காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? - நீதித்துறையும், சட்டமும் எதற்கு?

 

திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள். 

மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் அழைத்துச் சென்று துன்புறுத்தி இருக்கிறார்கள், அடித்திருக்கிறார்கள். தவிர, அஜித்குமார் தவறோ, குற்றமோ, செய்து இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க வேண்டும் .மேலும்,


அவர் இன்ன தவறு செய்தார்? என்று நீதிமன்றத்தில் தான் காவலர்கள் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், காவல்துறையே சட்டத்தை கையில் எடுத்து, அஜித்குமாருக்கு தண்டனை கொடுத்துள்ளது. காவல்துறை செய்துள்ள மிகப்பெரிய குற்றம். அது மட்டுமல்ல சட்டத்தையும், ஏழை எளிய மக்களையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இன்றுஏழை எளிய நடுத்தர மக்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது.மேலும், 

குற்றம் யார் செய்தது? குற்றவாளி யார்? என்பதை நிரூபிக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியம்.. மேலும், ஏழை எளிய மக்கள்  காவல்துறையினரால், அடித்து,துன்புறுத்தி, உயிர் போகும் அளவுக்கு கொடுமைகள் செய்தால், நாட்டில் மனித நேயம் செத்துவிட்டதா? 

இதே நிலை இந்த காவல்துறையினர் உறவினருக்கு ஏற்பட்டால், அதை ஏற்றுக்கொள்வார்களா? எளியவனை வலியவன் அதிகாரத்தால் வீழ்த்தும்போது, இறைவனே அந்த வலியவனை அழிப்பதற்கு முன் வருவான் என்பது காலத்தின் கட்டளை. 

இன்று ஒரு சாதாரண ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டு காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகத்தால் இறந்து விட்டார். 

அதற்கு சட்டத்தில் என்னென்ன ஓட்டைகள் இருக்குமோ, அத்தனை ஓட்டைகளை தேடி ,அவர்களை அந்த குற்ற சம்பவத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால், இவர்கள் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்தாலும், கடவுளின் சட்டத்திலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது.மேலும் ,தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ஏழை குடும்பத்திற்கு என்ன இழப்பீடு தரப் போகிறார்? தவறு செய்த காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி?

Popular posts
நல்லி குப்புசாமி செட்டியாரின் சமூக பங்களிப்புக்கு கிடைத்த பத்மபூஷன் விருதுக்கு சென்னையில் பாராட்டு விழா.
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?
படம்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? - குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
படம்