காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் -மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கை .
தமிழ் நாட்டில்!வழக்கறிஞர்களுக்கே தகுதியில்லாத வர்கள் அர்த்தமில்லாமல் ,எப்படியும் பேசலாம் .அதேபோல், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் பேசலாம். அதேபோல் பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் எழுதலாம். அதனால் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தகுதி என்பது மிக முக்கியமானது. மேலும்,அந்த அடிப்படை தகுதி இல்லாத போலிகள் தான் தற்போது நாட்டில் எல்லாவற்றிலும் போட்டி போடுகிறது. இதற்கு என்ன காரணம்?

நாட்டில் காலத்திற்கேற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் திருத்தப் பட வேண்டும். காலாவதியான சட்டங்கள் மூலம், போலி வழக்கறிஞர்கள் ஜாதியையும், அரசியலையும் ,உள்ளே கொண்டு வந்து சமூக ஏமாற்றி, பிழைப்பது தொழிலாக்கி, மிரட்டுவது தொழிலாக்கி, நீதித்துறையின் மாண்பை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தவிர,தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தை என்ற பெயரில் சட்டம் தெரியாதவர்கள், போலி வழக்கறிஞர்களாக கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு,ரவுடிசம் செய்து கொண்டு,அரசியல் தெரியாதவர்களிடம், அரசியல் செய்து கொண்டு, அடியாள் வேலைக்கு தகுதியானவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு, ,அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு, யாரை ஏமாற்றும் வேலை? இவர்களுக்கு
சட்டத்தில் என்னென்ன பிரிவுகள்? இருக்கிறது என்று கூட தெரியாதவர்கள் .இவர்களெல்லாம் வழக்கறிஞர்கள் என்று பேசிக் கொண்டு ,வக்கீல் கோட்டு போட்டு ,வீதியிலே தகுதியான வழக்கறிஞர்கள் போல கத்துவார்களா? மேலும்,
அனைத்து நீதிமன்றங்களிலும் ,நீதிபதிகள் இதற்கு ஒன்று கூடி ,இந்த வழக்கறிஞர்களுக்கான தகுதியை நிர்ணயம் செய்யுங்கள். மேலும், ஒவ்வொரு தனி நபரும், தனிப்பட்ட முறையில் வழக்குகளை நடத்த தகுதியற்றவர்களை பார் கவுன்சிலில் உறுப்பினராக சேர்க்க செய்யக்கூடாது.தவிர
வழக்கே நடத்த தகுதியற்றவர்களை பார் கவுன்சிலில் எதற்கு அவர்களை உறுப்பினராக சேர்த்து ,வழக்கறிஞர் என்ற தகுதியை பார் கவுன்சில் கொடுக்கிறது? மேலும்,ஒவ்வொருவருக்கும் தகுதியை நிர்ணயம் செய்யப்பட்டால் தான், நீதித்துறையில் சாதிகள் உள்ளே வராது. அரசியல் கட்சிகள் உள்ளே வராது. அதனால்,

இப்போது இருக்கிற ஒட்டுமொத்த பார் கவுன்சில்களை கலைத்துவிட்டு வழக்கறிஞர்களின் தகுதியை நிர்ணயம் செய்து, அவர்களை உறுப்பினராக ஆக்குங்கள். நீங்கள் யாருடைய சீனியராக வேண்டுமானாலும். வேலை செய்யுங்கள். ஆனால் ,வழக்குகள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 வழக்குகளில் வாதாடி வெற்றி பெற வேண்டும்.

