செய்தி மக்கள் தொடர்பு துறை! தமிழ்நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும், அது அந்த அரசியல் கட்சி துறையாக செயல்படுவது அரசியல் கட்சியினரை நியமனம் செய்கின்ற தவறு.
இந்த தவறுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தோம். பிறகு தான் இந்த ஏ பி ஆர் ஓ (APRO) நியமனம் டிஎன்பிசி யில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்த விதி தளர்த்தப்பட்டு, திமுக ஐடி விங்கினரை கொண்டு வந்து சேர்ப்பது செய்தித் துறையாக இருக்காது.

அது அரசியல் கட்சி அலுவலகமாக மாறிவிடும். ஏற்கனவே அப்படிதான் செயல்படுகிறது. இதில் திமுக ஐடி விங்கினரை கொண்டு வந்து சேர்த்தால் திமுக அரசியல் கட்சி அலுவலகமாக செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தை செயல்படுத்துவார்கள். மேலும்,
ஒருவருக்கு என்ன தெரியுமோ,அதை தான் அவர்கள் செய்வார்கள். அப்படி இருக்கும்போது இவர்கள் நடுநிலை பத்திரிகை எது? அரசியல் கட்சி பத்திரிகை எது? மக்களுக்கான பத்திரிகை எது? எதுவுமே தெரியாது. இவர்களெல்லாம் தற்போது பிஆர்ஓ களாக இருந்து கொண்டு, பல லட்சங்களை அரசியல் கட்சியினர் போல் கரை வேஷ்டி கட்டாத அரசியல் கட்சியினராக இன்றைய பிஆர்ஓ க்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் யாராவது இதுவரை சமூக நலனுக்காக இந்த பத்திரிக்கைகளுக்கு இந்த மாற்றங்களை கொண்டு வந்தால் நல்லது என்று தலைமைச் செயலகத்தில் நடைபெறக்கூடிய உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசி இருப்பார்களா? ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.

பத்திரிக்கை என்பது எப்போது ஆட்சியாளர்களின் சுயநலமாக மாறிவிட்டதோ, அது பத்திரிக்கை அல்ல. பத்திரிக்கை என்றால் ஆட்சியாளர்கள்,அரசியல் கட்சியினர் செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். அதனுடைய ஜால்ராவாக இருந்து கொண்டு நானும் பத்திரிகை என்றால்,அது பத்திரிகை அல்ல.

மக்களுக்கு எது உண்மை?எது பொய்?என்பதை சொல்வது தான் பத்திரிக்கையின் வேலை..ஆட்சியாளர்களின் பொய்களை, அரசியல் கட்சியினரின் பொய்களை உண்மைகளாக திரித்து சொல்வது பத்திரிக்கை வேலை அல்ல. அது ஏமாற்று வேலை.
இதை தான் தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் பத்திரிக்கை பற்றிய செய்திகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பற்றிய செய்திகள் ஒரு அரசியல் கட்சி சார்ந்த பத்திரிக்கையின் செய்தியாளரை எப்படி பத்திரிகையாளர் அழைக்கிறீர்கள் சரியான கேள்வி.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களாக திமுக ஐடி விங்கனரை நியமனம் செய்வது, சட்டத்திற்கு புறம்பானது. மேலும் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை திமுக கைவிட வேண்டும். ஏனென்றால் பத்திரிக்கை துறை மிகவும் முக்கியத்துவமான துறை இந்த துறையில் நீதிமன்றம் சொன்ன வழி காட்டுதல் பெயரில் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், தகுதியற்ற அரசியல் கட்சியினரை நியமனம் செய்வது கண்டனத்திற்குரியது. என்று தெரிவித்துள்ளார்.