திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு ஏழை மாணவனான தர்ம சாஸ்தா நன்றாக படிக்கக்கூடிய பையன் . நல்ல வாழ்ந்த குடும்பமாக இருக்கிறது.
இன்று அவர்களுக்கு சொத்து சுகம் எதுவுமே இல்லை. அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வேதனையானது. பல சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருக்கின்ற முருகவேல் என்ற அவருடைய தந்தை சொல்லி தான், எனக்கு கிடைத்த தகவல். மேலும், அவரைப் பற்றிய சில தகவல்,

இவர் காதல் திருமணம் செய்து கொண்டு, ஆந்திராவுக்கு சென்று இருக்கிறார். இவ்வளவு காலம் ஆந்திராவில் ஏதோ கூலி வேலை செய்து பிழைத்து இருக்கிறார்கள். முருகவேல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அவருடைய மனைவி பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர். இப்போது திண்டுக்கல் பக்கத்தில் ஏதோ ஒரு தோட்டத்தில் இருவரும் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
நான் கேட்டேன் உங்களுக்கு யாராவது உறவுகள் இருக்கிறார்களா என்று எனக்கு அந்த ஊரே சொந்தம் தான் சார். எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் உதவி செய்ய ஒருவரும் இல்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை .அப்படிப்பட்டவர்களுக்கு அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இது நான் வணங்குகின்ற என் தெய்வத்துக்கு நான் வைக்கின்ற கோரிக்கை.மேலும்,
இது எல்லாராலும் ஒருவருக்கு உதவி செய்ய முடியாது. உதவி என்று செய்யக்கூடிய மனம் உள்ளவர்கள் தான், இதை செய்ய முடியும். எத்தனை கோடி வைத்து இருந்தாலும், பிறருக்கு பத்து ரூபாய் கூட உதவி செய்ய மாட்டார்கள்.
இதையெல்லாம் கண் கூடாகத் தான் பார்க்கிறோம். மேலும், பல அறக்கட்டளைகள் இருக்கிறது. பல உயர் அதிகாரிகள் நினைத்தால், இதற்கு உதவி செய்யலாம்.

அரசியல்வாதிகள் செய்வார்களா ?என்பது எனக்கு தெரியாது. செய்தால் அவர்கள் லட்சத்தில், கோடியில், ஒருவராகத் தான் இருப்பார்கள்.மேலும்,
இப்படிப்பட்ட ஒரு ஏழை மாணவனை படிக்க வைத்தது மிகப் பெரிய புண்ணியம் அவர்களுக்கு போய் சேரும் . தவிர,இந்த பையனுக்கு உதவி செய்யுங்கள்.
அந்த குடும்பம் உங்களை மனதார வாழ்த்தும். அது உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், அதன் பலன் போய் சேரும்.நல்ல உள்ளங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் .மேலும், அவர்களைப் பற்றிய விலாசம் ,போன் நம்பர் ,எல்லாம் கீழே அதை இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் மனமார்ந்த நன்றி.
Son :Dharma sastha phone number 9597338937; father Muruggavel number : 8148908874 ;9573358874