செய்தித் துறையில் பத்திரிக்கை சம்பந்தமாக 8. 7. 2025இல் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் அனுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மாறி, ,மாறி வழிவகை இல்லை, வழிவகை இல்லை .

இப்படி ஏதோ ஒரு பதிலை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் வைத்தியநாதன் சார்பில், துணை இயக்குனர் மகேஸ்வரி அனுப்பி இருக்கிறார். இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு ? அதன் நோக்கம் என்ன? உங்கள் இஷ்டத்திற்கு ஏதோ ஒரு பதிலை அனுப்புவதற்கு, எதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம்?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ,எந்த துறையில் என்ன தவறு நடந்திருக்கிறது ?என்பதை வெளிப்படுத்துவதற்காக தான் ,இந்த சட்டத்தின் நோக்கமே !
ஆனால், இதுபோல் பதிலளிக்க முடியாத அரசியல் தலையீட்டின் கீழ் செயல்படும் செய்தித் துறை அதிகாரிகள் ஏதோ, ஒரு பதிலை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக எமது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துசாமியை தொடர்பு கொண்ட பிறகு தான் ,அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியும். மேலும்,
செய்தித் துறையில் கண்ணுக்கு தெரிந்து பல தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. இது பத்திரிகையை நன்றாக படித்தவர்களுக்கு தெரியும் . இதற்கு செய்தி துறை அதிகாரிகள் பதில் சொல்லி விட்டு தான் வெளியே போக முடியும். தமிழ்நாட்டில் கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்கள் தினசரி, வாரம், மாதம், இருமுறை எத்தனை ?அதன் பெயர்கள் பற்றிய விவரம் தரவும் .

இது கொடுக்க முடியாதா? அதற்கு பதில் என்னவென்றால்! தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2025 விதி 2 (f) ன் கீழ் வழங்கிட வழி இல்லை . சலுகை, விளம்பரங்கள், அரசு அடையாள அட்டை கொடுக்கும் போது எந்தெந்த பத்திரிக்கைக்கு கொடுக்கப்பட்டது என்ற கணக்கு இருக்கிறது அல்லவா? இது கொடுக்க முடியாதா?
இப்படி பல கேள்விகள் கேட்கும் போது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் உள்ளடி வேலைக்கு இது பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு, தகவல் கோர வழி இல்லை, தகவல் கோரவழியில்லை, என்று எழுதி அனுப்பி இருக்கிறார்கள். பார்ப்போம் .
மத்திய அரசிலிருந்து என்ன பதில்கள் வருகிறது? அதன் பிறகு தமிழக செய்தி துறைக்கு இருக்கிறது. அவர்கள் கொடுத்தது தவறா ?அல்லது இவர்கள் கொடுத்தது தவறா? இப்படி தவறான பதில்களை அனுப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

இது பத்திரிக்கை துறையில் எங்களுக்கான உரிமை பிரச்சனை. இந்த உரிமை பிரச்சனையில் அரசின் தலையீடு அதிகமாக இருப்பதால், இந்த பத்திரிகை எல்லாம் முன்னேற முடியாமல், மக்களுக்கான உண்மைகளை வெளிப்படுத்த முடியாமல், சமூக நலனுக்கு போராட முடியாமல், பணம் என்ற சர்குலேஷனை வைத்து செய்தித்துறை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், தகுதியான பத்திரிகைகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகை, விளம்பரங்கள் , கிடைக்காமல், அரசியல் பின்புலத்தில் மறைந்து கொண்டு பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் சலுகை விளம்பரங்கள் என்றால் பத்திரிக்கை துறையை அர்த்தமற்றது. அது கேலிக்கூத்து ஆனது அது மக்களை ஏமாற்றும் வேலை. இப்படிப்பட்ட செய்தி துறை அதிகாரிகளின் அரசியல் உள்ளடி வேலைகளால் ,
எத்தனையோ தகுதியான பத்திரிகைகள் இன்று இருக்கின்ற இடம் தெரியாமல் ,சில காலம் நடத்திவிட்டு சென்று விடுகிறார்கள் யாரெல்லாம் அரசியல் பின்புலத்தில் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே இவர்களுக்கு தகுதியான பத்திரிகைகள் என்று முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை நீதித்துறை அவசியம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீதித்துறையில் , நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்னது போல, இட ஒதுக்கீடு இல்லை என்றால் ,சமூக முன்னேற்றம் பல சமூகங்களில் இருக்காது.தவிர,

இந்த இட ஒதுக்கீட்டால், தரம் குறைந்து விடுகிறது என்று சொல்கிறார்கள் .அதை நான் ஏற்க மாட்டேன். உண்மையிலேயே சட்டம் படித்தாலும், மனசாட்சி உள்ள ஒரு நீதிபதியின் கருத்தை சமூகம் தலைவணங்கி ஏற்க வேண்டும்.
காரணம் ஓட்டப்பந்தயத்தில் ஒருவன் ஒரு காலில் ஓடி 75 மார்க் எடுக்கிறான். இரண்டு காலில் ஓடி தொண்ணூத்தி ஐந்து மார்க் எடுக்கிறான். ஆனால், 95 மார்க் எடுத்த எனக்கு கிடைக்கவில்லை .75 மார்க் எடுத்த அவனுக்கு கிடைக்கிறது.
இதே நிலைமை தான் செய்தித் துறையில், சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கதி. அவர்களாவது ஒரு காலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சமூகத்திற்காக காலே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இதை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதி அரசர்கள் கையில் இந்த வழக்கு போனால், எங்களைப் போன்ற பத்திரிக்கைக்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மேலும், இதற்கான காலம் நிச்சயம் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இந்த பத்திரிகைகளுக்கெல்லாம் ஒரு விடியலை ஏற்படுத்த அதை விரைவில் கொண்டு செல்லும் .