திருமாவளவன் பெரியார், அம்பேத்கரை வைத்து பேசியே அரசியல் செய்து கொண்டிருப்பார். மேடைக்கு ,மேடை பெரியார் கருத்துக்களையும், அம்பேத்கர் கருத்துக்களையும், சொல்லிக் கொண்டு ,பேசிக்கொண்டு, அதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு வந்தது. இது ஒரு போலி அரசியல்.இந்த போலி அரசியல் சாயம் வெளுத்து விட்டது.
திருமாவளவனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல், கண் முன்னே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது ,திருமாவளவனின் செயல் எப்படிப்பட்டது ?என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் போலி அரசியலின் சாயம் வெளுத்து விட்டது.மேலும்,

அவர் ரெண்டு தட்டு ,தட்டுனாங்க, நல்லா கூட அடிக்கல, ஜாதியை என்னன்னு கூட கேட்கல, இப்படியா?பொதுவெளியில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேசுகின்ற பேச்சா இது? ஒரு ரவுடிக்கும், திருமாவளவனனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?மேலும், திருமாவளவனே இப்படி இருந்தால், இவருடைய கட்சியினர் எப்படி இருப்பார்கள்? இதுதான் அனைத்து சமுதாய மக்களின் ஓட்டு மொத்த கேள்வி?
இந்த பிரச்சனை திருமாவளவனோடு மட்டும் நிற்கவில்லை .அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் மக்களின் பார்வை திரும்பி இருக்கிறது. இவர்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக ஒரு வரியில் சொல்லப் போனால், அரசியல் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதற்குக் காரணம் என்ன? போலியான அரசியல்.மேலும்,

இப்படி பல அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாட்டில் இந்த போலி அரசியலை தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் பிஜேபியில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், திமுகவில் ஸ்டாலின், சேகர் பாபு , வைகோ, சீமான், பிரேமலதா, இப்படி பல அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கும் செயல்படுவதற்கும் சம்பந்தமே இல்லை. பேசுவது யார் வேண்டுமானாலும் பேசி வட்டு போகலாம் ஆனால் உழைப்பது தான் அதற்கு கடினமான வேலை அது எல்லாராலும் முடியாது அதற்கு தான் தகுதியானவர்கள் என்று அடிக்கடி மக்கள் அதிகாரத்தில் வலியுறுத்தப்பட்ட வருகிறது.

மேலும் இப்போது திருமாவளவன் அரசியல் கட்சியில், தகுதியற்ற குண்டர்களை எல்லாம் கட்சி நிர்வாகி ஆக்கி ,அவர்கள் கட்டப்பஞ்சாயத்து, தனியார் கம்பெனிகளில் வசூல் வேட்டை, தனியார் கடைகளில் வசூல் வேட்டை, மக்களிடம் ரவுடித்தனம், வேற்று ஜாதியிடம், ஜாதி வெறியோடு பேசுவது, வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிப்பது, ஆல் இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் (all illegal activities of viduthalai siruthaigal political party) இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இருப்பது மக்களுக்கு தெரியாமல் தான் இதுவரை இருந்துள்ளது.
இது எப்படியோ காலம் இவர்களை வெளிக்கொண்டு வந்து, தற்போது காட்டிவிட்டது. திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிக்காக போராட்டம் நடத்தி விட்டு, வரும்பொழுது ,காலம் எப்படி இவர்களை தண்டிக்கிறது பாருங்கள்?

எந்த சனாதான சக்தி இல்லை என்று இவர்கள் போராடினார்களோ ,அதே சனாதன சக்தியால் ,இவர்கள் உதை வாங்குகிறார்கள் .இருக்கும் இடம் தெரியாமல், இந்த கட்சி எல்லாம் தேர்தல் ஆணையத்தாலே அங்கீகாரம் ரத்தாகி ,திருமாவளவனை நடுரோட்டில் நிக்க வைக்கப் போகிறார்கள்.
ஒரு அரசியல் கட்சிக்குரிய தகுதி என்ன? என்று கூட தெரியாமல் கட்சி நடத்திக் கொண்டிருந்த திருமாவளவன் மற்றும் அவரது கூட்டம், இதுவரை என்ன செய்திருக்கிறது?மேலும்,

