நாட்டின் கடை கோடி மக்களின் நம்பிக்கை நீதித்துறை . அந்த நீதித்துறையிலே அரசியல் தலையீடு இருக்கும்போது, நீதித்துறையின் விசாரணைகள் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
இன்று நாட்டில் எல்லாத் துறைகளுமே ஆட்டம் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் முக்கியமாக அரசியல். மாநில அரசு ஒருவிதமான செயல்பாடு ,மத்திய அரசு ஒரு விதமான செயல்பாடு, பொது நலத்துடன் இரண்டும் ஒருமித்து செயல்படும் அரசியல் மக்களுக்கு இல்லை.மேலும்,

அரசியல் சுயநலமாகவும், வியாபாரமாகவும், ஆகிவிட்டதால், பல்வேறு துறைகள் தமிழ் நாட்டில் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? அரசியலுக்கு அடிப்படை தகுதி இல்லாதவர்கள் ,எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள். அரசியலுக்கு வந்தது மட்டுமல்ல, பதவிக்கும் வந்து விட்டார்கள்.
தவிர, பொதுமக்களில் 60 % மக்களுக்கு அரசியல் தெரியாது. இவர்களுக்கு அரசியல் என்பது கூட்டம் கூட்டி ,கொடியைக் கட்டி, உடம்பைக் காட்டி, கோஷம் போட்டு, இவரு தலைவான்னு கத்திட்டார்னா ,அதை டிவில போட்டு ,சோசியல் மீடியாவில் போட்டு காட்டிட்டு, பார்த்துட்டு போக வேண்டியது தான்,அதுதான் அரசியல் என்று கார்ப்பரேட் ஊடகங்கள் எழுதிக் கொண்டு ,காட்டிக் கொண்டு, ஏமாற்று அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் .இதன் விளைவு, இன்று தமிழ்நாட்டின் அரசியலை நாசமாக்கி விட்டார்கள்.

அதுவும் போதாது என்று, இன்றைய சோசியல் மீடியாக்கள் ,whatsappகள், ஆளுக்கு ஒரு கருத்தை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அரசியல். இவையெல்லாம் இன்று நாட்டின் அரசியல் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது. ஏனென்றால் அதிகாரம், ஆட்சி இதற்கெல்லாம் துணை போகிறது. இதையெல்லாம் மாற்றம் செய்யாமல் உழைக்கும் மக்கள் முன்னேற்றம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும், இவையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பொதுமக்கள் சோசியல் மீடியாக்கள், கார்ப்பரேட் மீடியாக்கள், இதுதான் பெரிய பத்திரிக்கை நிறுவனங்கள், என்று நினைத்துக் கொண்டது மிகப்பெரிய தவறு.
இவை அத்தனையுமே அரசியல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல் செய்தித்துறை அரசியல் பின்புலத்தில் இயங்குகிறது .பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு இருப்பது சமூகத்திற்கு எதிரான ஒன்று. ஏனென்றால், எந்த ஒரு செய்தியும், நடுநிலையோடு போடக்கூடிய பத்திரிகைகள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கிறது .
அதனால், பத்திரிக்கை துறையும் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அது மட்டுமல்ல ,இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ஆர். கவாய் நீதிமன்ற விசாரணைகளை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இங்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் வழக்கறிஞர்கள் ஏஜென்ட்களாக நீதித்துறையில் இருப்பது தான் மிகப்பெரிய அரசியல் தலையீடு. இது நீதித்துறையில் ஒழிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒரு வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அறிவிக்கப்பட்ட போது, அதற்கு எத்தனை பேர் அறிக்கை விடுகிறார்கள் ஒரு பக்கம் ஓய் பெற்ற நீதிபதிகள், இன்னொரு பக்கம் திருமாவளவன், முத்தரசன், இது என்ன நீதிமன்றமா? இல்லை அரசியல் கட்சியா? நீதித்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால், இவர்களெல்லாம் அறிக்கை விட முடியாது. ஜி ஆர் சாமிநாதன் மீது அந்த வழக்கறிஞர் பி.சி.ஆர். இல் புகார் கொடுக்கவில்லை.மேலும்,தமிழ்நாட்டில் நீதிபதி ஜி .ஆர் .சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு புகார் அனுப்பி உள்ளார். ஜி .ஆர். சுவாமிநாதன் அவருடைய தீர்ப்பு,நியாயமான தீர்ப்பு நடுநிலையாக தான் இருக்கும்.

இது எப்படி இதை சொல்கிறேன் என்றால், சமீபத்தில் சில மாதஙகளுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி மீது கொடுக்கப்பட்ட தீர்ப்பு அதற்கு சான்று. அவருக்கு எவ்வளவோ அரசியல் பிரஷர் அந்த வழக்கில் இருந்தது. அதையும் மீறி அவர் நடை நிலையோடு தீர்ப்பு வழங்கினார். அவர் சட்டப்படி தீர்ப்பு வழங்கினார். பிறகு உச்ச நீதிமன்றம் சென்று அதற்கு சரி செய்து விட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நீதிபதி மீது ஒரு விமர்சனத்தை வைக்கிறார்கள். அவர் மீது ஜாதி சாயம் பூசுகிறார்கள். இது தவறு. அப்படிப் பார்த்தால் எல்லா நீதிபதியும் ஏதோ ஒரு ஜாதியில் தான் பிறந்திருப்பார்கள். அவர்கள் அனைவர் மீதும் ஜாதி முத்திரை குத்திவிட்டால், அவர்கள் எப்படி அந்த பணியை சரிவர செய்வார்கள்? அதனால், இது ஒரு தவறான செயல். நீதித்துறை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.