தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! - சி .கே. சரஸ்வதி .

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அரசியல்வாதிக்கும் பஞ்சமில்லை. ஆனால்! மக்களுக்கு சேவை செய்ய தான் பஞ்சம். அந்த சேவைக்கே பெருமை தேடித்தந்த எம்எல்ஏ சி .கே சரஸ்வதி.

நான் பத்திரிக்கை துறைக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்த்ததில்லை. இன்னும் நேரில் சென்று கூட நிருபர் கோபிநாத் அங்கிருந்து செய்தி அவரைப் பற்றி சில துளிகள் அனுப்பினார்.
அதிலிருந்து இவர் யார் என்று நான் புரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். விரைவில் அவர்களை சந்திப்பேன். மேலும் ,
அக்காலத்தில் அரசியல்வாதிகள் எப்படி இருந்தார்கள் ? என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் சி .கே .சரஸ்வதி. இப்படிப்பட்ட ஒரு தகுதியான நபரை பிஜேபி தலைமை !மாநில தலைவராக நியமித்திருக்க வேண்டும். ஒரு தகுதியான நபரை தகுதியான இடத்தில் வைப்பது தான் சரி. மேலும்,

நான் பல ஆண்டுகளாக கமலாலயம் சென்று வருபவன். எனக்கு மோடியின் அரசியலும் தெரியும் .அமித்ஷாவின் அரசியலும் தெரியும். அண்ணாமலை வந்த பிறகும் அவருடைய அரசியலும் தெரியும். நைனார் நாகேந்திரன் அரசியலும் தெரியும். பந்தா அரசியலும், பந்தா அரசியல் பேச்சும் ,மக்களுக்கு தேவை இல்லை.

எல்லோரும் சி.கே. சரஸ்வதியிடம் அரசியல் என்றால் என்ன? என்று கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் என்பது இப்போது உள்ள தலைவர்களுக்கு சால்வை போட்டு, அதை செல்போனில் படம் பிடித்து ,யூடியூபில் போட்டுக் கொள்வது, வாட்ஸ் அப்பில் போட்டுக் கொள்வது, இது அரசியல் அல்ல. மேலும் அரசியல் என்றால்!

பழைய காங்கிரஸ் கட்சியில் இருந்த அரசியல்வாதிகள் தான் ,தகுதியானவர்கள். அரசியலுக்கு வந்து, சொத்துக்களை சேர்த்துக் கொண்டவர்கள், சொந்த வேலைக்காக வந்தவர்கள், அவர்களல்ல அரசியல்வாதிகள். அவர்கள் அரசியலில் ஏமாற்று பேர்வழிகள்.
அரசியலுக்கு வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும்?அவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரசியலுக்கு வர வேண்டும் ?அவர்கள் தான் அரசியல்வாதி.மேலும்,
அப்படி வந்தவர்கள் ,வருபவர்கள் ,ஒவ்வொரு கட்சியிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? விரல் விட்டு , எண்ண முடியும் . கட்சிப் பதவிக்கும், ஆட்சிப் பதவிக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. மக்கள் இவர்களை புரியாமல் அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை பணத்திற்காக அரசியல்வாதிகள் என்று பத்திரிகை உலகம் எழுதிக் கொண்டிருக்கிறது. இது கூலிக்கு மாரடிக்கும் கூட்டம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தகுதியானவர்களை ,தகுதியான அரசியல்வாதிகளை, மக்களிடம் அடையாளம் காட்டுகிறது.மேலும்,

அந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகள், ஜிப்பாவிலே லெட்டர் பேட் ,ஸ்டாம்ப் சீல் வைத்திருப்பார்களாம் . மக்கள் யாராவது எம் எல் ஏ சாதாரணமாக நடந்து போகும்போது, சிபாரிசு கடிதம் கேட்டால், உடனே அப்பொழுதே எழுதி அங்கேயே சீல் போட்டு, கையெழுத்து போட்டுக் கொடுப்பார்களாம்.
அப்படியெல்லாம் சேவை செய்த எம்எல்ஏக்கள் எங்கே? இப்போது 500 கோடி, ஆயிரம் கோடி டார்கெட் வைத்து கொள்ளையடிக்கும் எம்எல்ஏக்கள் எங்கே? உண்மையிலே ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் சரியான ஒரு அரசியல்வாதியையும் ,சரியான அரசியல் பிரதிநிதியையும் ,தேர்வு செய்திருக்கிறார்கள் . அதனால்,
உண்மையிலே இந்தத் தொகுதி மக்களை பாராட்ட வேண்டும். இவ்வளவு எளிமையான ஒரு அரசியல்வாதி, மக்கள் எளிமையாக அணுகக்கூடிய ஒரு நபராக சி .கே. சரஸ்வதி எம்எல்ஏ இருக்கிறார்கள் என்றால்!

