நல்லி குப்புசாமி செட்டியார் தொழிலதிபர் மட்டுமல்ல, சிறந்த இலக்கியவாதி, சமூக சிந்தனையாளன், போன்ற பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி. அந்தப் படைப்பாளிக்கு மத்திய அரசு அங்கீகரித்து பத்மபூஷன் விருதை கொடுத்துள்ளது. தமிழ் சமூகத்தின் அடையாளமாக நல்லி குப்புசாமி செட்டியாரை கௌரவித்துள்ளது.மேலும்,
இதற்காக சென்னையில் நிறுவனர் வி. வி.சுந்தரம் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு முன்னிலை (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்) டாக்டர் முரளி வகித்தார். இந்த பாராட்டு விழாவில் இயக்குனர் எஸ் பி முத்துராமன்,முனைவர் / இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை அவ்வை ந.அருள், மருத்துவர் சுதா சேஷய்யன், இயக்குனர் கே பாக்யராஜ் , இயக்குனர் சித்ரா லட்சுமணன், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஆடிட்டர்.ஜே பாலசுப்பிரமணியம், முனைவர் என். பஞ்சாபகேசன், முனைவர் பா மேகநாதன், கவிஞர் விஜய கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேலும்,
இந்த விழாவில் ஒருங்கிணைப்பு மற்றும் வரவேற்புரையை என்.சி. மோகன்தாஸ் நிகழ்த்தினார் , நன்றியுரை பத்மினி பட்டாபிராமன் வழங்கினார்.
தவிர, விழா நாயகன் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில்!ஆசிரியர் ராஜேந்திரன், அவருடைய உழைப்புக்கும், உன்னத சேவைக்கும், மனிதபிமான பண்புக்கும், தமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேனாக்கள் பேரவை உறுப்பினர்கள் என் .ஆர். சம்பத், ரவி நவீனன், ராதாகிருஷ்ணன், சு. ஸ்ரீ, தயாளன், பூவேந்தன், அகிலா, வசந்தா , சிவகாமசுந்தரி, பிரபாவதி, மக்கள் குரல் ராம்ஜி ,வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ராணி மைந்தன், எழுத்தாளர் ரமணன், கவிதாலயா, மோகன்லதா, பாரதியின் கொள்ளுப்பேரன் உமா பாரதி, காவிரி மைந்தன், நாவலாசிரியர் ,ஜவகர், ராதா சிவகுமார் மற்றும் எம்.பஸி. மோகன்தாஸ் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.