விஜயின் தமிழக வெற்றி கழகம் ,இதுவரை ஒரு தேர்தல் களத்தில் கூட நின்று, அதனுடைய வாக்கு வங்கி எத்தனை சதவீதம் ?என்பது நிரூபிக்காத ஒன்று. மேலும்,
50 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் அரசியல் ஆட்சி ,அதிகாரம் ,தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இப்போது கரூர் கூட்டத்தைப் பார்த்து விஜய் தன்னுடைய தலைமையில், அதாவது தான் சி .எம். என்ற தோரணையில் கூட்டணி அமைக்க முற்பட்டால் ! அதை அதிமுகவும்,பாஜகவும் எப்படி ஏற்றுக்கொள்ளும்?

மேலும், விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு என்று தீர்மானிக்க படாமல் இருப்பது கூட்டணியின் பலத்தை எப்படி தீர்மானிக்க முடியும்? தவிர, கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை சந்தித்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் வாக்கு வாங்கி எத்தனை சதவீதம்? தற்போது அது எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது? அல்லது குறைந்துள்ளது ?இந்த இரண்டு வித்தியாசத்தில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இருக்கிறது.

ஆனால், விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு? என்று தீர்மானிக்க முடியாமல் இருக்கின்ற ஒன்று. இந்த நிலையில் தான் விஜய் ஜோசப்பால் சி.எம். என்று பேசுவது, அது எந்த காலத்திலும், விஜய்யால் சி.எம் ஆக முடியுமா? என்ற கேள்விக்குறி தமிழ்நாட்டில் இருக்கும்.

இவர் சினிமாவை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார். ஊடகங்கள் பல பொய்களை ஆளுக்கு தகுந்தார் போல், பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டு இருக்கும். நமக்கு அவர்கள் சொல்லும் அந்த கணக்குகள் தேவையில்லை. அதேபோல் தனியார் கம்பெனிகள் சொல்லக்கூடிய சர்வே ரிப்போர்ட் அதுவும் தேவையில்லை.தவிர,

தமிழ்நாட்டில் விஜயின் ரசிகர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்? மேலும் இவரைப் போல் பல சினிமா நடிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் . அவர்கள் எல்லோருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதில் விஜயின் ரசிகர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்? அந்த கணக்கெடுத்தால், ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25,000 - 30,000பேர் இருப்பார்கள். தமிழக முழுதும் 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வைத்துக் கொண்டால் கூட இவ்வளவுதான் இவர்களுடைய ரசிகர்களின் அளவு.

ஆனால், விஜய்யை வழிநடத்தக்கூடிய அல்லது ஆலோசனை சொல்லக்கூடிய அரசியல் ஆலோசகர்கள் தவறான ஒரு கணக்கு தான் அவருக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விஜய்க்கு !கிறிஸ்தவர்களின் வாக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால், இவருடைய தந்தை இவர் ,எல்லாமே கிறிஸ்துவ மதத்தில் இருப்பதால், அந்த வாக்கு வங்கியும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த அடிப்படையில் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி ,இவருக்கு அதிகபட்சமாக ஒரு 30 லட்சம் வாக்குகள் வரலாம்.

அந்த வாக்குகளும் பல அரசியல் கட்சிகளுக்கு தற்போது பிரியும். அப்படி பிரிகின்ற வாக்குகள் ஒரு பக்கம் அதிமுகவுக்கு பிரியும், இன்னொரு பக்கம் திமுகவுக்கு புரியும், பிஜேபிக்கும் பிரியும். இந்த முறை சிறுபான்மையினர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, அல்லது , இருக்காது.

ஏனென்றால் ,அந்த மக்கள்! அவர்களுடைய மத கூட்டங்களில், மத போதகர் சொல்லக்கூடிய ஒரே வார்த்தையால், பணத்திற்காக வாக்களித்துக் கொண்டிருந்தார்கள். அது இஸ்லாம் மதத்திலும் அப்படி தான் ,கிறிஸ்தவ மதத்திலும் அப்படித்தான், இப்போது அவர்களுக்குள் பல அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும், நகரத்திற்கும், அந்த வாக்குகள் பலவிதமாக பிரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி 2026 தேர்தல் அரசியல்! கட்சிகளுக்கு கடுமையான போட்டி என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து பத்திரிக்கையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.மேலும்,
திமுக மற்றும் அதனுடைய ஊடகங்களின் பொய்களை நம்பி மக்கள் வாக்களித்து, இனி ஏமாற மாட்டார்கள். இப்பொழுது அவர்கள் நம்பி இருப்பது பணத்தை மட்டும் தான், நம்பி இந்த தேர்தல் களத்தை அவர்கள் சந்திப்பார்கள். இவர்களுடைய அத்தனை திட்டங்களும் தோல்வியான திட்டங்கள், மக்களுக்கு நிர்வாகம் அனைத்திலும் ஊழல் , மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவு கடன் சுமை,இது தவிர,

