மேலும் ,அவர் பேசும்போது இட ஒதுக்கீடு கொடுத்தால் தரம் குறைந்து விடுகிறது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
ஏனென்றால் ,நான் 90 மார்க், 95 மார்க் எடுத்தும் எனக்கு ஆன அந்த இடம் கிடைக்கவில்லை. ஆனால், 50 மார்க், 70 மார்க், எடுத்தவனுக்கு அந்த இடம் கிடைத்து விடுகிறது என்ற கோபம் 90, 95 மார்க் எடுத்தவர்களுக்கு இருக்கிறது.
இங்கே ,அவர் சொன்ன விஷயம் ,90 மார்க், 95 மார்க் எடுத்தவர்கள் இரண்டு காலில், ஓட்டப்பந்தயத்தில் ஓடி வந்து ஜெயித்தவர்கள். 50 மார்க், 75 மார்க் எடுத்தவர்கள், ஒரு காலில் ஓடி வந்து, இந்த இடத்தை பிடித்தவர்கள்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த இட ஒதுக்கீடு பிரச்சனையை தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது ஒரு குடும்பம் ஏழ்மையில் வறுமையில் இருக்கும்போது, அந்த குடும்பத்தில் இருந்து ஒருவன் மேல் நிலைக்கு வர, கல்வியில் அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பது மிக மிக கடினமான போராட்டம் தான்.
ஏனென்றால் ,அந்த குடும்ப சூழ்நிலை அப்படி இருக்கும். அதிலும் தற்போது நல்ல மார்க் எடுத்து, சில பிள்ளைகள் சமூகத்தில் உயர்ந்து விடுகிறார்கள். அதுவும் அவர்களுடைய ஒரு போராட்டத்தின் வெற்றிதான். சில பேருடைய தாய்,தந்தை கூலி வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள். அப்போது இந்த பிள்ளைகளும் அதில் பங்கேற்று வேலை செய்து படித்தவர்களாக இருப்பார்கள்.

சில பேர் விவசாய குடும்பத்தில் தாய், தந்தையர்களோடு விவசாய பணிகளில் ஈடுபட்டு படித்திருப்பார்கள். இப்படி பல குடும்பங்கள் ,வறுமையின் போராட்டத்தில் இந்த இட ஒதுக்கீடு இல்லை என்றால், அவர்களால் சமூக முன்னேற்றத்தில் அந்த குடும்பங்கள் எந்த காலத்திலும், அரசு பணியிலோ, உயர் கல்வியிலோ, அந்த இடத்தில் அவர்களால் எட்டிக் கூட பார்க்க முடியாது.

அதனால் ,தான் டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எஸ்சி, எஸ்டி, பி சி ,எம் பி சி ,போன்ற இட ஒதுக்கீடுகளை கொண்டு வந்தார்கள். தமிழ்நாட்டில் எம் பி சி கான இட ஒதுக்கீட்டை , அப்போதைய சமுதாயத்தின் தலைவர்கள் , இட ஒதுக்கீடு ,கொண்டு வந்து அவர்களுக்கான ஒரு உரிமையை பெற்று தந்தார்கள்.
அந்த வகையில் ராமசாமி படையாட்சி, திண்டிவனம் ராமமூர்த்தி, வாழைப்பாடி ராமமூர்த்தி இவர்களெல்லாம் என்றும் வன்னிய சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை சமுதாயம் மறக்க முடியாது.

ஆனால், ராமதாஸ் போன்ற அரசியல் வியாபாரி, இந்த சமுதாயத்தை இட ஒதுக்கீடு என்ற பிரச்சினையை கையில் எடுத்து 45 ஆண்டுகளாக அரசியல் வியாபாரம் செய்து பல லட்சம் கோடிகளை சம்பாதித்தது இந்த சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அரசியல் துரோகம்.
தொடர்ந்து ராமதாஸ் இந்த சமுதாயத்தின் துரோகியாகவே இருந்து வருகிறார். இதை அரசியல் தெரிந்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், இந்த வன்னியர் சமுதாயத்தில் பேசத் தொடங்கி விட்டார்கள்.ஆனால், எதுவும் தெரியாத ஒரு கூட்டம் அவர்களுக்கு பின்னால் சென்று ராமதாஸ் தன்னை வளப் படுத்திக் கொண்டது போல ,இந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடியை பிடித்துக் கொண்டு ,காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சமுதாயத்தில் படித்தவர்களும் உண்டு, அறிவாளிகளும் உண்டு, முட்டாள்களும் உண்டு, கீழ்த்தரமானவர்களும் உண்டு, அதனால் அவரவர் தகுதிக்கு தக்கவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை எது? என்பது படித்த சமுதாயத்திற்கு தெரியும்.மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்னது போல ,இந்த இட ஒதுக்கீடு அதாவது ரிசர்வேஷன்(Reservations) பல சமூகங்களுக்கு அவசியமானது.
இந்த இட ஒதுக்கீடு இல்லை என்றால் இன்று இந்த சமூகங்கள் வளர்ந்து இருக்க முடியாது. இவர் சொன்ன கருத்து இட ஒதுக்கீட்டால் தரம் குறைந்து விடுகிறது என்று பேசிக்கொண்டு இருக்கும், சில அரசியல் கட்சிகளுக்கும், உயர்தர வர்க்கத்தினர்க்கும் ,இது நிச்சயம் புரிந்து இருக்கும் .