மத்திய பாஜக அரசு !கார்ப்பரேட்டுகளின் அரசு - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு.


நாட்டில் இன்றைய அரசியல் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .அதை பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது .மக்கள் அதை படிக்கிறார்கள் .ஆனால், உண்மையை இன்னும் புரியாமல் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . மேலும்,எது உண்மை ?என்பதை உணரவில்லை .

அதை இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் உணர்த்துவதில்லை. மேலும் திருச்சி லால்குடி அருகில் வீராகானூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வாழ்ந்த ஸ்டேன் சுவாமி திருவருவச் சிலையை திறந்து வைத்து பேசிய எம். பி .கனிமொழி அடித்தட்டு மக்களுக்காக ஆட்சி நடத்துவது உண்மையானால் ! இந்த கேள்விக்கெல்லாம் திமுக அரசு பதில் சொல்ல தயாரா? மேலும்,

கனிமொழி மத்திய அரசை கார்ப்பரேட் களுக்காக நடத்தக்கூடிய அரசு என்று தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி! திமுக அரசு சாமானிய அடித்தட்டு மக்களுக்காக நடத்துகிறதா?

அப்படி என்றால்! சமூக நலனுக்காக போராடுகின்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு இதுவரை எந்த சலுகை ,விளம்பரங்களும் இல்லை. தவிர,

அவர்கள் உழைப்பை இந்த சமூகத்துக்கு விதைத்து விட்டு செல்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு எது உண்மை? என்று புரிய வைத்து விட்டு செல்கிறார்கள். ஆனால், அரசாங்கம் இதுவரை சாமானிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்துகின்ற பத்திரிகைகளுக்கு நீங்கள் என்ன செய்து உள்ளீர்கள்?

நாங்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். எத்தனையோ கடிதங்கள் அனுப்பி இருக்கிறோம் எத்தனையோ செய்திகள் மூலம் செய்தி துறைக்கு அனுப்பி இருக்கிறோம் என்ன செய்து விட்டீர்கள்? ஒன்று உங்களால் சொல்ல முடியுமா?

எல்லாம் கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்களுக்கு தான் பல நூற்றுக்கணக்கான கோடி சலுகை, விளம்பரங்கள் மக்களின் வரிப்பணம் வீணடித்து கார்ப்பரேட்டுக்களுக்காக மட்டும் தான் செய்கிறீர்கள். இது ஒன்று போதுமா ?இன்னும் வேண்டுமா?

மேலும், சாமானிய மக்களுக்கு ஓட்டுக்கு,1000,500 ,கொடுத்து விட்டு ஒவ்வொரு எம் எல் ஏ ,m .p க்கள் ,மந்திரிகள், ஆயிரம் கோடி ,500 கோடி என்று கொள்ளையடித்து கார்ப்பரேட் அரசியல் நடத்துகிறீர்கள். அதற்கு சாட்சி நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் வழக்கே போதும். இப்போது தெரிகிறதா ?தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது? மேலும்,

நீங்கள் இந்த சாமானிய சமூக நலன் பத்திரிகைகளுக்கு செய்தது என்ன ?சொல்லுங்கள். அதே போல் ஒடுக்கப்பட்ட மக்கள் ,,பாதிக்கப்படும்போது நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் சொல்லுங்கள் ?இன்று மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்டு வருக்கிறார்கள். காவல்துறையால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் உதவித்தொகை, இந்த உதவித்தொகை ,அந்த உதவித்தொகை, இந்த விளம்பர உதவித்தொகை எல்லாம் ஏழை நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துமா? மேலும் ,

திமுக அரசு ,சமூகத்திற்காக போராடக்கூடிய பத்திரிகைகளுக்கும் ,பத்திரிகையாளர்களுக்கும், செய்தது என்ன?

ஓட்டுக்கலுக்காக அரசியல் பேசுகிறீர்கள் ,ஓட்டுகளுக்காக அரசியல் நடத்துகிறீர்கள் .உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய பத்திரிகைகள் இல்லை. உங்களுடைய பேச்சுக்களை விளம்பரப்படுத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்களை கொடுக்கிறீர்கள். இதுதான் பத்திரிக்கையா?

மேலும், கார்ப்பரேட் பத்திரிகைகளில் கூலிக்கு வேலை செய்யக்கூடிய செய்தியாளர்களுக்கு கொடுக்கக்கூடிய சலுகைகள் கூட இந்த பத்திரிகைகளுக்கு இல்லை.

நீங்கள் எப்படி இந்த சமூக மக்களுக்காக நடத்தக்கூடிய அரசாக உங்களைச் சொல்லிக் கொள்கிறீர்கள்? மக்களுக்கு உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகள் எத்தனை ?என்று செய்தித்துறை அதிகாரிகளுக்கு தெரியுமா?

இல்லை உங்களுக்காவது அது தெரியுமா? தெரிந்தால் செய்யுங்கள் பார்ப்போம். இது திமுக அரசுக்கு சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வி? மேலும்,

சர்குலேஷன் என்ற சட்டத்தை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றாலும், தற்போது ஆன்லைனில் நாங்கள் பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த பார்வையாளர்களை நீங்கள் சக்லேஷனில் கொண்டு வர வேண்டும் என்று எத்தனையோ செய்திகள், எத்தனையோ கடிதங்கள், தமிழக அரசின் செய்தி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ன செய்தார்கள்?

அதுவாது உங்களுக்கு தெரியுமா? - கனிமொழி .