வன்னியர்களில் அடி முட்டாள்களாக இருந்தால், ராமதாஸ் பின்னால் போவார்கள். இல்லை தன்னுடைய சுயலாபத்திற்காக போவார்கள். இல்லை இந்த ஆயிரம், ஐநூரை நம்பி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் வன்னியர் சமூகத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.

இன்று சுமார் மூன்று கோடி வன்னியர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என 10.5% இட ஒதுக்கீடு பிரச்சனையை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்தும், நீதிமன்றத்தில் அதற்கான தரவுகள் திமுக ஸ்டாலின் ஆட்சியில் கொடுக்காமல் போனதால், அந்த வழக்கு தோல்வியானது. மேலும்,

இப்போது தேர்தல் நெருங்குவதால், ஏமாளிகள், முட்டாள்கள் அதிகம் நிறைந்த சமுதாயத்தில், மீண்டும் இந்த இட ஒதுக்கீடு பிரச்சனையை கையில் எடுத்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமுதாயத்தை 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றி வருகிறது. இனியாவது இந்த மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

இது வன்னியர்களின் கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி ஆக ஆகிவிட்டார்கள் .இந்த கார்ப்பரேட் கம்பெனிக்கு முதலாளிகள் ராமதாஸ் அண்ட் கோ, அன்புமணி அண்ட் கோ ஓனர்கள். இந்த ஓனர்கள் என்ன சொல்கிறார்களோ, ஊரிலும், நகரத்திலும் இருக்கின்ற எடுப்புகள் கட்சி என்று சொல்லி வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
அதனால் இனியாவது ஏமாறுவது உங்கள் தலைவிதி அல்ல, உங்களுடைய அறியாமை. அதை தான் இப்போதும் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும்,( பாட்டாளி மக்கள் கட்சியின்) கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளான ராமதாஸ், அன்புமணியும் யாருக்கு அதிகாரம்? என்று இதில் போட்டி போட்டார்கள்.அப்போதும் சமுதாய நலனை பற்றி சிந்திக்காமல், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கிடைத்த 10. 5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காமல், இருக்க என்ன வழியோ அதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்,
தெரிந்தோ, தெரியாமலோ அந்தக் கட்சியில் ,இருக்கின்ற வன்னியர்கள், சமூக நன்மைக்காக நீங்கள் பாடுபட அதிலிருந்து வெளிவர வேண்டும். ஆனால், உங்களுடைய சுயலாபத்திற்காக ,சமுதாய பற்றாளர்களாக சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பது உண்மையான சமுதாய பற்று உள்ளவர்கள் இதை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார்கள் .
மேலும், அவர்கள் சொல்வது, இந்தசமுதாயத்தை விற்று சாப்பிடுகிறவர்கள் மட்டுமே, இதை ஏற்றுக் கொள்வார்கள். இதற்கு மேல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொன்ன பல உண்மைகள் மக்கள் அதிகாரத்தில், இந்த சமுதாயத்திற்காக சொல்லப்பட்டு இருக்கிறது. நீங்கள் தூங்கினால் உங்களை எழுப்பலாம். ஆனால், தூங்குவது போல் நடித்தால் எழுப்ப முடியாது என்கின்றனர். அது மட்டுமல்ல, அவர்கள் சொல்வது இனி உங்கள் குழந்தைகளின் அல்லது உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தால், நிச்சயம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என்று சமுதாயப் பற்றுள்ள வன்னியர்கள், இதை சமுதாயத்திற்கு வைக்கின்ற ஒரு கோரிக்கை.