கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .

 

இளைஞர்கள் சினிமா வேறு, அரசியல் வேறு ,என்பதை புரிந்து செயல்பட்டால், எதிர்கால அரசியல்! உங்கள் முன்னேற்றத்திற்கானது . மேலும் ,தற்போதய தமிழ் நாட்டின் அரசியல்! என்பதுசினிமா, டிராமாவை விட கேவலமாகிவிட்டது.நடிகர்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்ததும் ஒரு காரணம்.தவிர,ஏற்கனவே அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளாக இருப்பதால், அரசியலுக்கு தகுதியானவர்கள் யார்? என்ற இடம் மற்றும் தலைமை இடம் வெற்றிடமாகவே உள்ளது.

அது மட்டும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊடகங்கள் பணத்திற்காக யாருக்கு வேண்டுமானாலும், ஒத்து ஊதக்கூடிய கருவிகளாக இருக்கிறார்கள். அரசியல் என்ன ?என்று தெரியாத அப்பாவி மக்களிடம் அரசியல்வாதிகள் கூறி வரும் பொய்களை ,உண்மை என்று மாயையான அதாவது போலியான பத்திரிக்கை பிம்பத்தையும், போலியான அரசியலையும் உருவாக்கி வருகிறார்கள்.

இதை அரசியல் தெரிந்தவர்கள் ,பத்திரிகையில் அனுபவம் உள்ளவர்கள் ,மட்டும்தான் இந்த அரசியலை புரிந்து கொள்ள முடியும். மேலும்,பாமர மக்களால் அவ்வளவு எளிதில் இதை புரிந்து கொள்ள முடியாது ‌.

இது தவிர, தற்போதைய அரசியல்,எப்படி என்றால்! ஒரு அரசியல்வாதி, இன்னொரு அரசியல்வாதியை, பற்றி குறை சொல்லி ,ஊழல் குற்றச்சாட்டு சொல்லி, அரசியல் பேசிக் கொண்டிருப்பது, அரசியலாகிவிட்டது. அப்படிப்பட்ட அரசியலில் முக்கியமாக இருப்பவர்கள் சீமான், திருமாவளவன், வைகோ ,ராமதாஸ் ,அன்புமணி, கம்யூனிஸ்டுகள், ராகுல் காந்தி, ஸ்டாலின், மாயாவதி போன்ற எதிர்க்கட்சிகள் ,நாட்டின் எதிரி கட்சிகளாக தான் இருக்கிறார்கள். இவர்களுடைய அரசியல் ஆளும் கட்சியை குறை சொல்வது மட்டுமே உள்ளது.

ஆனால், இவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை சொல்ல மாட்டார்கள். அதுதான் மக்களை ஏமாற்றும் அரசியல். இதை இந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளும் சொல்லாது. சொன்னால் அவர்களுடைய பத்திரிக்கை, தொலைக்காட்சி வியாபாரம் கெட்டுவிடும்.மேலும்,

இது எதற்கு? என்றால் !தான் நேர்மையானவனாகவும், அரசியலில் தான் உத்தமனாகவும் ,இருப்பது போல் காட்டிக் கொள்ள அதாவது மக்களை ஏமாற்ற இந்த பேச்சுக்களை நடிப்பு பாவனையோடு ,தொலைக்காட்சிகள் மைக் முன்னால் குறை சொல்வதில் அவனைவிட நான் தகுதியானவன், அப்படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும்,

அவர்களுடைய கட்சிக்காரர்கள் நேர்மைக்கே பெயர் போனவர்கள். அவர்களிடம் தான் நேர்மைக்கு உதாரணமாக வாழ்வது எப்படி? என்று நடிப்பதை மக்கள் புரிந்து ,அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்களுடைய பேச்சு இருக்கும். ஒரே வரியில் சொன்னால், அரிச்சந்திரனே அவர்களிடம் தோற்று விடுவான். அந்த அளவுக்கு பேசுவார்கள்.

இந்த பேச்சை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் இது ஒரு அரசியல் வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறது. இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், இதுதான் அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் நேர்மையான அரசியல் என்று மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறது. இது தவிர,

ஒருவர் பிஜேபியை குறை சொல்லிக் கொண்டிருப்பார். இன்னொருவர் சீமானின் அரசியலை குறை சொல்லிக் கொண்டிருப்பார். இன்னொருவர் விஜய்யின் அரசியலை குறை சொல்லிக் கொண்டிருப்பார். ஸ்டாலின் ,எடப்பாடியை குறை சொல்லுவார். .இல்லையென்றால் ,பிஜேபியை குறை சொல்வார். இதுதான் இவர்களுடைய அரசியலாக இருக்கிறதே ஒழிய, மக்களுக்கு என்ன செய்தார்கள்?என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை இதுவரை எந்த அரசியல் கட்சியும், அதை மனசாட்சியுடன் உண்மையாக, நேர்மையாக, வெளிப்படுத்தவில்லை.மேலும்,தமிழ்நாட்டில் ஸ்டாலினுடைய ஆட்சி, நிர்வாகம் நாறும் பொழுது பீகாரில் போய் இவர் பிஜேபியை குறை சொல்லும் அரசியலை பீகார் மக்களை ஏமாற்று சென்று விட்டார்.

