மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்கள் நலன் சார்ந்து வெளி வரும் பத்திரிகை. இதில் வியாபார நோக்கமும் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நோக்கமும் இல்லாமல் பத்திரிக்கை நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படியும் போராடி பத்திரிகைகள் நடத்திக் கொண்டு வருகிறோம். இது பற்றி தமிழ்நாடு செய்தித்துறை இயக்குனர் மற்றும் செயலாளர் அவர்களிடமும் தெரிவித்துள்ளேன் .
ஏது உண்மை?, எது பொய்? என்று தெரியாதவர்கள் ஆடம்பரங்களையும், பந்தாக்கலையும் பார்த்து அதிர்ச்சி அடைவது போல் தான் ,இன்றைய கார்ப்பரேட் பத்திரிகைகளின் செய்திகள் .ஆனால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் அப்படியல்ல. மக்களிடம் உண்மையை எடுத்துரைக்கிறது. அது நல்லதாக இருந்தாலும் ,கெட்டதாக இருந்தாலும், தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும், எல்லாம் இறைவனுக்கே! என்று எங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறோம் .
இதில் யாரையும் கொண்டாடி, யாரையும் பாராட்டி, அதன் மூலம் மக்களை ஏமாற்றி பலனடைவது பத்திரிக்கையின் கடமை அல்ல. அதற்கு கொடுக்க வேண்டிய உண்மையான அங்கீகாரம், எந்தெந்த பத்திரிகைகள்? எப்படிப்பட்ட செய்திகள் வெளியிட்டு வருகிறது?
அந்த செய்திகளால் மக்களுக்கு என்ன நன்மை ?இதை மட்டும் செய்து துறை அதிகாரிகள் சொல்லிவிட்டு, அதற்கான அங்கீகாரத்தையும், சலுகைகளையும், விளம்பரங்களையும் கொடுக்கலாம். சொல்ல முடியுமா? உங்களால்? மேலும், தினசரி ,வார இதழ், மாத இதழ் என்று மத்திய, மாநில அரசுகள் பத்திரிகைகளை அடையாளம் பிரிப்பது போல், இதையம் பிரியுங்கள். எத்தனை உண்மையான செய்திகள் தினசரி வெளியிடுகின்றன? அதனால், மக்களுக்கு என்ன பயன்? என்பதை தெளிவு படுத்துங்கள். அப்போது உங்களுக்கே தெரியும்.
தினசரி பத்திரிக்கை செய்திகளால் என்ன முக்கியத்துவம்? வரா பத்திரிகைகளால் என்ன முக்கியத்துவமான செய்திகள்? மாத பத்திரிகைகளால் என்ன முக்கியத்துவமான செய்திகள்? அதில் வெளி வருகிறது? செய்திகளால் தான் பத்திரிக்கை. அதற்கே தகுதியில்லாத போது, அது எப்படி பத்திரிக்கை? மேலும், ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தி, பத்து பத்திரிகைகளில் காப்பியடித்து, அதில் மாற்றங்களை செய்து, மக்களையும், செய்தி துறையும் ஏமாற்றிக் கொண்டிருப்பது பத்திரிகை அல்ல.
அதனால், பத்திரிகை பத்திரிக்கையாக இருக்கிறதா? மேலும், இணையதளத்தில் அதற்குரிய அங்கீகாரம் மக்களிடம் இருக்கிறதா? இதையெல்லாம் கவனித்து தான் செய்தி துறை தரம் பிரிக்க வேண்டும், என்பதை தரம் பிரிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் செய்தி துறை இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ,இன்று செய்தியாளர்கள் பலபேர் பத்திரிகையின் அடையாள அட்டை தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.பத்திரிகை நடத்துபவர்கள் RNI தான் பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்,
மக்களுக்கு எந்த விதமான பலனும்
அதில் கிடைக்காது. உண்மையான செய்திகள், தற்போது உள்ள அரசியல்
சூழ்நிலை, புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், அவர்களுக்கெல்லாம் மக்கள்
அதிகாரம் முடிந்த அளவிற்கு விழிப்புணர்வை
ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் ஆய்வு செய்து பத்திரிக்கை
துறையை சீர் செய்ய வேண்டும்.அதிகாரிகள் இதில் அரசியல் உள்ளே
கொண்டு வந்தால், நாங்கள் கட்சி பத்திரிக்கை
தான் நடத்த வேண்டும் .மக்களுக்கான
பத்திரிகையை நடத்த முடியாது. மேலும்
பத்திரிக்கையின் சுதந்திரம் கேள்விக்குறியாகும்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, பத்திரிக்கை துறையை சீர் செய்து இயக்குனர் மோகன் மற்றும் செய்தி துறையின் செயலாளர் செல்வராஜ் செயல்பட்டால் மட்டுமே! இந்த பத்திரிக்கை துறையை காப்பாற்ற முடியும், என்று சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் சார்பாக அதிகாரிகளுக்கு வைக்கின்ற முக்கிய கோரிக்கை .மேலும், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்களின் சுயநல கொள்கைக்கு பத்திரிக்கை துறையை செயல்படுத்தக் கூடாது.
அப்படி செயல்பட்டால், அது பத்திரிக்கையாக இருக்க முடியாது. அது பத்திரிகை சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும்.அப்படிப்பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களுக்கான பத்திரிக்கைகளாகத்தான் இருக்குமே ஒழிய, மக்களுக்காக ஒரு காலமும் இருக்காது .இதை,பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது இதற்கான தீர்வு என்ன ?இப் பிரச்சனை என்னவென்று இதுவரை தெரியாமல், அதிகாரிகளுக்கும், பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கும் புரியாமல், இது ஒரு சுயநல அரசியல்!பத்திரிக்கை துறையை சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் சரி .