அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினரின், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், என்று மக்களுக்காக பேசுவது? சினிமா அரசியலா? இந்த கொள்கைக்கு அர்த்தம் என்ன ?

 


மக்களுக்கு 60 சதவீதத்திற்கும் மேல் அரசியல் தெரியாது .அது இந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சாதகமாக உள்ளது.

மேலும்,வைகோ ,சீமான் ,திருமாவளவன் , ராமதாஸ், பூவை ஜெகன் மூர்த்தி , ஜான் பாண்டியன், கம்யூனிஸ்டுகள்,இப்படி பல வரிசை கட்டி இவர்களை போடலாம். அதாவது இந்த கட்சிகள் மற்றும் கட்சியினரின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் ,வேதாந்தம் ,எல்லாம் மக்களுக்காக தான் பேசிக் கொண்டிருப்பார்கள் .

மேலும், அரசியல் என்பது அவர்களுடைய சொந்த நலனுக்காகவா? அல்லது மக்கள் நலனுக்காகவா ? பேசுவது மட்டும் மக்களுக்காக பேசிவிட்டு, மீதி எலலாம் அவர்கள் நலனுக்காகவா?

தவிர,இப்படி பேசக்கூடிய அரசியல் கட்சி தலைவர்கள், எத்தனை பேர்? கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், எல்லாம் கடைபிடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?மேலும்,

பேசுவது கொள்கை அல்ல, பேசிவிட்டு போவதும் கொள்கையல்ல, என்ன பேசினீர்களோ ,அதன்படி நடப்பது தான் கொள்கை ‌!

அப்படி கொள்கையை கடைபிடிக்கக் கூடிய எத்தனை கட்சித் தலைவர்கள் இருக்கிறீர்கள்? எவ்வளவு பேர் உங்கள் கட்சியினர் அந்த கொள்கையை கடைபிடிக்கிறார்கள்?தவிர,யூடியூபில் பேசுவது, இன்ஸ்டாகிராமில் பேசுவது, பேஸ்புக்கில் உங்கள் பேச்சை போடுவது, இது யாருக்காக மக்களுக்காகவா? அல்லது உங்களுக்காக வா?

இப்படி பேசுவதற்கும் ,செயல்படுவதற்கும், கொள்கைக்கும் ,அர்த்தமில்லாத கூட்டம் தான், இந்த அரசியல் கட்சி கூட்டமா? அதுதான் தற்போதைய அரசியல் கட்சியா? அதை விளம்பரப்படுத்துவது தான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் நோக்கமா? இதுதான் நான்காவது தூணின் வேலையா? இதற்கு தான் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட வேண்டுமா? நாட்டில் அரசியல் என்பது எவ்வளவு அர்த்தமற்ற செயலாக விட்டதா? மேலும் ,

திருமாவளவன் கொள்கை என்ன? ராமதாஸின் கொள்கை என்ன? வைகோவின் கொள்கை என்ன? கம்யூனிஸ்ட் களின் கொள்கை என்ன? அதிமுக ,திமுகவின் கட்சி மற்றும் தலைவர்களின் கொள்கை என்ன?பிஜேபியின் கொள்கை என்ன? காங்கிரஸின் கொள்கை என்ன? இந்த கொள்கைகளை பற்றி, வாயிலே பேசுவது, அதுதான் இவர்களின் கொள்கை அரசியலா?

மேலும்,நான் கட்சியில் 20 ஆண்டுகால, முப்பது ஆண்டுகாலம், 40 ஆண்டு காலம் இருக்கிறேன் .நீ நூறு வருஷம் கூட இரு, நீ கட்சியில் என்ன செய்தாய் கட்சிக்காக என்ன செய்தாய்? மக்களுக்காக என்ன செய்தாய்!ஜெயிலுக்கு எல்லாம் போய் வந்தேன். ஜெயிலுக்கு போய் சுதந்திரம் வாங்கினியா? நீ ஜெயிலுக்கு போனதால் மக்களுக்கு என்ன நன்மை? அத சொல்லு ‌,இப்படி எல்லாம் பல கட்சி பைத்தியங்கள் பேசிக் கொண்டிருக்கிறது.இவர்கள் எல்லாம் இவர்களுடைய அரசியல் கட்சியின் கொள்கைப்படி வாழ்கின்ற கூட்டமா?

அப்படி அரசியல் கொள்கைப்படி ,வாழ்கின்ற அரசியல் கட்சி தலைவர்கள் எத்தனை பேர்? கொள்கையும், கோட்பாடும், வேதாந்தமும் பேசிவிட்டு,இவர்களுடைய கொள்கை கொள்ளையடிப்பது கொள்கையா? தலைவன் ஆளும் கட்சியிடம் கமிஷன் வாங்குவது , அந்த கட்சியினர் ஊர் சொத்துக்களிலும், கடைகள், கம்பெனிகள் மிரட்டி வசூல் செய்வது, இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் கொள்கையா?

