தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக ஆட்சியில்! எதிர்க்கட்சிகள் முதல் சோசியல் மீடியாக்கள் வரை இந்த குற்றச்சாட்டு அதிகரித்திருக்கிறது.

இதற்கு யார் முக்கிய காரணம்? பெண்கள் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் .அது உண்மை. ஆனால், அது எதனால் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? அதற்கான முக்கிய காரணம் என்ன? இதைப் பற்றி ஆய்வு செய்யும் போது தான், இதற்கான பல உண்மைகள் கிடைக்கிறது.

பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் , மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதை மேலோட்டமாக பார்த்தால், ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் குறை சொல்லி, இதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

இது தமிழ்நாட்டில் இப்போது ஒருவரைப் பற்றி, ஒருவர் ,குற்றங்களையும், குறைகளையும் சொல்லி, இவர்கள் யோக்கியவான்களாக காட்டிக் கொள்வார்கள். இந்த அரசியல் தான் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால்,

இந்த விஷயத்தில் மட்டும் பெண்கள் செய்கின்ற தவறுகள் அடிப்படையில் தான், இந்த பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கிறது. அது கல்லூரி மாணவிகளாக இருக்கட்டும், பள்ளி மாணவிகளாக இருக்கட்டும், குடும்பப் பெண்களாக இருக்கட்டும் ,இவர்கள் அத்தனை பேருக்கும் ,அவர்கள் செய்த தவறு மறைத்து விடுவார்கள். பழி மட்டும் வேறு ஒருவர் மீது ,போட்டுவிட்டு பெண்கள் தப்பித்து விடுவார்கள்.

இது அவர்கள் பக்கம் நியாயத்தை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உலகம் அதை தான் நம்பும். இங்கே சில பேருக்கு இது ஒரு கசப்பு தரும் செய்தியாக கூட ,அவர்களுக்கு இருக்கும்.

ஏனென்றால் உண்மை அதுதான். மற்ற ஊடகங்கள் போல், மக்கள் அதிகாரம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக நிறைய பேர் பார்ப்பார்கள் என்ற ஆர்வத்தோடு செய்தி போடும் வேலையும் ,எங்களுக்கு இல்லை.

பெண்கள் தங்களுடைய பாதுகாப்பை அவர்கள்தான் முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆண்கள் பக்கம் சாய்ந்து விட்டு, அவன் நல்லவனா ?கெட்டவனா? எதுவும் தெரியாது. அவன் கூப்பிட்டால் போய்விடுவார்கள். பேச்சில் மயங்கி ஏமாறும் பெண்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் . இவர்களை மயக்க தெரிந்த ஆண்களும் பல பேர் இருக்கிறார்கள். அதில் அவர்கள் கைவந்த கலைஞர்கள். அவர்களுக்கு நடிக்க தெரியும் .நடிப்பில் ஏமாறுவார்கள்.

இப்படி இவர்கள் செய்கின்ற தவறை எல்லாம் மறைத்து விட்டு, அவர்கள் மேல் பழியை போட்டுவிட்டு ,இவர்கள் எதுவுமே நடக்காதவர்கள் போல காட்டிக் கொள்வார்கள். முதலில், இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய பேஸ்புக், வாட்ஸ் அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் இவை அத்தனையும் இந்த காதல் விவகாரத்திலும் காம விவகாரத்திலும் செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

வீட்டில் இருக்கும் போது கூட சில பெண்கள் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது கூட அவர்களுடைய பெற்றோர் இந்த பெண் எங்கு பேசிக் கொண்டிருக்கிறது யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறது அதை பற்றி கேட்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள். கேட்பவர்களும் இருக்கிறார்கள். சில பெற்றோர்கள் எப்படியோ ஒன்னு ,இந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு பையன் கிடைத்து, கல்யாணம் பண்ணிக் கொண்டால் போதும் ,என்று கூட நினைக்கிறார்கள்.

ஏனென்றால் இன்றைய தங்கத்தின் விலை அப்படி இருக்கிறது. இன்று பெண்களுக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 10 சவரன் எதிர்பார்க்கிறார்கள். அது இன்று விற்கும் விலைவாசிக்கு பெற்றோர்களால் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இன்று பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். எத்தனையோ குடும்பத்தில் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் பெண்களின் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தும் போது இந்த பெண் பிள்ளைகளை எப்படி கட்டிக் கொடுப்பார்கள்? இப்படி பல சூழ்நிலைகள் இதற்கு காரணமாக அமைகிறது.

ஏழ்மை, வறுமை ,ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் டிவி சீரியல்களில் வருகின்ற நிகழ்ச்சிகள் இப்போது வாழ்கின்ற புதிய சினிமா படங்கள் இவை அத்தனையுமே கலாச்சார சீரழிவுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. அதையும் தாண்டி இப்போது பெண்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் தன்னுடைய காதலனையும் மணமகனையும் தேர்வு செய்யும் இடமாக அமைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? இது முற்றிலும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான ஒன்று.

