பிரச்சனைகள் என்ன? என்பதை இங்கு உள்ள மத்திய அரசின் செய்தித்துறை இயக்குனர் அருண் குமாரிடம் எந்த எந்த பத்திரிகைகள் அதற்கு தகுதியானவை என்பதை கேட்டறிந்து, எந்தெந்த பத்திரிகைகளுக்கு, அரசின் அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சனை.

மேலும்,தேர்தல் நேரத்தில் திமுக அரசு தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மற்ற தகுதியான பத்திரிகைகளை கணக்கில் வைக்காது .
அதனால் அதை சரி செய்தால் தான் தேர்தல் நேரத்தில் ,உண்மைகள் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். இந்த 2026 தேர்தலில் திமுக தன்னுடைய அராஜகத்தை உச்சகட்ட நிலைக்கு கொண்டு செல்லும் அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை.

இதையெல்லாம் வெளிப்படுத்த அவர்களுக்கு தேவையான ஊடகங்களை வைத்துக் கொண்டால், என்ன நடந்தாலும் ,அந்த செய்திகள் வெளியிலே வராது. தற்போது கூட தமிழ்நாட்டில், அதே நிலைமை தான். மேலும், மக்கள் அதிகாரம் போன்ற பல பத்திரிகைகள் தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக செய்தியை வெளியிட்டால், அந்த பத்திரிகைகளுக்கு எந்த சலுகையும், அரசு அடையாள அட்டையும், கொடுக்க மாட்டார்கள்.மேலும்,

உண்மை என்னவோ, அதை தான் பத்திரிக்கையில் வெளியிடுகிறோம்.ஆனால், பொய்யை சொல்லுகின்ற பத்திரிகைகளுக்கு அவர்கள் சலுகை, விளம்பரங்களும், அரசு அடையாள அட்டையும் கொடுக்கிறார்கள். அதாவது,அவர்களின் ஊது குழலாக இருக்கின்ற ஊடகங்களுக்கு மட்டுமே செய்தித் துறையாக உள்ளது.

மேலும்,இதை மாற்ற வேண்டும் என்றால்! மத்திய அரசு, இங்குள்ள மத்திய அரசின் செய்தித்துறை இயக்குனர் மூலம் அதை சரி செய்ய முடியும். அப்படி சரி செய்தால், நிச்சயம் சமூக நலன்களின் ஊடகங்கள் மத்திய அரசுக்கும், மக்களுக்கும் உண்மைகளை கொண்டு போய் சேர்க்க முடியும். மேலும்,

அராஜகங்களின் உச்சபட்ச தேர்தலாக தான் ,திமுகவின் 2026 தேர்தல், தமிழ்நாட்டில் இருக்கப்போகிறது. இவர்களை எதிர்த்து அரசியல் செய்தால், அடாவடியாக பேசுவார்கள்.
இவர்களை எதிர்த்து செய்திகளை வெளியிட்டால், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பெயர் சூட்ட பார்ப்பார்கள். எல்லாருமே மக்கள் அதிகாரம் போல் பத்திரிகைகள் இருக்க முடியாது.

ஏனென்றால்! இவர்கள் எங்கு அசைந்தாலும், திமுகவைப் பற்றி தெரிந்து போட்டி போட முடியும் . அதனால், இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், மத்திய அரசு உடனடியாக எந்தெந்த பத்திரிகை அதற்கு தகுதியானது? என்பதை ஆய்வு மேற்கொண்டு, அரசு அடையாள அட்டையை வழங்கிட வேண்டும்.மேலும், அண்ணாதுரை இயக்குனராக இருக்கும் போது இந்த பிரச்சனை குறித்து என்னிடம் விவாதித்தார். இது பற்றி மத்திய அமைச்சரிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தற்போது அவர் இல்லை. அதனால்,

இந்தப் பணியை பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் மத்திய செய்தித்துறை அமைச்சரிடம் பேசி இது பிரச்சினையை தீர்த்து வைக்க சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே,

இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு எந்தெந்த பத்திரிகைகள்? அதற்கு தகுதியானவை? என்பதை ஆய்வு செய்து ,அதற்கு சலுகை , ,விளம்பரங்கள் கொடுத்து ஊக்கி விக்க வேண்டும். மேலும் திமுக அரசியலின் பொய் பிரச்சாரங்களுக்கு ஈடு கொடுத்து மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் ,மத்திய அரசு இந்த பத்திரிகைகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது அவசியமானது.