தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளின் முதலாளிகள், தங்களுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் , வடமாநிலத்தவர்களை வரவழைத்து ஆண்டு கணக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பவர்கள் இவர்கள்தான்.

இதை எந்தெந்த கட்சியினர்? தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், போன்றவற்றில் பணியாற்றக் கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை கணக்கெடுத்து பாருங்கள்?

இப்போது அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கக் கூடாது. இது சட்டப்படி சொல்ல முடியாது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள், இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, இங்கே குடியுரிமை கொடுக்கக் கூடாது என்பதுதான் இவர்களுடைய இந்த வாதம்.

இதற்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறது. அங்கே ஒரு நாட்டில் இருக்கும் மாநிலத்தில் வசிக்கக்கூடிய வடமாநிலத்தவர்களுக்கு இங்கே குடியுரிமை கொடுக்கக் கூடாது என்கிறார்கள்.

இதைதான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. அரசியல் களம் சுயநலம் ஆகிவிட்டது. அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், தற்போது பொதுநலத்தை விட ,தங்களுடைய சுய லாபங்களுக்காக தான் போராடுகிறார்கள். இதற்கு அரசியல் கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு போராடுவது இருக்கின்ற மக்களை ஏமாற்றும் வேலை.

இப்படிப்பட்ட வேலைக்கு மக்களிடம் உண்மையை சொல்ல, தகுதியற்ற ஊடகங்கள், இதை செய்தியாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பரப்பரை செய்கிறது. இதில் சோசியல் மீடியாக்களும், அடங்கும்.
இங்கே மக்கள் என்ற ஒரு பொது நலம் மாற்றப்பட்டு, அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியினர், அவர்களுக்கான சுயநல அரசியல் களமாக ஆகி விட்டது. அது மாற்றப்பட வேண்டும். அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

இதேபோல் ராகுல் காந்தி மம்தா பானர்ஜி நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களின் உள்குத்து வேலை இதுதான். அதாவது முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டு ராகுல் காந்திக்கு இந்திய நாட்டின் மீது ஒரு அக்கறையோ ,பொது நலமோ ,இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளை சொல்வது அவருடைய அரசியல் ஆகிவிட்டது.

அதோடு நிற்கவில்லை .அது அரசியல் தெரியாத மக்களையும், இதுபோல் வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லிம்களையும் ,வைத்து இங்கு குடியுரிமை கொடுத்து அவர்கள் நாட்டை பிடிக்கலாம் என்று போராடுகிறார்கள்.

அந்தப் போராட்டத்தின் உள்குத்து வேலையும் இதுதான். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடிவிட்டு குடிகாரர்களையும், போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர்களையும், தொடர் மருத்துவ சிகிச்சை மூலம் போதப் பொருள் கலாச்சாரத்தில் இருந்து அவர்களை மீட்டு ,அவர்களை திருத்த வேண்டும்.

அவர்களுக்கும் இங்கு வேலைவாய்ப்பை கொடுத்து தங்க வைக்கிறார்கள். பிறகு ஓட்டுரிமை வந்தால் ,அவர்கள் நமக்கு ஓட்டு போட்டால் பரவாயில்லை .பிஜேபிக்கு ஓட்டு போட்டு விட்டால், நம்முடைய அதிகாரம் கையில் போய்விடும் என்பதை கருத்தில் கொண்டு அதற்காக போராடுகிறார்கள். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் சுயநலம்.மேலும்,

இந்த வாக்காளர் திருத்தத்திற்கு மட்டும் இவ்வளவு போராடுகின்ற அரசியல் கட்சிகள், படித்த இளைஞர்களுக்காக, தமிழ்நாட்டில் இருக்கின்ற மத்திய அரசு வேலை வாய்ப்புக்காக என் போராடவில்லை என்பது தான் தமிழக இளைஞர்களின் கேள்வி ? இது மாற்றப்பட வேண்டும்.மேலும்,

மத்திய அரசு தமிழ்நாட்டில் இருக்கின்ற படித்த இளைஞர்களை மத்திய அரசு பணியில் நியமனம் செய்ய வேண்டும் இப்படித்தான் கடந்த காலங்களிலும் இருந்தது இப்போது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால், படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
அது மட்டுமல்ல, வட மாநில இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்காக தேர்வில் எப்படி எல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பது பற்றிய வீடியோக்கள் ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இதையெல்லாம் மத்தியரசு தடுத்து அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக படித்த இளைஞர்களின் கோரிக்கை.