இது தவிர, குற்ற வழக்குகள், குற்றப் பின்னணி இல்லாதவராக இருப்பது பார்கவுன்சில் உறுப்பினராக மிக முக்கியமான தகுதி என்பதை நிர்ணயம் செய்யுங்கள். இவை அனைத்தும் சட்டமாக்கப்பட வேண்டும்.அப்போதுதான் நீதித்துறையை சீர் செய்து செயல் படுத்த முடியும் . .அப்போதுதான் இதற்கான ஒரு தீர்வு ஏற்படுத்த முடியும்.மேலும்,
பட்டம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னால், காசு கொடுத்து வாங்கி வந்து விட்டார்கள். இவர்கள் எங்கிருந்து? எந்தெந்த மாநிலத்தில் இவர்களுடைய வழக்கறிஞர் பட்டம் வாங்கி இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்யுங்கள். மேலும்,திருமாவளவன் வழக்கறிஞர் என்று பதிவு செய்திருக்கிறார் ,இதுவரையில் திருமாவளவன் எத்தனை வழக்குகள்? எந்தெந்த நீதிமன்றத்தில் ?இவர் வழக்குகளை வெற்றி பெற்று இருக்கிறார்? அதை வைத்து தான் ஒருவரை வழக்கறிஞர் என்று பார் கவுன்சிலில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும்,அதேபோல் எத்தனை வழக்கறிஞர்கள், தனிப்பட்ட முறையில் வழக்குகளை இவர்கள் நடத்தி இருக்கிறார்கள்? ஒரு வழக்கறிஞர் என்றால்! அதற்கான தகுதி என்ன? வழக்குகளை நடத்தக்கூடிய நபர்களுக்கு மட்டும்தான் வழக்கறிஞர்கள் என்ற பெயர். ஆனால் காசு கொடுத்து பட்டத்தை வாங்கி வந்தவர்கள் ,அத்தனை பேருமே வழக்கறிஞர்களாக ஆகிவிட்டார்கள்.
இவர்களின் தகுதி வழக்கறிஞர்களாகவும் இல்லை, அரசியல்வாதிகளாகவும், எதற்கும் தகுதி இல்லை , மேலும்,
இப்படி தகுதி இல்லாத ஒரு கூட்டம் உழைக்காமல் ,ரவுடிகளாக, சமூகத்தை ஏமாற்றுகிறார்கள் .இதற்கு என்ன காரணம்? நாட்டில் காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பது! அதாவது வழக்கறிஞர்களுக்கான தகுதி என்ன? ஒரு அரசியல் கட்சிக்கான தகுதி என்ன ?

இது இரண்டுமே தகுதி என்பது நிர்ணயம் செய்யாமல் சமூகங்களை ஏமாற்றுவது, திறமை அல்ல .அதற்கு சட்டம் துணை போவது, நீதித்துறையில் !நீதி தேவதையே நீதி கேட்டு போராடிக் போராடிக் கொண்டிருக்கிறது.
இதைவிட கொடுமை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் இந்த தகுதியற்ற வழக்கறிஞர்களால்,நீதித்துறையில் ! நீதியை நிலைநாட்ட முடியாமல், வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு இது மிகப் பெரிய அவமானம்.தவிர ,
இதே போல், சில முக்கிய துறைகளில் ,பத்திரிக்கை துறை, நீதித்துறை, காவல்துறை, இது மூன்றுமே சீர் செய்யப்பட வேண்டிய துறைகள். இது மூன்றுமே மக்களுக்கு மிக மிக அவசியமான துறைகள்.மேலும்,

ஒரு வழக்கறிஞர் என்றால் !குறைந்தபட்சம் ஒரு 10 வழக்குகள் ஆவது ஒரு தனிநபர் வழக்குகளை நடத்தி அதில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
ஆனால்,அதற்குத் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகள் போல் ,கூட்டத்தைக் காட்டுவது அறிவு சார்ந்த தொழிலுக்கு அர்த்தம் அல்ல.

மேலும், அம்பேத்கர் அரசியலிலோ அல்லது வழக்கறிஞர்கள் தொழிலிலோ ,கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்த சொல்லவில்லை. அதனால் ,அவர் பெயரை கொண்டு வந்து திருமாவளவன் மற்றும் அவரது கூட்டத்தினர் பேசுவதற்கும் ,அதே போல் பெரியார் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவதற்கும் ,இவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பட்ட போலிகளுக்கு சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படாமல் இருப்பது ,உழைப்பவனுக்கு எதிராக, ஊரை ஏமாற்றுபவனுக்கு சாதகமாக உள்ளது. இதையெல்லாம் கேட்டால் தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன், என்று டயலாக்? மேலும் ,நீ யாராக இருந்தாலும், சட்டத்தை பின் பற்றியாக வேண்டும். தகுதியை வரைமுறைப் படுத்தி, நீதித்துறையை சரி செய்யப்பட வேண்டும்.
இது தவிர,அதேபோல் பத்திரிக்கை துறையில், கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே சர்குலேஷன் சட்டத்தை கொண்டு வந்து, அதன் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,50 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட ,அதே சட்டங்கள் தொடர்கிறது.அங்கும் தகுதி என்பது நிர்ணயம் செய்யாமல் ,பொதுமக்களை ஏமாற்றம் துறையாக பத்திரிக்கை துறை இருந்து வருகிறது.மேலும்,