அம்பேத்கரையும், பெரியாரையும், பேசிக்கொண்டு கட்சி நடத்துகின்ற கூட்டங்கள், எல்லாம் இனி இந்த வெத்து வெட்டு ,பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் .இனி இவர்களுடைய சாயம் வெளுத்து விட்டது. இது தவிர ,அரசியல் கட்சிகளில்!
தற்போது எல்லோரும் அம்பேத்கர் , பெரியார் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அம்பேத்கர் ஆகிவிடுவார்களா? இவர்கள்? அல்லது அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டால், இவர்கள் பெரியார் அம்பேத்கரின் கொள்கைவாதிகள் ஆக ஆகிவிடுவார்களா? அப்படியானவர்கள் எத்தனை பேர்?
மேலும், இது போன்ற போலி அரசியல், அரசியல் என்றால் என்ன ?என்று தெரியாதவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போலி அரசியலுக்கு பக்க வாத்தியமாக இருப்பது பல பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் , இப்படிப்பட்ட ஊடகங்கள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது .

காரணம், இது போன்ற அரசியல் கட்சியினரை, அரசியல் கட்சிகளை, மக்களிடம் விளம்பரப்படுத்தும் நோக்கம் என்ன? இது பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் கடமை அல்ல, இது நான்காவது தூணின் கடமையல்ல, மத்திய, மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகளுக்கு இப்போதாவது இந்த உண்மை புரியுமா?

மேலும், உங்களின் சர்குலேஷன் சட்டம் மற்றும் தினசரி ,மாதம் ,வாரம், இந்த பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகளின் தரம் ,அதன் தகுதி, இப்போதாவது உங்களுக்கு புரியுமா?

அப்படி என்றால்! எது கடமை?உண்மையை மக்களிடம் எடுத்துக் காட்டுவது தான் ஊடகங்களின் கடமை. அரசியல் கட்சிகளுக்கும் ,அரசியல் கட்சியினருக்கும் ,பக்கவாத்தியம் வாசிப்பது பத்திரிகைகளின் கடமை அல்ல.
இதனால் நாட்டில் போலிஅரசியல், ஊழல் அரசியல், ரவுடிசம், மக்களின் சமூக போராட்டம் அனைத்திற்கும் இந்த ஊடகங்கள் மறைமுகமான சப்போர்ட் என்பதாவது புரிகிறதா? தவிர,இதற்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில், தகுதியற்ற இந்தப் பத்திரிக்கைகளுக்கு அரசின், சலுகை, விளம்பரங்கள் கொடுத்து வீணடிக்கப்படுவது தவறானது என்று மக்களுக்குப் புரிகிறதா?

மேலும், இப்படிப்பட்ட போலி அரசியலால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள், அரசியல் தெரியாதவர்கள், அவர்களிடம் அரசியல் செய்கிறார்கள்.இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் தான் முடிவு கட்ட வேண்டும். மேலும்,

தற்போது தமிழ்நாட்டில் !அனைத்து சமுதாய மக்களும், திருமாவளனுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். இனி திருமாவளவன், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் இவருடைய கட்சியோ அல்லது இவரோ நின்றால்,கூட இனி டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்பது உறுதி.அந்த அளவுக்கு திருமாவளவனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது.
ஒரு பக்கம் சோசியல் மீடியாக்களில் திருமாவளவனை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் அனைத்து சமூகங்களும், எதிர்க்கட்சிகளும், குறிப்பாக பிஜேபி தான் இப்போது திருமாவளவனுக்கு எதிராக போராடுகின்ற ஒரு கட்சியாக களத்தில் இறங்கி விட்டது.
திருமாவளவன் சொன்னது போல, அடிக்கடி ஆர் .எஸ் .எஸ், பிஜேபி பார்த்து பயத்தில் பேசிக் கொண்டிருந்தார் அவருடைய பயமே இப்போது நிஜமாகி விட்டது .பிஜேபி கட்சியினர் ,களத்தில் இறங்கி பேச ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டுமல்ல,

