ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் 30 நாள் சிறையில் இருந்தால் அவருடைய பதவி தானாகவே நீக்கப்பட்டு விடும் . இப்படிப்பட்ட சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது .

இந்த சட்டம் பதவியில் இருப்பவர் செய்த தவறு என்ன? என்று நிரூபிக்கப்பட்டு, அவர் 30 நாள் சிறையில் இருந்தால், அவருடைய பதவி தானாக ரத்தாகிவிடும். ஆனால் ,அதற்கு ஜாமீன் கிடைத்தால் அது விதிவிலக்கு. மீண்டும் அந்தப் பதவி அவருக்கு கிடைத்துவிடும். அல்லது பதவியில் தொடர்வார்.
சட்டத்தை எப்படி ஏமாற்றலாம்? என்றுதான் பதவிக்கு வந்தவர்களின் நோக்கமாக இருக்கிறது .மேலும்,அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது? அந்த ஓட்டைகளின் மூலம் எப்படி தப்பிக்கலாம்? இதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பதவி வெறி .

இந்தப் பதவி வெறியில் அலைந்து கொண்டிருப்பவர்கள் .அரசியல் கட்சிகளில்! தங்களுடைய பேச்சுக்களை கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இவரைப் பற்றியும், இவருடைய கட்சி செயல்பாடு பற்றியும் ,பெருமையாக அவர்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அங்கே ஒன்றும் இல்லை என்றாலும், வெத்து விளம்பரங்களை தேடிக் கொண்டிருப்பார்கள்.ஆனால் ,வாயிலேயே தான் எல்லாமே இருக்கும்.
இது திமுக மற்றும் அதிமுகவுக்கு கைவந்த கலை. என்ன இந்த பக்கம் ஜெயலலிதா இருந்தபோது அம்மா ,அம்மா ,என்றார்கள். இந்த பக்கம் கருணாநிதி இருந்தபோது தலைவர் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது தளபதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

இவர்கள் செய்த சட்ட மோசடி கொள்ளைக்காக 30 நாள் சிறையில் இருந்தால் ,இவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், அந்தப் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். இவர்களுக்கு பதவி என்பது மத்திய அரசு நினைப்பது போல் ,கௌரவத்திற்காக வந்தவர்கள் அல்ல, எத்தனை கோடி சம்பாதிக்கலாம்? எத்தனை கோடி சொத்துகளை வாங்கலாம்? இதற்காக தான் மக்கள் நம்மை அவர்களுடைய பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்களா? என்று அவர்கள் நினைப்பார்களா? அதனால், மத்திய அரசு! கொண்டு வந்தது கடுமையான சட்டம் இல்லை.
பாமர மக்கள் கேள்வி கேட்டால்! அல்லது அவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு கொண்டு சென்றால்! சட்டத்தின் விளைவு கடுமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த போலி அரசியல்வாதிகள் ,போலிய அரசியல் நாட்டில் ஒழிக்க முடியும். அதுவரை நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ, அத்தனை கட்சிக்கும் கூட்டங்கள் சேரும். நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தன்னை தியாகியாக பேசிக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த சட்டத்தைப் பற்றி, ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி, விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.

அதாவது பதவியில் இருப்பவர்களை 30 நாள் சிறையில் அனுபவிக்க வைத்து, அவர்களை காலி செய்வது அரசியல் சூழ்ச்சியாக நடக்கலாம் .அல்லது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இதை கொண்டு வரலாம். அவர்கள் தவறு செய்திருப்பார்கள், அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை .
ஆனால், அது எப்படி இருக்கும் என்றால் ?எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சி பழி வாங்குகிறது .இதை தான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதனால்' இந்த சட்டத்தை மேலும், கடுமையாக்கப்பட வேண்டும் .

அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ,அவர் என்ன ஊழல் செய்தார் ?அதற்கான தரவுகள் என்னென்ன ?என்பதை வைத்து அவருடைய சொத்துக்களை அனைத்தையும், நாட்டுடைமையாக்க வேண்டும் .அதுதான் முக்கியமே தவிர,
ஒருவருடைய பதவி காலி செய்வது சட்டத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது .அது சமூகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு நல்லது செய்தால், எந்த கட்சியாக இருந்தாலும் ,அதை வரவேற்கலாம்.

அதுவே சமூகத்திற்கு ! கட்சி என்ற பெயரில்,பல தீமைகளை, கொடுமைகளை செய்து கொண்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்த சட்டம் மேலும் இதில் கடுமையாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ,ஊழல்கள் நிரூபிக்கப்பட்டு , அவர்களுடைய சொத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் போலியான அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள், அரசியலை விட்டு வெளியேறுவார்கள். அதுவரை, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் அவர்களை வைத்து மறைமுகமாக பத்திரிகை வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

இது இரண்டிற்கும் ஒரே தீர்வு .அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதை மத்திய மாநில அரசு நிறுத்த வேண்டும். மேலும்,சமூக நோக்கத்திற்கான பத்திரிகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அப்போதுதான் இதற்கு முக்கிய தீர்வு. இதைவிட ஒரு முக்கிய செய்தி என்னவென்றால்! வாக்களித்த மக்களுக்கு! அரசியல் மீது, மீண்டும் ஒரு சமூக நம்பிக்கை ஏற்படுத்த முடியும்.