காவல்துறையும், மக்களின் பாதுகாப்பு மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாமல், அரசியல் கட்சியினரின் எடுப்பு வேலைக்கு பயன்படுத்திக் கொண்டிருப்பது, காவல்துறைக்கு அர்த்தம் அல்ல . தவிர,காவல்துறை அவர்களுடைய சுதந்திரத்தில்! ஆட்சியாளர்கள் தலையிடக்கூடாது. அரசியல் கட்சியினர் தலையிடக்கூடாது.மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் ,இவர்களுடைய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட கூடாது. அதற்கான சட்ட வரை முறைகள் கொண்டு வர வேண்டும். இந்த சட்டங்கள் அவசியம் திருத்தப்பட வேண்டும்.மேலும்,

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அந்த காலத்தில் மனசாட்சியுடன் வாழ்ந்த மக்கள், மனசாட்சியுடன் பேசிய மக்கள், அவர்களுக்கு தான் அந்த சட்டம். இப்போது அது என்னவென்று கேட்பவர்களிடம் இந்த சட்டம் பொருந்தாது.
அதேபோல் பி சி ஆர் என்ற வன்கொடுமை சட்டத்தை வைத்து குண்டர்கள் அரசியல் செய்வதற்கு அல்ல, மற்ற சமூகங்களை இழிவுபடுத்தி பேசுவதற்கு அல்ல, அதனுடைய நோக்கமே போய்விட்டது. அந்த சட்டத்தின் நோக்கம்! தற்போது,

தீண்டாமை என்பதை விட, அது மற்ற சமூகத்தின் கொடுமைக்கு பயன்படுத்தும் ,சட்டமாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை வைத்து பொய் வழக்குகள் போடுவது, அதை வைத்து மிரட்டுவது, இதற்கு பயன்படும் சட்டம் ஆக பி.சி.ஆர் (PCR Act) பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், இவர்கள்

தமிழ்நாட்டில் பிஜேபியும் ,ஆர் .எஸ் .எஸ் சும், ஏதோ தீண்டத்தகாத கட்சிகள் போல, இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தெரியாத அடி முட்டாள்களிடம் பேசுவதையெல்லாம், இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சட்டமும் தெரியாது. அரசியலுக்கும் அர்த்தம் தெரியாது .நீங்கள் எப்படி பேசினாலும், மற்ற சமூகங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.மேலும்,
தவறு செய்பவர்கள் ஜாதியின் பின்னால் ஒளிய கூடாது. தவறு செய்பவர்கள் அரசியல் கட்சியின் பின்னால் ஓடி ஒளிய கூடாது. இதற்கெல்லாம் சட்டத்தை மாற்றினால் தான் நாட்டில் !உழைப்பவன் முன்னேறுவான். ஊரை மாற்றுபவன் இந்த அளவுக்கு பேச மாட்டான். மக்கள் அந்த காலத்தில் உழைப்பை மட்டுமே நம்பி இருந்தார்கள். இப்போது யாரை எப்படி ஏமாற்றலாம்? அது சட்டத்தை ஏமாற்றலாமா? அல்லது மற்ற சமூகங்களை ஏமாற்றலாமா? ஜாதியை ஏமாற்றலாமா? இதுதான் இவர்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது.மேலும்,
இந்த போலிகளின் முகத்திரை சமூகத்தின் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அதனால்! நீதிமன்றம் தகுதியை தகுதியை நிர்ணயித்தால், இதற்குள் எல்லாம் அடங்கி விட்டது. அந்தத் தகுதி என்பது இந்த கூட்டத்திற்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஒவ்வொரு சமூகமும் ஏன் பட்டியலின சமூகமே கேட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களுடைய தகுதி என்ன ?அதில் எல்லாம் அடங்கி விட்டது.மேலும்,