ஒரு பெண் தன்னுடைய கணவனை தேர்வு செய்யும் போது ,அவனுடைய குடும்பம் எத்தகையது? அவன் எப்படிப்பட்டவன்? அவன் என்ன வேலை செய்கிறான்? எதுவும் தெரியாது. அவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறான்? எதுவும் தெரியாது. ஆனால் ,அவன் சொல்லும் பொய்களை மட்டும் உண்மை என்று நம்பி, இன்று எத்தனையோ பெண்கள் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்து விட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கோவையில் நடைபெற்ற ஒரு பெண்ணின் பாலியல் வன்கொடுமை பற்றி அதிகமாக அரசியல் கட்சிகளும் சோசியல் மீடியாக்களும் பேசிக் கொண்டிருக்கிறது. இரவு வேளையில் அந்தப் பெண்ணுக்கு காதலனுடன் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

அது ஒரு கிரிமினல் ஏரியா என்று வெளிவரும் தகவல். அப்படி இருந்தும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், இரவு 10 மணிக்கு மேல் அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? இப்படி எல்லாமே இவர்கள் செய்கின்ற தவறு, இறுதியில் ஆட்சியாளர்கள் மீது கொண்டு போய் நிறுத்துகிறது. காவல்துறை மேல் போய் அந்தப் பழி விழுகிறது. ஏதோ தவிர்க்க முடியாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்து விட்டது என்று சொல்ல முடியாது. சம்பவம் நடப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

அதேபோல் இந்த சம்பவத்தின் ஒவ்வொரு பின்னணி குறித்து ஆய்வு செய்து பாருங்கள் அப்போதுதான் இந்த உண்மை தெரியும். இவர்களுடைய பாதுகாப்பு இவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்ய தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இருக்கிறது. அதனால், என்ன நன்மை? என்ன பயன் என்ன? இழப்புக்கள் சரி செய்யப் போகிறார்களா? எதுவும் கிடையாது.

எல்லாம் வாயிலே பேசிவிட்டு ,போக வேண்டியது தான். இப்போது அது ஒரு அரசியல் ஆகிவிட்டது. அதாவது குரல் கொடுக்கறதுக்கு ஒரு அரசியல். ஏன் அது குடுக்காம தான் போனா என்ன? கொடுத்ததினால் என்ன வந்தது ?கொடுக்காமல் போனால் என்ன போய் விட போகிறது?
இனிமேல் ஆவது பெண்கள் உங்களுடைய பாதுகாப்பை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். யூடியூபில் சொல்லுகின்ற பொய்களைப் பார்த்து, அதில் உண்மைகளும் வரும், எது உண்மை? எது பொய்? என்பது எங்களைப் போன்றவர்களுக்கு தெரியும். உங்களுக்கு எப்படி தெரியும்? ஊடகங்களே அந்த நிலைமைதான்.

அதனால் இனிமேலாவது பள்ளி மாணவிகளும் சரி ,கல்லூரி மாணவிகளும் சரி ,மற்றவர்களும் குடும்பத்தில் அவரவர் பெற்றோர்கள் உங்களுடைய பிள்ளைகள் செல்போன் எப்படி உபயோகப்படுத்துகிறார்கள்? யாரிடம் அதிகம் பேசுகிறார்கள் ?இதை எல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்து, அவர்களை தவறான பாதையில் செல்லாமல், திருத்துவது உங்கள் கடமை .இது அரசாங்கத்தின் வேலை அல்ல.

உங்கள் ஆடையை மூடி உங்கள் உடம்பை எப்படி பாதுகாக்கிறீர்களோ, அதே போல் உங்கள் பெண்மையின் பாதுகாப்பும், உங்களிடம் தான் இருக்கிறது. இது ஒரு கசப்பான உண்மை தான் .இருந்தாலும் நோய்க்கு மருந்து கசப்பாகத்தான் இருக்கும். பிறகு ,அதுதான் நோயிலிருந்து உங்களை வெளியில் கொண்டு வரும் .அப்படிதான் இந்த செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
எனவே, பெண்கள் நடிகையை பார்த்து உடை அணிவது, ஆணாதிக்கம் என்று சொல்லி ஆண்களுக்கு எதிராக போட்டி ,போட்டு நெருங்கி பழகுவது, காதல் என்ற பெயரில் கர்ப்பை இழப்பது, ஆசை வார்த்தைகளுக்கு பலியாவது, இவை அத்தனையும் கலாச்சார சீரழிவு.

இதை அரசாங்கம் சினிமா, சீரியல், செல்போனில் வருகின்ற காட்சிகள் ,இவை அத்தனையும் இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறது . அவர்களுக்கு புரியாத வயது, இளமை அறியாதது.இதை தடை செய்ய வேண்டும்.