தமிழ்நாட்டில் இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைத் தான், நான் தேடிக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்டவர்கள் தான் அரசியலுக்கு தகுதியானவர்கள்.
சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், அரசியலுக்கு தகுதியானவர்கள் யார்? என்று கூட தலைப்பு கொடுத்து எழுதியிருந்தேன். அதற்கு ஒரு விடை மொடக்குறிச்சி தொகுதி எம் எல் ஏ .சி .கே. சரஸ்வதி .
பிஜேபியில் இப்படி ஒரு எம்எல்ஏ இதனால் வரை வெளியில் தெரியாமலே, மக்கள் சேவையில் ஈடுபட்டு இருந்தார்களா? இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரமும் இல்லை.
ஒரு சின்ன வேலை செய்தாலும், அதற்கு விளம்பரத்தை தேடி கொள்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய சமூக சேவை செய்து வரும் சி. கே .சரஸ்வதி எம்எல்ஏ ,மொடக்குறிச்சி தொகுதியில் இவர்களைப் பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மேலும்,

இவர் மொடக்குறிச்சி தொகுதி மட்டுமல்ல, ஈரோட்டிலும், இவருடைய பெயர் தெரியாமல் இருக்காது .ஏனென்றால் ,இந்த அளவிற்கு யாரும் இதுவரை மக்களுக்கு செய்ததில்லை என்று நினைக்கிறேன்.
மேலும், மக்களை சுரண்டி சாப்பிட்டு தான் இருக்கிறார்களே ஒழிய ,மக்களுக்கு சேவை செய்தவர்கள் ஒரு சதவீதம் கூட தேர மாட்டார்கள்.
அந்த வகையில் இவருடைய எளிமையான அரசியலுக்கும், சேவை மனப்பான்மைக்கும் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் ஆசிரியர் என்ற முறையில் இவர்களை மனமார வாழ்த்தி பாராட்டுகிறேன்.மேலும்,
ஒரு நல்ல அரசியல்வாதிக்கு !அதன் அடையாளமாக திகழக்கூடிய இவரை பாராட்டுவதில் தவறில்லை. ஒளிவு மறைவு இல்லாமல் ,மக்களிடம் பேசுகின்ற ஒரு எம்எல்ஏ இன்று நாட்டில் இல்லை. தவிர,மக்களுக்கு என்ன தேவை ?என்று கேட்டு செய்கின்ற ஒரு எம்எல்ஏ இல்லை.
மேலும்,இப்படி தொகுதி மக்களுக்காக தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி 'இப்படி ஒரு சேவை செய்திருப்பது தெய்வமே இவர்களை பாராட்டும். நான் ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால், இவர்களுடைய சேவையை தெய்வம்! இவர்களை பாராட்டும்.

