இதற்கு என்ன காரணம் ?என்னவென்றால் ,இந்த போலி வாக்காளர்களிடம் ஆதார் அட்டை ,குடும்ப அட்டை மற்ற அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு ,அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், உண்மையிலேயே நாட்டில் இந்த போலி வாக்காளர்களால், கலவரத்தை தூண்டக்கூடிய செயல்கள், அரங்கேற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் .மேலும்,
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் ,மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், இப்படி பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு ஆதரவாக பேசி வருவது, போராட்டம் நடத்துவது, இந்தியாவில் பூர்வ குடிகளாக இருப்பவர்களுக்கும் ,இந்த தேசத்திற்கும் எதிரான செயல். தற்போது பீகாரில் 50 லட்சத்திற்கு மேற்பட்ட போலி வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல். அதனால் தேர்தல் ஆணையம் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இந்த போலி வாக்காளர்களை நாட்டில் கண்டறிந்து அப்புறப்படுத்துவது இவர்களின் தலையாய கடமை.மேலும்,

அதாவது ஒருவர் ஒரு கிராமத்தில் அல்லது ஒரு நகரத்தில் வசித்து வருகிறார் என்றால் !அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு அவருடைய அப்பா, தாத்தா, யார் ?என்பது தெரியும் .ஆனால் ,இவர்களுக்கு சொந்த ஊர் எது? எங்கு பிறந்தார்? எங்கு வாழ்ந்தார்? என்ன வேலை செய்தார்? இவருடைய அப்பா தாத்தா என்ன வேலை செய்தார்கள்? போன்ற ஒவ்வொரு ஊரிலும் ,நகரிலும், ஒருவருக்கு விலாசம் இருக்கிறது .
ஆனால் இவர்களுடைய விலாசம் எங்கே? என்று கேட்கும் போது, ஆதார் அட்டையும், குடும்ப அட்டையும் ,வாக்காளர் அடையாள அட்டையும் ,காண்பிக்கிறார்கள். நீதிமன்றம் இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும்.
மேலும், இவர்கள் சொல்வது போல்,மொட்டையாக ஆதார் இருக்கிறது .குடும்ப அட்டை இருக்கிறது .என்று சொல்லக்கூடாது. அது எல்லாம் கம்ப்யூட்டர் கொடுத்தால், போட்டு கொடுத்து விடுவார்கள். எனவே இருக்கின்ற ஒவ்வொரு வாக்காளர்களையும் தேர்தல் ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்துவது நாட்டின் எதிர்கால நலனில் முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர, இப்படிப்பட்ட வாக்காளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தும் போது,

அவருடைய அப்பா தாத்தா என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள்? இது அத்தனையும் அந்த கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்கு தெரியும். ஆனால் இவர்கள் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. அதனால் ஒவ்வொரு வாக்காளர்களும் தேர்தல் ஆணையம் சந்தேகப்படும் படியான நபர்கள் அல்லது ஆவணங்கள் இருந்தால் அவர்களை அந்த பகுதியில் சென்று அவர்கள் எங்கிருந்தார்கள் ?எங்கு வசித்தார்கள்? அவர்களுடைய பூர்வீக ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவது மிகவும் அவசியமானது.
அதனால், தேர்தல் ஆணையம் ,ஒவ்வொரு வாக்காளர்களையும் மிக துல்லியமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஏனென்றால் இந்த போலி வாக்காளர்களால் பூர்வீக இந்திய குடிமக்களுக்கு இது ஒரு நெருக்கடியும், போராட்டத்தையும் ,கொடுக்கக் கூடிய இவர்கள் எதற்காக இந்த போலி வாக்காளர்களுக்காக எதிர்க்கட்சிகள் போராடுகிறார்கள்? இது தெரியாத எதிர்க்கட்சி தொலைக்காட்சி ஊடகங்களும் சரி பத்திரிகைகளும் சரி இதை நியாயப்படுத்துவது, எந்த விதத்தில் சரியானது? இந்திய குடிமக்கள் அனைவரும் இதை அவசியம் சிந்திக்க வேண்டும்.

ஏனென்றால் இவர்களையும் சேர்த்து நாம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற ஒரு குருட்டுத்தனமான அரசியலை எதிர்கட்சிகள் கையில் எடுத்திருக்கிறார்கள்.மேலும்,
இந்த நாட்டில் வாழக்கூடிய குடிமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள், வசதிகள் ,செய்தித் தராமலே இவர்கள் அரசியல் அதிகாரத்தை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் வந்தேறிகளை கொண்டு வந்து ,இந்த நாட்டு மக்களோடு சேர்த்து, அவர்களோடு இவர்கள் போராட்டம் செய்தால், நாட்டில் குழப்பத்தை, எதிர் வினைகளை உருவாக்க ,எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுகிறதா? மேலும்,

இப்போதே ரயிலில், பஸ்ஸில் ,இடமில்லாமல் நெருக்கடியில் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த மக்கள் ,இன்னும் மக்கள் தொகை அதிகரிக்கும் போது இதற்கான போராட்டம் அரசியல்வாதிகளுக்கு அல்ல, ஏழை, நடுத்தர மக்களுக்கு தான் இந்த போராட்டம் ,என்பதை உணர்ந்து எதிர்க்கட்சிகளின் இந்த திட்டத்திற்கு இந்திய மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராடுவது, இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் சுதந்திர உரிமை.