தமிழ்நாட்டில் இதுவரை இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்ட ஒரு மாநாடாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள். இதில் பிஜேபி முக்கிய பங்காற்றி இந்த மாநாட்டை வெற்றி பெற செய்துள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு கூட திமுக அரசு மதமோதல் உருவாகும் என்று அதற்கு அனுமதி வழங்கவில்லை.
உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. எவ்வளவு பெரிய இந்துக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் முருகனுடைய மாநாட்டை நடத்துவதற்கு கூட அரசு தடை விதிக்கிறது. இதே தடை கிறிஸ்தவர்கள் மாநாடு நடத்தினால் தடை விதிப்பார்களா? அல்லது முஸ்லிம்கள் மாநாடு நடத்தினார் தடை விதிப்பார்களா?
இந்த மாநாடு இந்துக்களின் எழுச்சி மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆன்மீக மாநாடாக இருந்தாலும் இதற்குள் அரசியலும் வந்துள்ளது. இதைப் பார்த்து அச்சத்தில் மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகிறார்கள் எவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு ஒரு ஆன்மீக மாநாடு நடத்தி அதை அரசியல் மாநாடாக மாற்றி இருக்கும் சம்பவம் தான் எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத அரசியல் என்று விமர்சனம் செய்யும் இவர்கள் இது மத அரசியலா? ஆன்மீக அரசியலா? என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் இவர்கள் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
மேலும் இந்துக்கள் ஒற்றுமை இந்த மாநாட்டின் வெளிப்பாடு இனி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மேடையில் வசை பாடுவதை நிறுத்திக் கொள்வார்கள். ஏனென்றால் அப்படி வசைபாடினால் தான் நமக்கு சிறுபான்மையினர் ஓட்டு வரும் என்று பேசி வந்த அவர்கள் இனி பெரும்பான்மையினர் ஓட்டு கேள்விக்குறியாகிவிடும் என்பது இந்த மாநாடு அவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. அது மட்டுமல்ல, இது ஆன்மீக மாநாடா அல்லது அரசியல் மாநாடா என்று எதிர்க்கட்சிகள் குழம்பி போய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எவ்வளவு கூட்டம் வந்துள்ளதா என்பதுதான் திமுக கூட்டணியின் அரசியல் கட்சியின் மிகப்பெரிய கேள்வி மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பும் மாநாடு இது என்பது
இவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தி இருக்கிறது. திமுக ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது இந்த மக்களுக்கு எதுவும் தெரியாது பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் இதுதான் அவர்களுடைய அரசியல். ஆனால் பணம் கொடுக்காமலே இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள் என்றால் இன்னும் பணம் கொடுத்தால் எத்தனை லட்சம் கூட்டத்தை இவர்களால் கூட்ட முடியும்?
இன்றைய திமுக அதிமுக உள்ளிட்ட எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் பணம் கொடுக்காமல் மாநாடு அரசியல் கூட்டம் முடியாது அவர்கள் வண்டியில் ஏற மாட்டார்கள் ஆனால் பணம் கொடுக்காமலே எவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்து இருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் யார் பெரிய கட்சி என்பதை நடுநிலை ஊடகங்கள் தான் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நாட்டில் பணம் கொடுத்து பொருளை கொடுத்து ஒருவருடைய வாக்குகளை வாங்கி வெற்றி பெறுவது திறமையாக தான் இன்றைய அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நினைக்கிறார்கள். ஆனால் பணம் கொடுக்காமல் வாக்குகளை ஒரு அரசியல் கட்சிக்கு கொடுக்கும்போது அது முக்கியத்துவமானது. தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பல அரசியல் கட்சிகள் வந்திருக்கலாம். ஆனால், சொந்த பணத்தில் வந்து சென்றவர்கள் இந்து முன்னணி இதைச் சார்ந்த பல அமைப்புகள் மற்றும் பிஜேபி கட்சியினர் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாநாடு எதிர்க்கட்சிகளை இது அரசியல் மாநாடா அல்லது முருக பக்தர்கள் மாநாடா குழப்பத்தில் தவிக்கும் எதிர்கட்சிகள்.மேலும், இந்து முன்னணி தலைவர் பேசும்போது,
மதுரை முருக பக்தர்கள் மாநாடு! ஆன்மீகத்தில் புரட்சியை ஏற்படுத்திய மாநாடு, இந்து முன்னணி தலைவர் காடேஈஸ்வரர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடே ஈஸ்வரர் நாங்கள் இந்த மாநாட்டுக்கு விளம்பரம் தேடவில்லை அந்த விளம்பரத்தை சேகர்பாபு திருமாவளவன், வைகோ போன்றோர் எங்களுக்கு தேடி கொடுத்து விட்டனர். இது அரசியல் மாநாடு அல்ல 7 லட்சம் பேர் கூடிய ஆன்மீகப் புரட்சி மாநாடு.
ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசும்போது ,முருகன் தான் தீய சக்திக்கு எதிரானவர். அவர் தீய சக்திகளை அழித்த தேவர்களின் தலைவன். நாட்டில் தீய சக்திகளை அழிக்க நமக்கு ஒரு தலைவன் வேண்டும் அந்த தலைவன் முருகன். நான் வணங்குகின்ற முருகன். இங்கே அரக்கர்களும், அசுரர்களும் வதம் செய்வதற்கு முருகன் துணையாக வர வேண்டும் .
நமது கலாச்சாரம் ,ஆன்மீகம், பக்தி, மதம்,ஆழமானது. நான் இந்துவாக இருப்பதால் உனக்கு என்ன பாதிப்பு? என்னுடைய பிறப்பு இந்து, நீ கிறிஸ்துவனாக பிறந்திருக்கலாம், முஸ்லிமாக பிறந்திருக்கலாம், உங்களை நாங்கள் குறையாகவோ, தவறாகவோ சொல்லவில்லை. ஆனால், எங்களை குறை கூறும் அளவுக்கு இந்து மதம் கேவலமானது அல்ல.
உங்களுடைய விருப்பம் நீங்கள் உங்கள் கடவுளை வணங்குகிறீர்கள். எங்களுடைய விருப்பம் எங்கள் கடவுளை நாங்கள் வணங்குகிறோம். ஆனால் இங்கே கடவுள் யாருக்காவது உங்களுக்கு தீங்கிழைத்தாரா? எதற்காக? அரசியலுக்காக கடவுளை இழிவு படுத்துகிறீர்கள்? இதை தான் மக்கள் அதிகாரத்தில், தொடர்ந்து நானும் எழுதி வருகிறேன்.
அரசியல் வேறு,மதம் வேறு, எதையம் ஒழுங்காக செய்ய முடியவில்லை. அதனால், இந்து மதத்தினர் மீது திணிக்கப்படும் வெறுப்புப் பேச்சு, தவறானது.