
இருப்பினும் இந்த வெற்றியை பீகாரிலே கொண்டாடக்கூடாது என்று பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல். காரணம் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிலையில் இருப்பதால் இந்த வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று பிஜேபியின் தலைமை தெரிவித்துள்ளது.
இந்த வெற்றிக்கு காரணம் மக்கள் அளித்த ஆதரவு தான் . ஆனால், எதிர்கட்சிகள் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்வது வழக்கம்தான். ஏனென்றால் தோல்வியின் தாக்கம் இருக்கிறது. இப்போது தேர்தல் ஆணையத்தை குறை சொல்லலாமா? இல்லை ,மக்களை குறை சொல்லலாமா? இல்லை ஊடகங்களை குறை சொல்லலாமா? யாரை குறை சொல்லி, அதை சரி செய்வது என்பது தான் எதிர்க்கட்சிகளின் வேலையாகி விட்டது. எல்லா மக்களும் முட்டாள்கள் இல்லை என்பதை பீகார் சட்டமன்றத் தேர்தல் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சொல்லுகின்ற வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போடுவார்கள். அங்கே யாருடைய வாக்குறுதி நம்பிக்கையானது ?என்று நம்பி வாக்களித்து இருக்கிறார்கள் பீகார் மக்கள். அதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.மேலும் ,

பீகாரில் நிதீஷ் குமார் மற்றும் பிஜேபினுடைய கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதே தேர்தல் வாக்குறுதி காங்கிரஸ் கூட்டணி கட்சியும், கொடுத்திருக்கிறது .அந்த வாக்குறுதியின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் இந்த தேர்தலின் முக்கிய நோக்கமாக பார்க்க வேண்டி உள்ளது.
தவிர ,தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கட்சி ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை. மேலும்,ஒரு தேர்தல் வியூக வகுப்பாளரே ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாமல் இருக்கிறது என்றால், மக்கள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறார்கள்? என்பது தான் பீகார் மக்களின் தேர்தல் நிலவரம்.

அது மட்டுமல்ல, அவர்கள் எந்தெந்த அரசியல் கட்சி மக்களுக்கானது? என்பதை சரியான முறையில் தேர்வு செய்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி அவர்கள் வாக்களிக்கவில்லை. இந்த நாட்டுக்கும் ,மக்களுக்கும் அர்ப்பணிப்பு உள்ள அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.மேலும்,

பிஜேபி நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்த மக்களின் எதிர்காலத்திற்காக, நாட்டுக்காக அதன் நோக்கம் இருக்கிறது. விவசாயிகளின் பாதுகாவலனாக மோடி இருக்கிறார். அவர் விவசாயிகளுக்காக செய்து வருவதை எண்ணி தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினர் மோடியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள்.மேலும்,

இவர்களிடம் அது இல்லை. அதுதான் எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய தோல்வி. அடுத்தது இந்த வெற்றி இனி இந்திய அளவில் பிஜேபிக்கு மக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு மாநிலத்தில் இருக்கக்கூடிய பிஜேபியின் நிர்வாகிகள், அக்கட்சியினர் மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

தகுதி இல்லாத தமிழ்நாட்டு பிஜேபி நிர்வாகிகள் போல், இருந்தால் நிச்சயம் எத்தனை ஆண்டுகளானாலும், ஆட்சியைப் பிடிக்க முடியாது.
அதற்கு தகுதியான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். இது பற்றி தமிழ்நாட்டின் நிலவரத்தை அடுத்த செய்தியில்…!