வரி உயர்வு, மின்சார உயர்வு ,சொத்து வரி உயர்வு ,இப்படி பல உயர்வுகளை மக்களுக்கு கடினமான சுமையை ஏற்படுத்தியுள்ளது.இது ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் அரசு ஊழியர்களுக்கு சொன்ன வாக்குறுதிகள் எதுவும் செய்யவில்லை .அதனுடைய எதிர்ப்பு மற்றொரு பக்கம் ,
அதனால், திமுகவின் தேர்தல் களம் கடும் போட்டியாக இருக்கும் என்பது மட்டுமல்ல வெற்றி என்பது கேள்விக்குறி தான் .மேலும், திருமாவளவனும், காங்கிரஸும் விஜய்யுடன் கூட்டணி வைத்தால், விஜய் பெரும் பான்மையை பெற முடியாது. திருமாவளவனுக்கும், காங்கிரசுக்கும் தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்கு வங்கி? என்பது விஜய்க்கு தெரியாது.

மேலும், 2026 தேர்தல் களம்,அதிமுக, பிஜேபி ,பாமக கூட்டணிக்கு தான், அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுவே மெஜாரிட்டியாக வருமா ?என்ற கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் !அந்த அளவுக்கு கடுமையான போட்டிகள் இருக்கும்.தவிர,

அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக என்ற ஒரு கட்சி பேனரும், இரட்டை இலை என்ற ஒரு சின்னமும், ஜெயலலிதா, எம்ஜிஆர் என்று செல்வாக்குள்ள மக்கள் தலைவர்களின் கட்சி என்ற ஒரு லேபில் தான் .மேலும், பிஜேபிக்கு மோடி என்ற ஒரு பிம்பம் இதை வைத்து தற்போது வாக்கு சதவீதம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? என்பது இன்றுவரை ஒரு கேள்விக்குறி தான்.

ஏனென்றால், இவர்கள் ஊடகங்களில் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். மக்களை களத்தில் சந்திக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கேட்கவில்லை. திமுகவை மட்டுமே குறை சொல்லி, அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து விடுமா? இப்படித்தான் இவர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல் வேல்முருகன், அடுத்தது அண்ணாமலை வரை எத்தனை பேர் இதற்கு தலைமை ஏற்றிருந்தாலும், இவர்களின் அரசியல் ! ஊடக அரசியல் தான் . இவர்கள் களத்தில் நின்று செயல்படவில்லை. அவரவர் வேலை மட்டும் பார்த்துக் கொண்டார்கள்.

மேலும், இவர்கள் எல்லோருக்கும் மைக் அரசியல் தான் இவர்களுக்கு தேவைப்படுகிறது. கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் மைக்கை நீட்டி விட்டால் போதும், அதிலே மக்களுக்கு எல்லாம் கிடைத்து விடும் என்று ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டே அரசியல் செய்து கொண்டிருப்பார்கள்.

இதில் வானதி சீனிவாசன் மைக் எங்கே? என்று தேடிக் கொண்டு போவார். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அமிஷாவும் ,மோடியும் இவர்கள் ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து, மக்களின் குறைகளை கேட்டு, என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை இன்றுவரை அவர்கள் கேள்வி கேட்கவில்லை. அதனால் தான், தமிழ்நாட்டில் பிஜேபி வளராமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.மேலும்,

நைனார் நாகேந்திரன் கூட அதே பாணியில்தான் போய்க்கொண்டிருக்கிறார். என்ன அதிகம் பேசவில்லை இவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் அது தான். யாருமே இவர்கள் எளிமையாக மக்களை அணுகக்கூடிய தலைமைக்கு வரவில்லை. ஒருவேளை நயினார் நாகேந்திரன் அணுகினாலும், இவருடைய உதவியாளர்கள் அதிக பந்தா காட்டுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தொலைக்காட்சியில் படத்தைக் காட்டுவது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . தவிர,பெரிய பத்திரிகைகளில் செய்திகள் வருவது தான் இவர்களுடைய அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசியல் களங்கள் எல்லாம் மாறிவிட்டது என்பது இவர்களுக்கு இன்னும் புரியவில்லை.

