விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது வேலை கொடுக்கிறேன், இதை கொடுக்கிறேன், அதை கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றினால் இதனுடைய விளைவு வரும் தேர்தலில் அந்த கிராமத்தின் வாக்குகள் மட்டுமல்ல பக்கத்து கிராமங்களும் சேர்த்து திமுகவுக்கும், பிஜேபிக்கும் எதிரான வாக்குகளாக அது மாறும்.
மேலும் நீங்கள் அறிவித்த நிலத்தின் மதிப்பு மிக குறைவானது. அங்குள்ள நிலத்தின் கைட் லைன் வேல்யூ ஏக்கருக்கு பன்னிரெண்டாயிரத்தில் இருந்து இருவது ஆயிரத்துக்கு உள்ள தான் இருக்கிறது. அதனால் நீங்கள் கொடுக்கின்ற அந்த நஷ்ட ஈடும் அந்த மக்களுக்கு ஏமாற்றம்தான்.மேலும்,அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள்,
விவசாய பூமியை விட்டு,விட்டு ,இந்த மக்கள் விமானத்தில் ஏறக்கூடியவர்கள் அல்ல. யாரோ ஒருவன் ஏறுவதற்கு, அவர்கள் வைத்திருக்கும் நிலத்தை அரசாங்க அதிகாரத்தால் பிடுங்குவது, எந்த மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும், இந்தப் போராட்டத்தை கையில் எடுக்க திமுக பெரும் பிரச்சனையை உருவாக்கினால், அது திமுகவுக்கு தான் மைனஸ். பலமுறை இந்த பிரச்சனையை அரசுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
ஆனால். அவர்களுக்கு பல கோடிகளை பற்றிய சிந்தனையில் தான் இருக்கிறார்களே ஒழிய, மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. திமுக இப் பிரச்சனையை தூக்கி வெளியில் எரிந்தால் நல்லது. இல்லையென்றால், விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.