கிறது. அதை ஒரு படிக்காத அரசியல் கட்சியினரிடம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

ஆனால், இன்று சட்டத்தை சரிவர படிக்காமல் ,இவர்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .அங்கே வாதாட வக்கு இருக்காது. ஒரு வழக்கை வெற்றிக்கொள்ள தகுதி இருக்காது. ஆனால் பேச சொன்னால் மேடையிலே எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல் பேசி விட்டு போவார்கள். அதற்கு லா (.Law) தேவையில்லை.படிக்காதவனும் மேடை ஏறி அப்படி தான் பேசிக் கொண்டிருக்கிறான்.

இந்த கதையெல்லாம் யார் கிட்ட சொல்லனும்? என்றால் எதுவுமே தெரியாமல் , அரைகுறையாக இருப்பார்கள் .அவர்களிடம் இவர்கள் கதை ஓடும் .விஷயம் தெரிஞ்சவர்களிடம் இவர்கள் கதை ஓடாது. அரசியல் பின்புலத்தில்தான் இன்று போலிகள் ஊடுருவி இருக்கிறார்கள் .

அது நீதித்துறையில் மட்டுமல்ல ,பத்திரிக்கை துறையிலும் அதே நிலைமை தான். இந்த பத்திரிக்கை துறையில் அரசியல் கட்சியின் பின்புலத்தில் இயங்கக்கூடிய பத்திரிகையை நிருபர்களுக்கு என்ன தெரியும் ?கட்சி நிர்வாகி போல தான் அவரும் செய்தி எழுதிக் கொண்டிருப்பார். அந்த பத்திரிக்கை செய்தி ,அந்த கட்சியினருக்கு ஒத்து போகும்.

அது எல்லா தரப்பு மக்களுக்கும், அது ஒத்து போகாது. ஆனால் ,இவர்கள் அனுபவிக்க கூடிய இந்த பத்திரிகை சலுகை ,விளம்பரங்கள் தகுதியான பத்திரிகைகளுக்கு கிடைக்க விடாமல், அரசியல் தலையீடு அதில் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

தகுதியின் அடிப்படையில் கொடுக்க வேண்டிய சலுகை ,விளம்பரங்கள் இன்று அரசியல் கட்சியின் பின்புலத்தில் இருக்கக்கூடிய பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் அதிகார அரசியல் மையம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.மேலும்,

இன்றய அரசியல் !தகுதியான பத்திரிகைகளுக்கு ஒரு முட்டுக்கட்டை .அது மட்டுமல்ல தகுதியான பத்திரிகையாளர்களுக்கம், ஒரு முட்டு கட்டை. இன்று, தமிழ் தினசரி பேப்பர்,இங்கிலீஷ் தினசரி பேப்பர் ,தொலைக்காட்சி ,இப்படி பெரிய நிறுவனங்களாக இருக்கலாம்.ஆனால்,அதில் வேலை செய்யக்கூடிய பணியாளர்களின் தகுதி என்ன ?பெரிய தகுதி இருக்கிறதா?

அது 100 கோடி, 200 கோடி வியாபாரத்தில் இயங்கக்கூடிய பத்திரிகைகள் .அந்த பண முதலீடு, சொத்து, ஆபீஸ், நிர்வாகம், வண்டி வாகனம் ,கேமராக்கள் ,இது அத்தனையும் இந்த செய்தி நிறுவனங்களில் பணத்தால் பெறக்கூடியது.

ஆனால், ஒருவருடைய தகுதி ,திறமை பணத்தால் வாங்க முடியாது. இது எந்தத் துறையாக இருந்தாலும் ,அதாவது நீதித்துறையாக இருக்கட்டும், மற்ற பல்வேறு துறைகளாக இருக்கட்டும் ,தகுதி பணத்தால் வாங்க முடியாது.

ஆனால், அரசியல் பின்புலம் இருந்தால், இதையெல்லாம் வாங்கி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்

அரசியல் அதிகாரத்திலே! தகுதி இல்லாதவர்கள் கூட அரசியல் அதிகாரப் பின்புலத்தில், அவர்களும் (நிருபர் )அரசு அடையாள அட்டை வைத்துக் கொள்வார்கள் .அவர்கள் பத்திரிக்கை நடத்தினால், அந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கிடைக்கும் .எல்லாமே இங்கு சட்டத்துக்கு புறம்பானது தான். கேட்டால் நாங்கள் சட்டப்படி எல்லாம் செய்கிறோம் என்பார்கள்.