ஏனென்றால், இவர்களுக்கு என்ன கடமை ?ஆண்டவன் கொடுத்தானோ, அந்த கடமையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதுதான் தெய்வத்தின் பாராட்டு. இது தவிர, இவர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? என்பதை சிலவற்றை சுருக்கமாக இங்கு மக்களுக்கு தெரிவிக்கிறேன். அது என்னவென்றால்!
இந்துக்களின் கோயில்கள் ,யாத்திரை கட்டிடங்கள் ,சீரமைப்பு செய்து தருதல்.
மூன்று வேலையும், இவர்களுடைய உணவகத்தில் ரூபாய் 10க்கு உணவளித்து வருவது.மேலும்,
ஆன்மீக பக்தி பயணத்தில், அறம் சேவா அறக்கட்டளை சார்பில் ,முக்கிய கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் முழு செலவையும், இந்த அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது. அது மட்டுமல்ல,
சுமார் 60 மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மையத்தை ஏற்படுத்தி ,அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
மேலும், எம்எல்ஏ சி .கே. சரஸ்வதி டாக்டர் என்பதால், ஏழைகளுக்கு இலவச மருத்துவ செலவுகள் ,இலவச மருத்துவ சிகிச்சை, இலவச ஆலோசனைகள், இதையெல்லாம் யார் செய்வார்கள்? மருத்துவம் ! வியாபாரம் ஆக்கப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மருத்துவ உலகில் ,மருத்துவத்தை இலவச சேவையாக செய்யக்கூடிய ஒரு டாக்டர் சி. கே . சரஸ்வதி . தவிர ,
இவருடைய எம்எல்ஏ நிதியில்,பயணிகள் நிழற்குடை அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல் ! பள்ளி கட்டிடங்களுக்கு நிதி உதவி அளித்தல் போன்ற பல பணிகள் எதிர்பார்ப்பு இன்றி செய்து வருபவர்.
இப்படிப்பட்டவரையும், திமுக எம்எல்ஏக்களையும் ,மந்திரிகளையும் ஒரு நிமிடம் மக்கள் நினைத்துப் பாருங்கள் யார் அரசியல்வாதி ?என்பது தெளிவாக புரியும். மேலும் இவர்களை மக்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்துக் கொள்ள வாக்களிக்கவில்லை.
இதை இன்றய அதிமுக எம்எல்ஏ க்களும், கடந்த கால மந்திரிகளும் ,தற்போதைய அரசியல் கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாம் சி.கே. சரஸ்வதி எம் எல் ஏ பார்த்து திருந்துவீர்களா? மேலும்,
இவர்,குரங்குகள் மற்றும் விலங்குகள் பராமரிப்பு செய்வது, சாலை பராமரிப்பு மற்றும் மரங்கள் நட்டு இயற்கையை பாதுகாப்பது , போன்ற இயற்கைக்கு செய்யக்கூடிய சேவைகளை பார்த்து , டாக்டர் சி .கே .சரஸ்வதியை பஞ்ச பூதங்களும் வாழ்த்தும்.

மேலும் , அவர்களுடைய சேவை நீண்டு கொண்டே இருக்கிறது. அதாவது இந்த காலத்தில் குறுகிய மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில், பரந்த சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தியாக உள்ளம் தான் சி.கே சரஸ்வதி. சேவை மட்டுமல்ல,
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படி எண்ணற்ற சேவைகள் செய்யக்கூடிய எம் எல் ஏ சி கே சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டு அல்லது புகாரோ இதுவரை வந்ததே இல்லை.
மேலும், தேர்தல் நேரத்தில் கையெடுத்து, வண்டியில் கும்பிட்டுக் கொண்டு போனவர்கள் ,ஜெயித்த பிறகு, அவர்களை தொகுதி பக்கம் மக்கள் பார்க்கவே முடியாது. ஆனால், பிஜேபியில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? என்று கேட்கும் அளவில் இவர்களுடைய செயல்பாடு இருக்கிறது.

மேலும், இதே பிஜேபி கட்சியில் கூட எனக்கு தலைமை வரை நன்றாக தெரியும் .எத்தனையோ நிர்வாகிகள் நான் போன் செய்தாலே எடுக்க மாட்டார்கள்.
இப்படி மக்கள் பணிக்கு வந்தவர்கள் மக்களை மதிக்கத் தெரியாதவர்களாக தான் இருக்கிறார்கள். மக்களையே மதிக்காமல், இவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்? இதை எல்லாம் ஒரு நாளாவது மக்கள் சிந்தித்ததுண்டா?
வெறும் ஆயிரம், 500 உங்கள் வாழ்க்கை தரத்தை ஒருகாலும் உயர்த்தாது என்பதை இந்த எம்எல்ஏ வை பார்த்து, ஒவ்வொரு அரசியல்வாதியும், தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் ,ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும்? தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும் ?
அதற்கெல்லாம் ஒரு உதாரணமாக தமிழ்நாட்டிலே இப்படி ஒரு பெண் எம்எல்ஏ சி .கே .சரஸ்வதி இருப்பது, தமிழ்நாட்டுக்கும், பிஜேபி கட்சிக்கும், தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்கும் ,மிகப் பெரிய பெருமை.
ஆசிரியர்.
மக்கள் அதிகாரம்