அப்படி பார்த்தால், திமுக விடம் இல்லாத ஊடகங்கள் இல்லை. எவ்வளவு பொய் செய்திகளை சொல்லி, மக்களை ஏமாற்றி வருவது? மக்களும் எத்தனை நாளைக்கு ஏமாறுவார்கள்? உண்மை புரிந்து கொண்டார்கள்.
எந்தெந்த ஊடகங்கள் ?எவ்வளவு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறது? உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகள்? இணையதளங்கள் எத்தனை? என்பதை அவர்களும் படிக்கிறார்கள் அல்லவா? எது உண்மை? எது பொய்? என்று புரிந்து விட்டது.

மேலும் , விஷயத்திற்கு வருவோம், விஜய் ஒரு தவறான அரசியல் கணக்கில் போனால், வெற்றி வாய்ப்பு அதிகம் பாதிக்கும். காங்கிரசை நம்பியும், திருமாவளவனை நம்பியும், கூட்டணி வைத்தால், அது பலம் வாய்ந்த கூட்டணி அல்ல .அது பலம் இல்லாத கூட்டணி என்பதை விஜய் பின்னாளில் புரிந்து கொள்வார். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. இது தவிர,

திருமாவளவன் விடுதலை சிறுத்தைகளுக்கு அந்த பட்டியலின சமுதாயத்தில் எவ்வளவு ஓட்டு வரும்? இவரெல்லாம் ஊடகங்களில் அரசியல் செய்து கொண்டிருப்பவர். தனித்து விட்டால், தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட டெபாசிட் வாங்க மாட்டார்.

அரசியல் தெரியாத கூட்டங்கள் திருமாவளவனுக்கு இரண்டு முறை சிதம்பரம் தொகுதியில், வேற்று சமுதாயமும் வாக்களித்து இந்த திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கி இருக்கிறார்கள். தவிர,இந்த வழக்கறிஞர் பிரச்சனைக்கு பிறகு, திருமாவளவன் எந்த கூட்டணியில் நின்றாலும் , பட்டியலின சமூகத்தை தவிர்த்து,ஒட்டுமொத்த சமுதாயமும் எதிர்த்து வாக்களிக்கும் என்பது உறுதி .மேலும்,

காங்கிரஸ் கட்சியில் செல்வப் பெருந்தகையை பார்த்து யார் ஓட்டு போடுவான்? அரசியல் தெரியாதவன் தான் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் .ராகுல் காந்தியை பார்த்து யார் ஓட்டு போடுவான் ?இன்னும் அரசியல் புரியாமல் , அதன் அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பவர்கள் தான் வாக்களிப்பார்கள். இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தவர்களுக்கு அரசியலும் தெரியாது.
தவிர, எவ்வளவு சுயநலம்? மிக்கவர்கள் என்பது தான் அந்த வாக்குகளின் எடுத்துக்காட்டு. மேலும், இப்படி அரசியல் கட்சிகளின் தகுதி , தரம் தெரியாமலும் ,வேட்பாளர்களின் தகுதியும், தரமும் தெரியாமலும், தான் தமிழ்நாட்டில் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் குடிகாரர்களுக்கு எதுவும் தெரியாது. பாட்டில் ஒன்று தான் தெரியும். அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்.

அதேபோல், பணத்துக்கு ஓட்டு போடுபவர்களுக்கு வேட்பாளரின் தகுதியும், தரமும், அதேபோல் அரசியல் கட்சியின் தரமும் தகுதியும், தெரியாது. கார்ப்பரேட் பத்திரிகைகளின் நிருபர்கள் அவர்கள் பேசுவதை எல்லாம் செய்திகளாகி பத்திரிகை என்று நீட்டுவார்கள். இதில் எவ்வளவு உண்மை? எவ்வளவு பொய்? இவர்களுக்கு தெரியுமா? இந்த போலி அரசியலில் மக்கள் ஏமாறாதீர்கள்.மேலும்,

இந்த அரசியல் கட்சிகளின் தகுதி கூட தெரிந்து கொள்ளாமல் வாக்களித்துக் கொண்டிருக்கும் கூட்டம் 45 சதவீதம் இருக்கிறது. ஒரு பக்கம் பணம் ,மற்றொரு பக்கம் ஜாதி, இது தவிர்த்து தமிழ்நாட்டுக்கு எந்த கூட்டணி வந்தால், நல்லது என்பதை சிந்திக்க கூடிய மக்கள் ?அவர்கள்தான் தற்போது தமிழ்நாட்டின் தேர்தல் களத்தை நிர்ணயிக்கப் போகிறார்களா? எனவே , 2026 தேர்தல் களம் தமிழ்நாட்டில் கடும் போட்டியாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.