உதாரணத்திற்கு தமிழக அரசின் செய்தித் துறையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செய்து துறை அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். நீங்கள் உங்கள் பத்திரிக்கைக்கு பிரஸ் பாஸ் வாங்க வேண்டும் என்றால் ,உங்களுடைய பத்திரிக்கை சென்னையில் அச்சிட்டு வெளியிட வேண்டும் . அதாவது ,சென்னை விலாசத்தில் உங்களுடைய அலுவலகம் இருக்க வேண்டும் .அதனால், நீங்கள் RNI ஐ இங்கு மாற்றுங்கள் என்றார்கள்.

இதை சில பத்திரிகை நடத்தக்கூடியவர்களும் ,இதைப்பற்றி பேசும்போது ,அவர்களும் இதையே தான் சொன்னார்கள்.. நான் அப்போதே சொன்னேன் .பத்திரிக்கை எங்கே அச்சடித்து ,எங்கே வந்தால் என்ன? செய்தி முக்கியத்துவமாக இருக்க வேண்டும். அது தரமானதாக இருக்க வேண்டும். உண்மையானதாக இருக்க வேண்டும் .தகுதியானதாக இருக்க வேண்டும். இதை தான் செய்தி துறை பார்க்க வேண்டுமே ஒழிய நான் எங்கே ஆட்சி அடிக்கிறேன்? எந்த இடத்தில் அலுவலகம் வைத்திருக்கிறேன் ?அது தேவையில்லை .

என்னுடைய தகுதி! என்னுடைய பத்திரிகைகள் இருக்கிறது. என்னுடைய திறமை என்னுடைய பத்திரிகையில் இருக்கிறது .நீ அதை பார்த்து என்ன ?என்று தெரிந்து கொள் .அதை விட்டு விட்டு, இங்கே அடித்தால் தான் நாங்கள் இப்படி செய்வோம் .அப்படி செய்வோம் என்றெல்லாம் பேசினார்கள் .

இது பற்றி மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரிகளிடம் பேசியபோது ,அப்படி ஒரு சட்டமே இல்லையே ,அப்படி ஒரு மத்திய அரசின் ரூலே இல்லையே, இவர்கள் எப்படி இது போல் கேட்கலாம்? என்று சொன்ன பிறகு மாற்றினார்கள் .இப்படி எல்லாம் நடந்திருக்கிறது .நமது தமிழக அரசின் செய்தித் துறையின் வரலாற்றில்!

இன்று கூட நான் தினமணி, தினகரன், தினத்தந்தி, நீ எந்த தந்தியாக இருந்தாலும் ,உன்னுடைய பத்திரிகையின் செய்தி, தரம் ,என்ன ? மக்களுக்கு அதனால் என்ன பயன்?என்பதுதான் பேச வேண்டுமே ஒழிய, பேரில் என்ன இருக்குது? ராமசாமி, குப்புசாமி ,கோவிந்தசாமி எல்லா சாமியும் ஒரே சாமி தான். எங்கடா ஒளிந்து இருக்கிறார்கள் என்றால் ?இவர்கள் அனைவரும் அரசியல் பின்புலத்தில் ஒளிந்து இருக்கிறார்கள்.

இன்று யார்? யாருக்கு அரசியல் கட்சிகள் அதிகம் தேவைப்படுகிறது? என்றால் ஊர் தாலி அறுக்கிறவன்,சுயநல மிக்கவர்கள் , அரசியல் வியாபாரிகள், பிராடுகள், கிரிமினல்கள், பொதுநலமில்லாதவர்கள், பதவிக்கு அலைந்து கொண்டிருப்பவர்கள், இவர்களுக்கு தான் அரசியல் கட்சிகள் தேவைப்படுகிறது. இவன்தான் போய் கட்சி தலைவர்கள் கால்ல விழுவார்கள்.இப்படி ஒவ்வொரு கட்சியிலும் ,இந்த தகுதியற்ற கூட்டம் ,அரசியலில் கொடி கட்டுவது, கோஷம் போடுவது ,ரவுடி தனம் பண்ணுவது ,வீரவசனம் பேசுவது ,இது எல்லாம் பெரிய அரசியல்வாதி என்ற நினைப்பில் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

இது தெரியாத இந்த கார்ப்பரேட் பத்திரிகை சோசியல் மீடியாக்கள் இவர்களை அரசியல்வாதியாக ஆக்கிவிட்டார்கள். இந்த போலி அரசியல்வாதிகளால் மக்களுக்கு எந்த நன்மையும் எந்த காலத்திலும் கிடைக்காது அவர்கள் மட்டுமே கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வந்தவர்கள். மேலும், இப்படிப்பட்டவர்களுக்கு அரசியல் தெரியாத மக்கள் பாடம் புகட்ட மாட்டார்கள் . ஆனால்,

இவர்களுக்கெல்லாம் சரியான செருப்படி இளைய தலைமுறைகள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எல்லாரும் கட்சி லேபிளில் அதாவது அரசியல் கட்சி !,அது எந்த ஒரு கட்சியாக இருக்கட்டும் ,மக்களுக்கு துளிகூட சேவை செய்யக்கூடிய எண்ணமும், பொதுநலமும் இல்லாத இந்த போலி அரசியல்வாதிகளையும் எப்படி அரசியல் கட்சிகளில் தொண்டன் என்று இந்த கார்ப்பரேட் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது?