அங்கே தேர்தல் கமிஷன் மீது தப்பா புகார் சொல்லிக்கொண்டு, அந்த மக்களை ஏமாற்ற ,அங்கே புகாரை சொல்லிக்கொண்டு,வெத்து ,வெட்டு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். பிஜேபி விட நாங்கள் சிறந்தவர்கள் ,நாங்கள் உத்தமர்கள், ஊழலை செய்யாதவர்கள், தமிழ்நாட்டில் நாலு லட்சம் கோடி கடன் வாங்காதவர்கள் ,எங்களுடைய ஆட்சி ஒரு சிறப்பான ஆட்சி ,ஆயிரம் ரூபா கொடுத்து மக்களை ஓட்டுக்கு கவரக்கூடிய ஆட்சி, இதையெல்லாம் பேச வேண்டிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறது.

அப்படி என்றால், இதெல்லாம் கூலிக்கு மார் அடிக்கிற கூட்டமா? கூலிக்கு மாரடைக்கின்ற கூட்டமாக இருந்தால், அதற்கு எதற்காக? கோடி கணக்கில் மக்களின் வரி பணத்தை மத்திய மாநில அரசின் செய்தித்துறை வீணடிக்கிறீர்கள்? அதுதான் மக்களின் கேள்வி? மக்கள் அதிகாரத்தின் கேள்வி? இதுதான் அரசியல் சாசனத்தின் நான்காவது தூனா?மேலும்,

ஊழல்வாதிகளை நல்லவர்களாக ,பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் ,காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையை, செய்தித் துறையும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.மேலும், உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகளுக்கு மக்கள் அலட்சியம் செய்தால் , மக்களின் சமூக நீதி மற்றும் தினசரி வாழ்க்கை போராட்டமாக மாறிவிடும். இது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு.

இதன் விளைவு ,சமூகத்தில் மக்களுக்கு இப்பொழுது நிறைய சட்ட போராட்டம், முதல் வாழ்வாதாரம் வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அதாவது மக்கள் அன்றாட தேவைகளுக்கே போராட வேண்டி இருக்கிறது .தொழில் வளர்ச்சி இல்லை. அதனால், வருங்காலத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இளைஞர்களின் எதிர்கால கனவுகள் சிதைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால் அரசியல் என்பது அடிதட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும்தான் அவசியமானது.மேலும்,

விலைவாசி ஏறினால் பாதிக்கப்படுவது ஏழையும் ,நடுத்தர மக்களும்தான். அதனால் இந்த மக்கள் நீங்கள் அலட்சியத்துடன் இருந்தீர்கள் ஆனால் ,உங்கள் எதிர்காலம் இன்னும் மோசமானதாக மாற வாய்ப்பு உள்ளது. இப்போதே இந்த அரசியல் கட்சியினரின் பொய்களை தெரிந்து கொள்ளுங்கள்.மேலும், இதை விட தெளிவாக எந்த ஊடகமும், தமிழ்நாட்டின் வெத்து வெட்டு அரசியலையும், போலி அரசியலையும், உங்களுக்கு வெளிப்படையாக சொல்லாது .மேலும்,

இந்த அரசியலை புரிந்து செயல்படுவது, உங்கள் எதிர்கால வாழ்க்கை கனவுகள் நிறைவேற இவர்களிடம் நிச்சயம் போராட வேண்டி இருக்கும். எது உண்மை?எது பொய்? என்பதை தெரிந்து கொள்வது கடினமான குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையெல்லாம் தேர்வு செய்யப்பட்ட அரசியல் கிரிமினல்கள் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுப்பார்கள். இவர்கள் தொலைக்காட்சி மைக்கைகளிலும், பத்திரிகைகளிலும் அதை பேசிக் கொண்டிருப்பார்கள்.அதனால், இந்த அரசியலை ஒவ்வொரு இளைஞர்களும் படிக்க வேண்டும். இல்லையென்றால் , உங்கள் முன்னேற்றம் கேள்விக்குறியானது.

Popular posts
மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? - சட்ட மசோதா நிறைவேற்றம்.
படம்
படம்
காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?
படம்
விஜயின் அரசியல்! மற்றும் மதுரை மாநாடு! தமிழக மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்துமா?
படம்