சினிமா நடிகர், நடிகைகளில் கொக்கைன் என்ற போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல்.
தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருந்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கம் பல நடிகர்களுக்கும்,நடிகைகளுக்கும் இருந்துள்ளது.
இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் காரர்கள் உடன் தொடர்பு இருக்குமா?அந்த கோணத்திலும் காவல்துறை இவர்களை விசாரித்து வருகிறது.
மேலும்,கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாந்த் மற்றும் அவரின் நண்பரான பிரதீப் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார். இந்த போதைப்பொருள் தன்னுடைய குடும்ப பிரச்சினைகளுக்காக மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்க முடியாமல் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சொன்னதாக தகவல். மேலும் அவர் தான் யாருக்கும் இந்த போதை பொருளை விற்கவில்லை. ஆனால்,
அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், பிரதீப் குமார் ஆகியோருக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இதை காவல்துறை தீவிரமாக விசாரித்தால், பல விஐபி குடும்பங்கள் மாட்டும் என்று தகவல்.மேலும், காவல்துறை தரப்பில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மது அருந்த சென்ற இரு தரப்பு நேரடியை ஏற்பட்ட மோதல்களின் காரணமாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டு, பிரசாத் என்பவரை கைது செய்யப்பட்டதில் அவருடைய வீட்டில் சோதனை செய்ததில் வங்கிப் பணப் பரிவர்த்தனை மற்றும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியது.
பிரசாத் போதைப்பொருள் விற்பனை செய்தது மட்டுமல்லாமல், பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 2 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது இது தவிர,tnpsc, சென்னை கார்ப்பரேஷன், போன்ற அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 2 லட்சம் முதல் 30 லட்சம் வரை 200 நபர்களிடம் பணம் பெற்று இருப்பது புலன் விசாரணையில் தெரிய வருவதாக தகவல். மேலும் இந்த நெட்வொர்க்
போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நாட்டில் அரசியல் கட்சியினருடனும், சினிமா நடிகர் நடிகைகளுடனும் அரங்கேரி வந்துள்ளது. இதில், ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள் பாகுபாடு இல்லாமல் ஈடுபட்டிருக்கலாம் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவரும். இது தவிர,
இந்த இரண்டு நடிகர்கள் மட்டுமல்லாது மேலும் பல, நடிகர்,நடிகைகளுக்கும், இது தொடர்பு இருக்க வேண்டும் என்பது தான் காவல்துறை வட்டாரத்தின் சந்தேகமாக உள்ளது. அதனால்,இந்த விசாரணையில், எத்தனை பேர் மாட்டுவார்களோ! போகப், போகத்தான் தெரியும்.