தகுதிக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், அதற்கேற்ப சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். இன்று அந்த தகுதி தெரியாமல் தான் பேசுவது, தகுதி தெரியாமல் தான் அரசியல் கட்சித் தலைவனாகவும், தன்னை காட்டிக் கொள்வது, தவிர, தன்னை அரசியல் கட்சியினர் என்று அடையாளப்படுத்திக்கொள்வதும் ,அடி முட்டாளாக இருந்தால் அவர்களிடம் பேச வேண்டும்.
மேலும்,அரசியலுக்கு தகுதி இல்லை என்று நினைக்கிறார்கள். அதற்கும் தகுதி வேண்டும் .இவர்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு போராட வேண்டியவர்கள் , ஆனால்!இப்போது சமூகத்திற்கே, பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் பேசுவது ,ரவுடிசம் செய்வது, அதுதான் அரசியல் தகுதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இவர்களின் தகுதி.
இந்த உண்மைகளை மக்களிடம் சொல்ல வேண்டிய பத்திரிகைகள் , தொலைக்காட்சிகள்,பணத்திற்காக ,சுயநலத்திற்காக ,அரசின் சலுகை, விளம்பரங்களுக்காக, பக்க வாத்தியமாக இருப்பது!

மக்களை ஏமாற்றும் வேலை !சமூகத்தை ஏமாற்றும் வேலை! இதில் இருந்து தகுதி என்பது எவ்வளவு முக்கியமானது? மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், அந்த தகுதியை தேர்வு செய்யக் கூடிய சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப போலிகளிடம் இருந்து சமூகத்தை காப்பாற்ற அது அவசியம் தேவையானது . அது காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டிய சட்டமாக இருக்க வேண்டும்.மேலும்,
நாட்டில் லட்சம் பத்திரிகைகள் இருக்கிறது எந்த ஒரு பத்திரிக்கையாவது, இந்த சட்டங்களை !இந்த தகுதி நிர்ணயம் பற்றி ஒரு பத்திரிக்கை? ஒரு தொலைக்காட்சி? பேசி இருக்கிறதா? அது தான் இவர்களின் தகுதி! தகுதி என்பதை ஒவ்வொரு துறையிலும் நிர்ணயிக்க போது தான் அதில் இருக்கக்கூடிய பத்திரிகைகளின், தொலைக்காட்சிகளின் சமூக கடமை என்ன? அதுதான் நான்காவது தூண். ஆனால்! போலி அரசியலையும்,இந்தப் போலிகளை அரசியல்வாதிகளையும் ,மக்களிடம் விளம்பரம் படுத்தி , அரசியல் வியாபாரம் செய்வது,மக்களை ஏமாற்றும் வேலை! அது இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சியின் வேலை அல்ல .அது நான்காவது தூணின் கடமையல்ல.

எனவே , இந்த உண்மைகள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவிர, நீதிபதிகள் வழக்கறிஞர்களின் தகுதியை அவசியம் நிர்ணயம் செய்ய சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதேபோல் பத்திரிக்கை சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும்.அதேபோல், காவல் துறையின் சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். காவல்துறையின் சுதந்திரத்தில் ஆட்சியாளர்களோ, அரசியல் கட்சிகளோ தலையிடக்கூடாது.

இவர்களுக்கு பாதுகாப்பும், இவர்களுடைய கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ள தான், மக்கள் இவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுங்கள் என்று வாக்களித்திருக்கிறார்களா? அதற்கு தான் மக்கள் வரிப்பணத்தில் இவர்களுக்கு சம்பளமா? இப்படிப்பட்ட சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப ,சட்டங்கள் மாற்றப்படவில்லை என்றால்! சமூக மாற்றம் இருக்காது.
எனவே ,காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்படுவது மிக, மிக, அவசியமானது.