தவிர,அவர்களுக்கெல்லாம் அந்த கட்சிகளில் எப்படி பொறுப்புக்களை கொடுக்கிறார்கள்?மேலும், இந்தப் போலிகளை எல்லாம் நாட்டில் அரசியல்வாதி என்று பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அரசியல் தெரியாதவர்கள் இவர்களை அரசியல்வாதி என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இன்று பத்திரிக்கை துறையில் போலிகளால், பத்திரிகை துறையே சுயநலமாக இருந்து வருகிறது.

தகுதியற்றவர்கள் எல்லாம் நிருபர்கள் ஆக பேஸ்புக்கில் வாட்ஸ் அப்பில் செய்தி போட்டுக் கண்டு அது ஒரு பத்திரிகை பெயரில் RNI வாங்கிக் கொண்டு, அதுவும் பத்திரிகை என்று கணக்கு காட்டி கண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, பத்திரிகைகளே ஒரு லட்சம் இருக்காது . ஆனால்,தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சங்கங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி என்றால், பத்திரிகை உலகில் எவ்வளவு போலிகள் இருக்கிறார்கள்? இதையெல்லாம் எப்போது மத்திய மாநில அரசின் செய்தித்துறை ஒழிக்க போகிறது? எல்லாம் அரசியல் பின்புலத்தில் இந்த போலிகள் ஒளிந்து கொண்டிருக்கிறார்களா?

மேலும், அதேபோல் அரசியலில் ஒளிந்து கொண்டுள்ள போலிகள் தொண்டனுக்கு அர்த்தம் தெரியுமா? யாருக்கு இவண் தொண்டன் ?இவன் கட்சிக்கு வேலைக்காரன் ஆக இருப்பதால் தொண்டனா? இல்லை மக்களுக்கு சேவை செய்வதில் இவன் தொண்டனா? எதிலே இவன் தொண்டன் ? மக்கள் இவர்களுடைய கார்களையும், இவர்களுடைய கரை வேஷ்டி கட்டி கூட்டம் காட்டுவதிலும் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கு செய்தது என்ன? அந்த பகுதியில் செய்தது என்ன ?இதுதான் உண்மையான அரசியல் கட்சி தொண்டன் உடைய சேவை. ஆனால் போலிகள் எந்த அளவுக்கு நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் ?என்பதை சிந்தியுங்கள். மேலும்,

இவர்களுக்கெல்லாம் 2026 தேர்தல் நிச்சயம் மக்கள் பாடம் புகட்டுங்கள். போலிகளை ஒழிக்காமல் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதனால் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்கள், தகுதியான பத்திரிகையாளர்கள், தகுதியான வழக்கறிஞர்கள், இவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசர் கவாய் சொல்வது போல், மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால், உரிமைகள் கொடுத்து பயனில்லை.

இது முக்கியமான மக்களுக்கான உண்மையான கருத்து. அதனால் இதைப் படித்து விழித்துக் கொள்ளுங்கள். சமூகத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளாக இன்றைய அரசியல் போலிகள் இருப்பதால் அவர்களை அடையாளம் காணுங்கள். அதேபோல் பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய போலிகளை அடையாளம் காணுங்கள். நீதித்துறையில் இருக்கக்கூடிய போலிகளை அடையாளம் காணுங்கள். நீங்கள் அதையெல்லாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால்! நிச்சயம் உங்களுடைய முன்னேற்றம் ,வருங்கால இளைய தலைமுறைகளின் முன்னேற்றம் ,மிகப்பெரிய கேள்விக்குறி!

Popular posts
பதவி! அதிகாரத்திற்கு, போட்டி போடும் அரசியல் கட்சிகள்! மக்களின் சேவைக்கு ஏன் போட்டி போடுவதில்லை? -மக்கள் அதிகாரம் .
படம்
அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.
படம்
அருள்வெளி சித்தர் பாபாவின் 32 ஆம் ஆண்டு மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்றது
படம்
நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.
படம்
வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?
படம்