இப்போது இந்த விடுதலை சிறுத்தைகள் எங்கே இருக்கிறார்கள்?என்று கூட தெரியாத அளவுக்கு ஓட்டம் பிடித்து விட்டார்களா?. அதே போல தான், சீமான் ஆணவத்தோடு பேசி வருகிறார் . இவருக்கும் இந்த தேர்தலில் நிச்சயம் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவர்களை வளப்படுத்திக் கொள்வதற்கு இவர்கள் கட்சியை வைத்துக்கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ,யூடியூபர்களுக்கு இப்போது நன்றாக மாட்டிக்கொண்டுள்ளது ,திருமாவளவன் மேட்டர் .இதை திமுக சைலன்ட் மோடில் ,வேடிக்கை பார்க்கிறது. ஏனென்றால், நாம் ஏதாவது ஒன்று பேசினால் ,நமக்கு இன்னும் மரியாதை குறைந்து விடும் என்று திமுக வாய் திறக்காமல், சைலன்ட் மோடில் வேடிக்கை பார்க்கிறது.மேலும்,

இந்த திருமாவளவன் சப்ஜெக்ட் இன்று எதிர்க்கட்சிகள் நன்றாக அதை வைத்து அரசியல் செய்கிறது. அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது. தவிர, இது பெரிய தவறு கூட இல்லை .சிறிய தவறு தான். இந்த சிறிய தவறு ,சாதாரணமாக கையிலே கிள்ளி எடுத்து போட்டுவிட்டு போயிருக்கலாம்.
தம்பி தெரியாமல் நடந்து விட்டது. சாரிப்பா , பார்த்து போங்க .ஒரே வார்த்தையிலே போயிட்டு இருக்கும். ஆனால்,இப்போது கோடாலி எடுத்து வெட்டி சாய்த்து விட்டார்கள். திருமாவளவனால் ,தலித் சமுதாயத்திற்கு அவ பெயர் தான் உருவாக்கி வைத்து விட்டார்.மேலும்,
மற்ற சமூகங்கள் இனி வாக்களிக்கும் போது, இனிமேல் வாக்களிப்பார்களா? வாக்களித்தாலும் எப்படிப்பட்டவருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று யோசனை செய்து தான் வாக்களிப்பார்கள்.

இது தவிர, ஒட்டுமொத்த மாற்று சமூகங்களின் ஒரு மித்த குரலாக இந்த பிசிஆர் சட்டம் நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல் கொடுக்கிறார்கள். இது நூற்றுக்கு 99 சதவீதத்திற்கு மேல் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காஞ்சிபுரத்தில் ஒரு டிஎஸ்பி வன்கொடுமை சட்டத்தில், ஒருவரை கைது செய்யவில்லை என்று ஒரு மாவட்ட நீதிபதி அவரை கைது செய்கிறார் என்றால் ,இந்த சட்டம் எந்த அளவுக்கு நீதிபதிகளே தவறாக பயன்படுத்துகிறார்கள், என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மேலும், மக்கள் இனிஅரசியல் கட்சிகளின் கூட்டணிகளை நம்பியோ, இல்லை, இந்த அரசியல் கட்சிகளை நம்பியோ ,மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் மீது உள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள். அதற்குக் காரணம்?
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் தகுதியானவர்கள் மற்றும் தகுதியான தலைவர்கள் இல்லை. இதுதான் ,தற்போதைய தமிழ்நாட்டு அரசியலின் துரதிஷ்டவசம். எல்லோரும் youtube-ல் அரசியல் பேசுவது போல, பேசுவதற்கு வருகிறார்கள். ஆனால் ,செய்வது யார் ?என்று தான் இப்போது தமிழக மக்களுடைய ஒரே கேள்வி?

மேலும், அரசியலுக்கு !ரவுடிசம் செய்வதற்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை. அதற்கு ரவுடிகள் இருக்கிறார்கள். பேசி விட்டுப் போவதற்கும் , ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்வதற்கும்,அரசியல் கட்சியினர் தேவையில்லை. அரசியல் கட்சிகள் தேவையில்லை. மேலும் அரசியலில் இதுவரை செய்தது என்ன ?அதில்!நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன செய்தீர்கள் ? அதனால்! தமிழக மக்களுக்கு தேவை அரசியல் கட்சிகளில் சமூகப் பணியாற்றுவதற்கு தான் தேவையே தவிர,
தேவையற்ற பேச்சுக்களை பேசுவதற்கு ,அரசியல் கட்சிகளும் , கட்சியினரும் தேவையில்லை.
மக்களின் சமூகப் பணியாற்றுவதற்கு தான் அரசியல் கட்சியினர் தேவை! இனியாவது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இதை புரிந்து கொள்வார்களா?