தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துவது வீண்.

 


தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதம் என்பது பொழுதுபோக்கு விவாதம் இந்த விவாத மேடையில் நேரத்தை வீணடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்திற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் என்பது கூட தெரியாமல் அவரை தீவிரவாதியாக பேசிக் கொண்டிருக்கிறார் பொன்ராஜ் என்பவர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் எவ்வளவோ விலகி சொல்லிப் பார்க்கிறார் அவர்களுக்கு ஏறவில்லை. இப்படி விஷயம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகள் விவாதத்தை நடத்துவது அது ஒரு பொழுதுபோக்கு வேலை.மேலும்,

சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர போராட்டத்திற்காக அவர் எடுத்moத முயற்சியால் தான் நாடு விடுதலை பெற்றது. காந்தி அகிம்சை வழியில் போராடினார், ஆங்கிலேயர்கள் காந்தியை மதித்து சுதந்திரம் கொடுத்து விட்டார்களா? இல்லை, ஜெர்மனியில் படை திரட்டி, சுபாஷ் சந்திர போஸ் நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை அடித்த போது தான், அடி தாங்க முடியாமல் தான் அவர்கள் ஓடினார்கள்.

ஓடும்போது அவர்கள் இவ்வளவு காலம் இந்தியாவை ஏக சக்கரவர்த்தியாக ஆண்டு விட்டு, அடி வாங்கி ஓடினால் நம்முடைய கௌரவம் அடிபட்டு போய்விடும். அதனால்,அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த காந்தியிடம் இந்த நாட்டை கொடுத்து விடலாம் என்று கொடுத்துவிட்டு சென்றார்கள்.

இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் கொடுமைப்படுத்தி வந்த ஆங்கிலேயர்கள் காந்தியின் அகிம்சை போராட்டத்திற்கு பயந்து கொடுத்திருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் இதை மனசாட்சியுடன் சிந்தித்துப் பாருங்கள்.மேலும்,

ஒருவன் நம்முடைய இடத்தில் ஒரு கொட்டாயை போட்டு வைத்துக் கொண்டு, ஆக்கிரமிப்பு செய்து அடாவடியாக பேசிக் கொண்டிருப்பனிடம் நீங்கள் சமாதானம் பேசிக்கொண்டு, சத்தியாகிரகம் செய்து கொண்டிருந்தால், அவன் அந்த இடத்தை விட்டு போவானா? நிச்சயம் போக மாட்டான்.

இது பாமர மக்களுக்கு தற்போது உள்ள நிலைமை என்றால், ஒரு நாட்டுக்கு அகிம்சை வழியில் போராடிய காந்திக்கு எப்படி நாட்டை ஆங்கிலேயன் கொடுத்திருப்பான்? சிந்தியுங்கள்.

Popular posts
நல்லி குப்புசாமி செட்டியாரின் சமூக பங்களிப்புக்கு கிடைத்த பத்மபூஷன் விருதுக்கு சென்னையில் பாராட்டு விழா.
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?
படம்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? - குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
படம்