அந்த கம்பெனிக்காரன் கூட எங்களைப் போன்ற சமூக அக்கறை உள்ள பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் கொடுப்பதற்கு கஷ்டப்படும்போது, மிகவும் வேதனையாக உள்ளது. இவர்களை மிரட்டுகிறான், பயந்து லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள். சமூக நன்மைக்காக பத்திரிகைகளை நடத்தும்போது உங்களுடைய கம்பெனி விளம்பரங்களை கொடுங்கள் என்று கேட்கிறோம். அதற்கு எவ்வளவு ஃபார்மாலிட்டிஸ் சொல்கிறார்கள்? நல்லதுக்கு காலமே இல்லை.

இதுபோன்ற ஊழல்வாதிகளுக்கும், ஊழலுக்கும், கொள்கையற்ற கூட்டத்திற்கும், அவர்களுடைய பேச்சை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், விளம்பரப்படுத்திக் கொண்டு , மக்களை ஏமாற்றி பத்திரிக்கை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு, இவர்கள் பேசுகின்ற பேச்செல்லாம் அரசியலா? மேலும், எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் அர்த்தமற்ற பேச்சுகளை அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள். இது அரசியல் தெரிந்தவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறது.

மேலும் ,உங்களுடைய சொந்த விஷயங்களை, சொந்த கருத்துக்களை எதற்கு அரசியலில் பேசுகிறீர்கள்? அனுராக் தாகூர் அனுமான் தான் முதன் மதலில் விண்வெளிக்கு சென்றவர். இது அவருடைய சொந்த கருத்து. இதை அரசியல் கருத்தாக திணிக்க முடியுமா? அதில் என்ன தவறு என்று தமிழிசை சௌந்தர்ராஜன்? ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் அரசியல் என்பது இன்னும் இவர்கள் படிக்க வேண்டும். இந்த கட்சியில் மட்டுமல்ல ,ஓட்டு மொத்த தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் அத்தனையுமே, இப்படி தான் இருக்கு, இதை விட மோசமாகவே பேசுகிறார்கள்.

ஏனென்றால் ,இதையம் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் விளம்பரப்படுத்துகிறது. இதைவிட ஒரு முட்டாள் ஊடகங்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.மேலும், ஒருவருடைய சொந்த பர்சனல் விஷயங்களுக்காக ஆர்ட்டியை(RTI) எதிர்க்கட்சிகள் தகவல் கேட்கிறார்கள் .மோடி பட்டம் வாங்கினால் என்ன? பட்டம் வாங்க விட்டால், உங்களுக்கு என்ன? ஸ்மிருத்தி ராணி பட்டம் வாங்கினால் என்ன? வாங்காவிட்டால், உங்களுக்கு என்ன? இது நாட்டு மக்களுக்கு அவசியமானதா? அவர்கள் எந்த வேலைக்கு வந்தார்களோ, அந்த வேலையை சரியாக செய்கிறார்களா ?அதில் தவறு இருந்தால் கேளுங்கள். ஊழல் இருந்தால் கேளுங்கள்.அதை விட்டு, விட்டு,

கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், எல்லாம் பேசுகின்ற சீமானுடைய ஆரம்ப கால சொத்து என்ன? இப்போது சீமானின் சொத்து என்ன ? அதேபோல் திருமாவளவன், ராமதாஸ் ,ஜெகன் மூர்த்தி, கம்யூனிஸ்டுகள்,வைகோ, ஜான் பாண்டியன், தவிர ,அதிமுக, திமுகவினுடைய அனைத்து அரசியல் கட்சியினரின் சொத்து கணக்கு என்ன? அதில் தான் உங்களுடைய நேர்மை அடங்கியிருக்கிறது. உங்களுடைய நேர்மை உங்களுடைய சொத்து கணக்கில் இருக்கிறது.

இதை எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் இதைப்பற்றி பேசுவதும் இல்லை. நீங்கள் சொல்லுகின்ற பொய்களை, மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் யாரிடம் சொல்வது ?அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எந்த அரசியல் கட்சி தலைவர்கள் ஆவது ?அல்லது தொலைக்காட்சி, பத்திரிகைகளாவது பதில் சொல்ல தயாரா?மேலும்,

ஆரம்பத்தில் ஒவ்வொருவருடைய சொத்து மதிப்பு என்ன? இப்போது சொத்து மதிப்பு என்ன? இதை மனசாட்சியுடன், வெளிப்படையாக ஒவ்வொருவருடைய சொத்து கணக்கு எடுத்து வெளியிட சொல்லுங்கள்.

அதன் பிறகு இவர்களுடைய கொள்கை என்ன? என்பது அதிலே தெரிந்துவிடும்.

யாரை ஏமாற்றுவதற்கு இந்த கொள்கை? கோட்பாடு ?வசனம்? டிராமா ?நடிப்பு? இதையெல்லாம் அரசியல் தெரிந்தவர்களிடம் எடுபடாது .

