மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் இந்த சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் அவசியம் தேவையானது தான். மக்களும் அதை தான் வலியுறுத்துகிறார்கள். தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்ட இந்த சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் எஸ் ஐ ஆர் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

ஆனால், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். அதுதான் இங்கே பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும், அரசியல் கட்சிகளால் பேசப்பட்டு வருகிறது என்பதை கடந்த செய்தியில் சொல்லி இருக்கிறேன்.
ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது இடம் மாறி இருந்தாலோ அவருக்கான ஓட்டுரிமை என்பது அதில் தொடர்வது தவறானது தான். அது போலி வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறுகிறது.

இந்தப் போலி வாக்காளர்களுக்காக தான் காங்கிரஸ் ,திமுக ,விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒன்றாக எதிர்க் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கிறது. அவர்களை நீக்க கூடாது என்று அது தவறா? மக்களே அது தவறு இல்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால், இவர்கள் தவறு என்று சொல்கிறார்கள். அது கள்ள ஓட்டு போட சௌகரியமாக இருக்குமா?அடுத்தது, விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து கொண்டு, அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் சொல்ற அத்தனை விஷயங்களும் சரியானது தான். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்க்கிறேன் என்று சொல்வது தான், அவருக்கு சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவர் சொல்வது போல், அந்த வாக்காளர் விண்ணப்பத்தை கொண்டு வந்து கொடுக்கும்போது, அந்த நேரத்தில் வீட்டில் சம்பந்தப்பட்டவர்கள் இருந்தால் தான், அதை அவர்களால் வாங்க முடியும். இல்லையென்றால் அவர்கள் அதை வாங்க முடியாது. இது எல்லாம் உண்மைதான்.

தவறான முறையில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சிஸ்டத்தில் ஏற்றுக்கொள்ளாது. அப்படி என்றால் இவ்வளவு நாள் நான் வாக்காளர்களாக இருந்து, இப்போது நான் வாக்காளராக ஆக முடியாமல் நிராகரிக்கப்படுகிறேன். இதையெல்லாம் மீண்டும் சரி செய்து கொள்ளலாம். ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.

ஆனால், அதற்காகவே இந்த வாக்காளர் திருத்தம் சரி செய்ய விட்டால், போலியாக வாக்காளர்களை வைத்து திமுக கள்ளப் ஓட்டு போடுவார்கள் என்பது விஜய்க்கு தெரியுமா? தெரியாதா? திமுக கூட்டணி அத்தனையும் கள்ள ஓட்டு போடுவதற்கு தயாரானவர்கள். அதில் கைதேர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது, இதை எதிர்ப்பது, சரியானது அல்ல.

மேலும், தேர்தல் ஆணையம் இதை எப்படி சரி செய்ய முடியும் ?பிரச்சினைகள் இல்லாமல், என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் சரி செய்ய வேண்டிய விஷயத்தை இப்போது மக்கள் தலையில் வைத்து விட்டீர்கள்.

மக்களில் பாதி பேருக்கு, இது தெரியும் .தெரியாது. அதை தெரியாதவர்களிடம் அரசியல் கட்சியினர் கைவரிசை காட்டுவார்கள். அது தவறாக கூட போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்படிதான் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது .
அதற்கு அவர்கள் நாங்கள் மக்களுக்காக சேவை செய்வதற்காக தான் இப்பணியை செய்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள். இது போன்ற தவறுகள் தேர்தல் ஆணையம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் அரசியல் தலையீடு வரக்கூடாது. அதை வராமல் பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் படித்த இளைஞர்களுக்கு இது பற்றிய பயிற்சி கொடுத்து, அவர்களைப் பணி அமர்த்தி இந்த பணியை சரியான முறையில் செய்தால், இதில் 100% வெற்றிதான். தவறு வருவதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் பள்ளி ஆசிரியர்களை வைத்து ,அவர்கள் கடமைக்கு கொண்டு வந்து இந்த வாக்காளர் விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள். இதையெல்லாம் சரியான முறையில் செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு என்பதை பொதுமக்கள் தெரிவிப்பதோடு ,இந்த தவறுகளை எல்லாம் திருத்தி மக்களுக்கு தேர்தல் ஆணையம் முறையாக செய்தால், இந்த வாக்காளர் சிறப்பு திருத்தம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது உறுதி.