வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?

 வள்ளல் பீ. டி. லீ. வெள்ளக்காரன் காலத்தில் வியாபாரம் செய்து அதில் வந்த லாபத்தை தன் சமுதாயத்தின் கல்விக்காக பயன்பட வேண்டும் என்று 1. 5. 1874 ல் உயில் எழுதி வைத்தார். அந்த ஆத்மா இறந்துவிட்டது என்று நினைத்து அவருடைய சொத்துக்களை நிர்வாகிகள் பங்கு போடாதீர்கள். 

அதில் ஒரு ரூபாய் சாப்பிட்டாலும், அந்த ஆத்மாவுக்கு கணக்கு நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். அது எவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த எண்ணத்தில் தன்னுடைய குடும்ப வாரிசுகளுக்கு கூட, ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், தன் சமுதாயம் பிற்காலத்தில் கல்வியில், தொழிலில் வளர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எழுதி வைத்துவிட்டு, போன ஒரு உயர்ந்த ஆத்மா அது! என்றுமே அழியாது. அது ஒரு தெய்வ பிறவி. 

தெய்வ பிறவியால் தான் இப்படிப்பட்ட ஒரு நல்ல காரியம் செயல்படுத்த முடியும். ஜாதி முக்கியமல்ல, இங்கே ஒருவருடைய தகுதி தான் முக்கியம். படிப்பு முக்கியமல்ல,படிப்பைவிட, ஒருவருடைய நேர்மை முக்கியம். நான் அதிகம் படித்தவன் என்று, இந்த அறக்கட்டளை சொத்துக்களை பங்கு போடக்கூடாது. நீங்கள் வேண்டுமானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். .யாரெல்லாம் பீ. டி. லீ சொத்தை குறுக்கு வழியில், தவறான கணக்குகளை காட்டி ,சாப்பிட்டு இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஒரு நாளைக்கு எந்தெந்த வழியில், எப்படி எல்லாம் அதற்கான கர்மாவை அனுபவிக்கப் போகிறார்கள்? என்பது இப்போது தெரியாது .

நீங்கள் எத்தனை பிறவி எடுத்தாலும்,அந்த கர்மா, உங்களை அது தொடர்ந்து அந்த கணக்கு விடாமல் துரத்திக் கொண்டுதான் இருக்கும். இதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், ஒரு தெய்வப் பிறவியின் சொத்தை அபகரித்து, பொய் கணக்குகளை எழுதி, அதிகாரம் இருக்கிறது என்று சட்டத்தை ஏமாற்றி செய்கிறீர்கள் என்றால், உங்களை அந்த தெய்வா ஆத்மா! எந்தெந்த வழியில் உங்களுக்கு அதனுடைய பலன் என்னவென்று போகப், போக தெரியும்

. நாட்டில் மனசாட்சி இல்லாமல் வாழும் கூட்டங்கள் அந்த நேரத்திற்கு வேண்டுமானால், நன்றாக இருக்கலாம் .ஆனால், உங்களுக்கு என்று ஒரு நேரம் சனி பகவான் வருவார். அப்போது எல்லாத்தையும் சேர்த்து, உங்களுடைய கணக்குகளை எப்படி எல்லாம் தீர்க்க வேண்டும்? என்பது அவருக்கு தெரியும். இந்த உண்மை புரிந்தவர்களுக்கு புரியட்டும். புரியாதவர்களை பற்றி கவலை இல்லை.உழைத்து வாழ்ந்த வன்னியர் சமுதாயம், இன்று அந்த சமுதாயத்தை ஏமாற்றி வாழ நினைப்பது என்?மேலும்,

 ஒரு சமூகத்தில் சமூகத்தையே ஏமாற்றி வாழ்வது திறமை என்று நினைத்து வாழும்  துரோக கூட்டங்களை வேறு ,எந்த சமுதாயத்திலும் நான் பார்க்கவில்லை. அப்படிதான் பீ. டி. லீ அறக்கட்டளையில் 2018 - 19 ஆம் ஆண்டு 920 ஏழை வன்னிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூபாய் 30, 96, 600 /-  வழங்கியதாக, 10. 4.2019 அன்று கணக்கு காட்டி,அறக்கட்டளை நிர்வாகிகளாக இருக்கும் நான்கு பேரும் அபகரித்துக் கொண்டனர்.'மேலும்,

.பீ. டி. லீ தன்னுடைய சமுதாயம் கல்வியறிவு பெற்று, உயர்ந்திட உயில் எழுதி வைத்துவிட்டு, போன சொத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் யாராக இருந்தாலும் ,அந்த தெய்வத்திற்கு நீங்கள் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். ஏனென்றால், திரும்பவும் சொல்கிறேன் ஒரு உயர்ந்த ஆத்மாவால் தான் இப்படிப்பட்ட ஒரு தியாகத்தை செய்ய முடியும். ஊரை ஏமாற்றலாமா? சமுதாயத்தை ஏமாற்றலாமா?உடம்பு கனமாக இருக்கிறது என்று சமுதாயத்தை மிரட்டலாமா? இந்த திட்டமெல்லாம் அவரிடம் பலிக்காது. உப்பு தின்னவன் ஒரு நாளைக்கு தண்ணி குடிப்பான்.

தெய்வம் நின்று கொள்ளும்.



Popular posts
நல்லி குப்புசாமி செட்டியாரின் சமூக பங்களிப்புக்கு கிடைத்த பத்மபூஷன் விருதுக்கு சென்னையில் பாராட்டு விழா.
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? - குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
படம்