அரசியல் தெரியாத ஊரிலிருந்து வருவான் , அவனும் சும்மா வரவில்லை. அவனை காசு கொடுத்து, பிரியாணி, பாட்டில் எல்லாம் வாங்கி கொடுத்து, உட்கார வைக்கிறார்கள்

கூட்டத்திலே பேசும்போது ,அவனுக்கு அதில் எந்த அர்த்தமும் தெரியாது. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது, ‌விசில் அடிப்பான், கைதட்டுவான், அதை இந்த தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போட்டோ ,வீடியோ எடுத்து போட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள் . மக்களும் இதுதான் அரசியல்! என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ,அரசியல் கட்சித் தலைவர்களும், 1965 க்கு முன் அப்படிப்பட்ட எந்த ஒரு அரசியல்வாதியும், நான் பார்க்கவில்லை. அவர்கள் பேசியும் கேட்கவில்லை .அவர்கள் கொள்கை பற்றியோ, சித்தாந்தத்தை பற்றியோ, வேதாந்தத்தை பற்றியோ, எதைப் பற்றியும் பேசாமல், மக்களுக்காக! மக்கள் நலனுக்காக! வாழ்ந்தவர்கள்.

இவர்கள் இவர்களுக்காகவும், இவர்கள் கட்சியில் சேருகின்ற கூட்டமும், அவர்களுக்காக தான் கட்சி என்று நினைத்துக் கொண்டு, தங்களின் சொந்த சுயநலத்திற்காக கொள்கை என்று கட்சியை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் இவர்களை அரசியல் தெரியாதவர்கள் நம்பி , இவர்கள் பேச்சிலே,ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

தமிழ்நாட்டில் தற்போது கூட, ஒரு அதிகாரியிடம் பேசினேன். எந்த கட்சியிலும், மக்களுக்காக செய்வதற்கு ஒரு கட்சியிலும் ஆட்கள் இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. அட்லீஸ்ட் விரல் விட்டு எண்ணும் அளவில் கூட தெரியவில்லை. சுயநலத்திற்காக, அரசியல் கட்சியும் ,அரசியலும் என்றால்! மக்கள் வாக்களிப்பது வீண். அதேபோல், பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களுடைய சுயநலத்திற்காக பத்திரிகை வியாபாரம் என்றால் ,மக்களின் வரிப்பணத்தை செய்தித்துறை! கோடிக்கணக்கில் வீணடிப்பது,அதுவும் வீண். இரண்டும் எப்படி இருக்கிறது என்றால்?

தற்போதைய செய்தியாளர்கள் அடையாள அட்டை காண்பித்துக் கொண்டிருக்கிறார்களே, நான் டிஸ்ட்ரிக்ட் ரிப்போர்ட்டர் ,நான் ஏரியா ரிப்போர்ட்டர் ,நான் அரசு அடையாள அட்டை வாங்கி இருக்கிறேன் .நான் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சி அடையாள அட்டை வைத்து இருக்கிறேன் . என்று இந்த லேபிளை காண்பிப்பது போல, இவர்கள் அண்ணா திமுக, பிஜேபி, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், இந்த அடையாள அட்டை தான் காண்பித்து, கட்டவுட் போட்டு , பேனர்கள் வைத்துக்கொண்டு, இந்த அரசியல் தான் செய்கிறார்கள்.இதனால், மக்களுக்கு என்ன பயன்? இவர்களுக்கு தான் பயன் .மேலும்,

இந்த கொள்கை பொதுநலத்தில் இருக்க வேண்டும் . உங்கள் சுயநலத்தில் கொள்கை இருந்தால், அது கொள்கை அல்ல, அதற்குப் பெயர் கொள்ளைக் கொள்கை. கொள்ளைக் கொள்கையை கடைப்பிடிப்பவர்களுக்கு, பொதுவான மக்கள் எதற்கு உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் நீங்கள் வாக்கு கேட்பதற்கு கூட, தகுதியற்ற ஒரு கூட்டம். நீ !கொள்ளை அடிப்பதற்கு நான் எதற்காக நாலு மணி நேரம், 5 மணி நேரம் வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டும்? என்று அரசியல் தெரிந்தவர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

அதனால்தான்நான், ஓட்டு போடுவதில்லை சார். என்கிறார்கள். இது,அரசியல் தெரிந்தவர்கள்.என்னுடைய உரிமையை நான் தகுதியானவர்களுக்கு வாக்களிப்பேன். இவன் கொள்ளையடிப்பதற்கு நான் எதற்கு வாக்களிக்க வேண்டும்? இதுதான் அவர்களுடைய கேள்வி?

எதுக்கும் அர்த்தம் தெரியாதவன்! ஆயிரம், 500 வாங்கிக் கொண்டு, நீ எதுல சொல்றியோ, அதுல போட்டு கொண்டு இருக்கிறான். இது எல்லாம் ஒரு அரசியலா? இது எல்லாம் ஒரு கொள்கையா? இது எல்லாம் ஒரு சித்தாந்தமா ?

Popular posts
கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .
படம்
மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? - சட்ட மசோதா நிறைவேற்றம்.
படம்
படம்
காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?
படம்
விஜயின் அரசியல்! மற்றும் மதுரை மாநாடு! தமிழக மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்துமா?
படம்