நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் அவர்களுடைய வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி, ரூபாய் 1000,500 க்கு அவர்களின் அதிகாரத்தை விலைக்கி வாங்கி, வெற்றி பெற்றால்,அது ஜனநாயகத்தின் தோல்வி.

மக்கள் செய்கின்ற தவறு, மக்களிடமே வந்து சேர்கிறது. எப்போது இந்த மக்கள் திருந்த போகிறார்கள்? மேலும்,இவர்களுடைய வாக்கால் இந்த ஜனநாயகத்தின் தோல்வி பற்றி சிந்திக்க கூடிய சமூக ஆர்வலர்கள், தேசத்தின் பற்றாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால்,, தகுதியானவர்கள்,மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள்,வெற்றி பெற முடியாமல்,,அது ஜனநாயகத்தின் தோல்வியாகவே இருந்து வருகிறது. மேலும்,

இந்த ஊழல்வாதிகள் நாட்டில் கனிம வளக் கொள்ளை, டாஸ்மாக், போதைப் பொருள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ரவுடிசம், இது அத்தனைக்கும் இந்த மக்கள் தான் காரணமாகிறார்கள். அதனுடைய விளைவு தான் இன்று திமுக ஆட்சியில், விலைவாசி உயர்வு, வாழ்க்கைப் போராட்டம், சமூகப் போராட்டம், அத்தனைக்கும் நீங்கள்தான் காரணமானவர்கள். அது மட்டுமல்ல இந்த மக்கள் தகுதியானவர்கள் வேட்பாளர்களாக நிற்கும் போது, அவர்களுடைய உழைப்பையும் கொடுத்து பணமும் கொடுப்பார்களா? இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? தவிர,

படித்த மக்கள் அந்தப் பகுதியில் படிப்பறிவு இல்லாத மக்களிடம், இதை எடுத்துச் சொல்லுங்கள். தேர்தல் ஆணையம் அந்தப் படிப்பறிவு இல்லாத மக்களை வாக்களிக்க தகுதி நீக்க செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். ஆனால்,கடமைக்கு தேர்தல் என்பது நாட்டில் இது போன்ற ஊழல்வாதிகள் திரும்பவும் இப்படிப்பட்ட வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிக்கிறார்கள்.
இவர்களால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் பொருளாதார வளர்ச்சி பெறாமல், இவர்களுடைய பொருளாதாரம் மட்டும் ஐந்தாண்டுகளில் பல்லாயிரம் கோடி பெருகுகிறது.

இதைப் பற்றி எந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் பேசுவதில்லை.ஆனால் சமூக நலன் பத்திரிகைகள் ஒரு சில இதை மக்களிடம் கொண்டு செல்கிறது.
இது பற்றி எத்தனையோ செய்திகள் மக்களவை அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டி.என்.ஷேஷன் போன்ற சமூக சிந்தனையும், இந்த தேச நலனையும் கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டால் தான் இதற்கு ஒரு விடியல்.