மக்கள் அதிகாரத்தில் இது பற்றி பல கருத்துக்கள் மக்களிடம் முன் வைத்துள்ளேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்வது விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் கழித்த பின்னர் ,ஒருவர் நிரபராதி என்று தெரியவரும் .அவரை எப்படி காப்பாற்றுவது ?என்பது சட்ட சிக்கல்.
இது போன்ற பல நடைமுறை சட்ட சிக்கல்கள் இருக்கிறது. இதை விட முக்கியமானது என்னவென்றால், காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, இப்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு, அப்போது இருந்த மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு ,தொழில் எல்லாமே இந்த 50 ஆண்டுகளில் மாற்றம் இருக்கிறது.

இது கிரிமினல் குற்றங்கள் முதல் சிவில் குற்றங்கள் வரை சட்டங்கள் மாற்றப்பட வேண்டிய அவசியம் நீதித்துறைக்கு இருக்கிறது மேலும்,
ஒரு குடும்ப சொத்தை பிரிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேலும் வழக்காட வேண்டி உள்ளது. ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு பாகப்பிரிவினை மூலம் அந்த சொத்தை கொடுக்கவில்லை என்றால், அவர்கள் நீதிமன்றத்திற்கு போய் அந்த சொத்தை பிரித்துக் கொள்ள வேண்டிய அவல நிலைதான் இருக்கிறது.
இதற்குள் ஆறு ஏழு பேர் இருக்கிறார்கள் என்றால் ,அவர்களுடைய உடல் நிலை காரணமாக எத்தனையோ பேர் இறந்து விடுகிறார்கள். அந்த சொத்தை அனுபவிக்க முடியாமலே போய்விடுகிறது.

இதில் வழக்கறிஞர்களிடம் அந்த உரிமையாளர்கள் தான் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பார்கள். இறுதியில் தந்தையின் சொத்து ,வாரிசுகளுக்கு தான் போய் சேரப் போகிறது .ஆனால் ,இடையில் 10 முதல் 20 ஆண்டுகாலம் இந்த வழக்கு நீடிக்கிறது. இதற்குள் வழக்கு தொடுத்தவர்கள் ஒற்றுமை இல்லாமல் போனால், அந்த வழக்கு நிலுவையிலே இருக்கிறது. இப்படி பல போராட்டங்கள் , இழப்புக்கள் அந்த சொத்து அவர்கள் கைக்கு போய் சேர்வதற்கு முன் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது தேவையற்ற வேலை.மேலும்,

இதை சரியான முறையில் ஆவணங்கள் சரிபார்ப்பு செய்து வருவாய்த்துறை அதிகாரிகள் முடித்த பின் ,,இறுதியாக அந்தந்த மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளே, அதை அவர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடலாம். தவிர,வாரிசுகளின் பிரச்சனை வரும்போது மட்டுமே நீதிமன்றம் செல்லலாம்..
ஆனால், தற்போது வாரிசு பிரச்சனைகள் வராமலே பல லட்சம் பேர் நீதிமன்றத்தை நாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மன உளைச்சல் ,பண இழப்பு, அலைச்சல் ,இவ்வளவும் ஏற்படுகிறது. இந்த எளிய வழிமுறைகளை அரசாங்கமே மேற்கொள்ளலாம்.மேலும்,

அதேபோல், பத்திரிக்கை துறையில் சர்குலேஷன் என்ற சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. சமூக நலன் பத்திரிகைகளுக்கு பொருளாதாரம் குறைவாக இருப்பதால் அவர்களால் இந்த சர்குலேஷன் கொண்டுவர முடியாமல் போகிறது . ஆனால், அதே சர்குலேஷன் சட்டம் பல பத்திரிகைகள் இன்று அதை வியாபார நோக்கத்திற்கும் ,அரசியல் கட்சியை நோக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற செய்தி துறை, சமூக நலனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை ?
எனவே ,செய்தித்துறை , சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகின்ற பத்திரிகைகளுக்கு ஏன் முன்னுரிமை அளிப்பதில்லை?

இதனால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது . அதையெல்லாம் தடுத்து நிறுத்தி சமூக நலன் தேச நலன் பத்திரிகைகளுக்கு மட்டும் தான் இந்த சலுகை விளம்பரங்கள் என்பதை அறிவிக்க வேண்டும்.
அதனால்தான், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப பத்திரிக்கை துறையின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்ல ,இப்படி ஒவ்வொரு துறையிலும் இருக்கக்கூடிய பல சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை கொண்டு வருவது அவசியமானது.

இது தவிர, காவல்துறையில் இன்று காவலர் பணி முக்கியத்துவம் ஆனது. ஆனால் ,அதை தவறாக செயல்படுத்தும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
அதேபோல் வழக்கறிஞர்கள் நீதித்துறையில் கட்டப்பஞ்சாயத்து, மோசடிகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ஈடுபடுவது போன்ற நபர்களை வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க கூடாது.
இது தவிர, மிக முக்கியமான ஒன்று தேர்தல் ! தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றுவது ,அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். மேலும்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடிப்பது, பல லட்சம் கோடி சொத்துக்களை சேர்ப்பது, இதையெல்லாம் கணக்கு காட்டாமல், பினாமி சொத்துக்களாக குவித்து வைத்திருப்பது, இதையெல்லாம் அரசாங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, நாட்டுடமையாக்கப்பட வேண்டும் .

அப்போதுதான் நாட்டில் ஊழலும், கருப்பு பணமும் ஒழிக்க முடியும் .ஊழலை ஒழிப்பேன் ,கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று வாயிலே சொல்லினால் அதை ஒழிக்க முடியாது. நடைமுறையில் சட்டங்கள் கொண்டு வந்து அதற்கான ஒரு தனி துறையை உருவாக்கி வைக்க வேண்டும்.மேலும்,
மக்கள் பணிக்கு வந்து விட்டு, மக்களை ஏமாற்றும் பணியை செய்யக்கூடாது. மேலும், சட்டம் என்பது சாமானிய மக்களும் நீதித்துறையில் நீதி கேட்டு போராடும் போது அதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் சட்டங்கள் காலத்துக்கு ஏற் ப ,மக்களின் மனநிலைக்கு ஏற்ப ,அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப, மாற்றப்படுவது அவசியம் ஆனது. மிகவும் முக்கியத்துவமானது.மேலும்,
அரசியல், பத்திரிக்கை, நீதித்துறை ,காவல்துறை போன்றவற்றில் தகுதியானவர்கள் உழைப்பு, முன்னேற்றம் தடுக்கப்படுவது காலத்திற்கு என்ன சட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பது தான் முக்கிய காரணம். அது மட்டுமல்ல, இப்போது போலிகளும், தகுதியற்ற அரசியல்வாதிகளும், இப்படிப்பட்ட சட்டங்களால் ! அவர்களுக்கு சாதகமாக இருப்பது, உழைப்பவனுக்கு, உண்மையானவனுக்கு இந்த சட்டங்கள் எதிராக இருக்கிறது. அதனால் தான், மக்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்து வருகிறது.இந்த உண்மை பொதுமக்கள் புரிந்து கொண்டால் சரி.