பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும்,

பத்தாண்டுகள் முன்பாக இந்த யோகா தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் சிறப்பாக, மேலும், விரிவானதாக வளர்ந்து கொண்டே செல்கிறது.
அதிகமானோர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே யோகக்கலையைத் தங்களுடையதாக்கி வருகின்றார்கள் என்பதையே இது அடையாளப்படுத்துகிறது. இந்த முறை யோகக்கலை தொடர்பான சிந்தையைக் கவரும் பல காட்சிகளைக் காண முடிந்தது.மேலும்,
நியூயார்க், லண்டன், டோக்கியோ, பாரீஸ் என உலகின் அனைத்துப் பெருநகரங்களிலிருந்தும் யோகப்பயிற்சி பற்றிய காட்சிகள் கிடைத்தன, ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தன, நிலைத்ததன்மை மற்றும் சமச்சீர்நிலை. இந்த முறைக்கான கருப்பொருளும் கூட மிகவும் சிறப்பானது, ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கு யோகக்கலை. இது வெற்றுக் கோஷமல்ல, வசுதைவ குடும்பகம் அதாவது அனைவரும் ஓர்குலம் என்ற உணர்வினை நமக்குக் குறித்துக் காட்டும் ஒரு திசை இது. இந்த முறை யோகக்கலை தினத்தின் விசாலத்தன்மை, யோகக்கலையை தங்களுடையதாக்கிக் கொள்ள அதிகபட்ச மனிதர்களிடம் உள்ளெழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது. மேலும்,
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் - அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன.எனவே,
நண்பர்களே, இன்று பாரதத்தின் பெரும்பாலான மக்கள் ஏதோவொரு சமூகப் பாதுகாப்பு ஆதாயத்தால் பலனடைந்து வரும் வேளையில், சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முக்கியமானதொரு அறிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் என்ன கூறியிருக்கிறது என்றால், பாரதத்தின் 64 சதவீதத்திற்கும் அதிக மக்கள்தொகைக்கு ஏதோவொரு சமூகப் பாதுகாப்பு ஆதாயம் கிடைத்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. சமூகப் பாதுகாப்பு - இது உலகின் மிகப்பெரிய பாதுகாப்புகளில் ஒன்று. இன்று தேசத்தின் சுமார் 95 கோடி மக்கள் ஏதோவொரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள். மேலும்,
எனதருமை நாட்டுமக்களே, பெண்கள் வழிநடத்தும் முன்னேற்றம் என்ற மந்திரம் பாரதத்தின் புதிய எதிர்காலத்தைக் கட்டியமைக்கத் தயாராக இருக்கிறது. நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள், இன்று தங்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் புதிய திசையைக் காட்டி வருகிறார்கள். தெலங்கானாவின் பத்ராசலத்தைச் சேர்ந்த பெண்களின் வெற்றியைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள் என்றால், உங்கள் மனதும் சந்தோஷப்படும்.தவிர,
இந்தப் பெண்கள் முன்னர் வயல்வெளிகளில் கூலிவேலை செய்து வந்தார்கள். அன்றாடத் தேவைகளுக்காக நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருந்தது. இன்று இதே பெண்கள், சிறுதானியங்களைக் கொண்டு பிஸ்கட்டுகளைத் தயாரித்து வருகின்றார்கள். பத்ராதி மில்லட் மேஜிக் என்ற பெயர் கொண்ட இந்த பிஸ்கட், ஹைதராபாத் தொடங்கி லண்டன் வரை சென்றுவிட்டது.மேலும்,
நண்பர்களே, நான் எப்போதும் உங்களுடைய ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன். மனதின் குரலின் அடுத்த பகுதி உங்கள் அனைவரின் இந்த ஆலோசனைகளால் செறிவானதாகும். புதிய விஷயங்களோடு, புதிய உத்வேகங்களோடு, நாட்டுமக்களின் புதிய சாதனைகளோடு மீண்டும் சந்திப்போம். பலப்பல நன்றிகள், வணக்கம்.