காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?

 

ஒவ்வொரு குடிமகனும் முக்கியமான சில சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும். அதிலும் காவல்துறை சட்டங்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். தற்போது பொது வெளியில் பொதுமக்களை காவல்துறையினர் அசிங்கமாக பேசுவது ,நடத்துவது, அடிப்பது, இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சட்டம் இருக்கிறது.

அதாவது ஒரு அரசு அதிகாரி பொதுவெளியில் ஒருவரை தரக்குறைவாக திட்டுவது, நடத்துவது, அடிப்பது இவை இருந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்தால், அவரே சிறை செல்ல நேரிடும்.

இந்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில்,BNS 296 ல் அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இது ஒரு நடந்த சம்பவம் இந்த சம்பவத்தை பற்றி சமூக வலைத்தளத்தில் வந்த செய்தி தான்.

முகப்பேர் ஈஸ்ட்டில் இருக்கும் ஜெ .ஜெ. நகர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன், ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, அவருடைய தலையில் ரத்தம் பீறிட்டு வரும் அளவுக்கு அடித்திருக்கிறார்கள். தலையில் ரத்தம் வந்தவுடன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவர்களை விரட்டி விட்டிருக்கிறார்கள். அந்த நபர் ரோடில் நடந்து சென்ற போது, அவருடைய தலையில் ரத்தம் கொட்ட, கொட்ட நடந்து கொண்டிருக்கிறார்.

அந்த வழியாக வந்த ஒரு நல்ல மனிதர் வேல்முருகன் என்ற ஜோதிடர் அவரைப் பார்த்து என்ன என்று விசாரித்த போது, நடந்ததை சொல்லி உள்ளார். அவருக்கு உதவி செய்ய ஆட்டோக்காரர்கள் கூட அவரை ஆட்டோவில் ஏற்றவில்லை. பிறகு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வரவழைத்து அவரை ஏற்றி அனுப்பி இருக்கிறார். அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் யாராவது ஒருவர் துணைக்கு வர வேண்டும். இல்லையென்றால், அழைத்துக் கொண்டு போக முடியாது என்கிறார்.

பிறகு அவரே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு, அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விட்டு, பிறகு மருத்துவமனையில் இருந்து கிளம்பி இருக்கிறார். அப்போது அந்த நபர் கையெடுத்து கும்பிட்டு, நன்றி அண்ணா என்று கூறினாராம்.

இது சமூகப் வலைத்தளத்தில் வந்த செய்தி தான், இருப்பினும் அந்த ஜோதிடர் தன்னுடைய போன் நம்பரை அதில் போட்டிருந்தார். அவருக்கு போன் செய்து ,இது உண்மைதானா? என்று கேட்டேன் ஆமாம் என்றார்.

எந்த அளவிற்கு காவல்துறையின் அராஜகங்கள் இருக்கிறது? என்பதை அறிந்து, இதற்கு சட்டத்தின் மூலம் அவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்காத வரை,காவல்துறையின் இப்படிப்பட்ட கொடுமைகள் தொடரும் .