சிவபரம்பொருளின் வடிவமே சிவலிங்கம்

திருமூலர் காட்டும் இலிங்கங்கள்



லிங்கத்திற்கு பலரும் பல பொருள்களை கூறுகின்றனர். ஆனால், திருமூலர் கூறும் விளக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.


லிம்என்பது அதாவது ஒடுங்குதல் !


கம்என்பது வெளிவருதலையும் குறிக்கும் .எந்த இடத்தில் பழைய காலத்தில் சேதன ,அசேதன பிரபஞ்சங்கள் அனைத்தும், லயம்! அடைந்த பின்னர் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனஅதுவே! லிங்கம் எனப்படுகிறது.


லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும். சிவபெருமான் படைப்பு முதலான ஐந்து விரல்களால் பிரபஞ்சத்தை சித்தரிப்பதால் ,சிவலிங்கம் என பெயர் ஏற்பட்டது. என்று வருண பத்தி என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.


லிங்கம்! ஒரு பொருளின் சிறப்பியல்பு உணர்த்தும் அடையாளத்தை அல்லது குறியை  உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம் .மேலும்,


திருமூலர் கூறும் லிங்க வகைகள் !


அண்ட லிங்கம்                                     


பிண்ட லிங்கம்


சதாசிவ லிங்கம்


ஆத்ம லிங்கம்


ஞான லிங்கம்


சிவலிங்கம்


அண்ட லிங்கம்


அண்டம் என்றால், உலகம்! லிங்கம் என்பது குறி அண்ட லிங்கம் என்பது உலகமே, சிவனது அடையாளம்.


 உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் தோற்றுவித்தான் .அதனால் ,குண்டலி சக்தியின் ஆற்றலால் ,உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தி னாலேயே, உலகில் வெவ்வேறு அறிவு உடையனவாக காணப்பெறுகின்றன.


இறைவனது திருவடிகள் கீழ் உலகம் ,திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும், திருமேனி ஆகாயம் ஆகும் .இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாக கொண்ட திருக்கோலம் ஆகும்.


நிலம்- ஆவுடையார், ஆகாயம்- லிங்கம், கடல்- திருமஞ்சனமாலை, மேகம்- கங்கைநீர், நட்சத்திரங்கள்- லிங்கத்தின் மேல் உள்ள மாலை, ஆடை- எட்டு திசைகள் என்று லிங்கத்தின் அடையாளமாக குறிப்பிடலாம் என்கிறார்.


பிண்ட லிங்கம்                                                                     


மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் கொண்டது. பிண்ட லிங்கம் மக்களின் உடலமைப்பு சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங் கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன .


மானுடராக்கை வடிவு சிவலிங்கம்


மானுடராக்கை வடிவு சிதம்பரம்


மானுட ராக்கை வடிவு சதாசிவம்


மானுடராக்கை வடிவு திருக்கூத்து என்று திருமூலர் கூறுகின்றார்.


மக்கள் தலை- பாணம்


இடைப்பட்ட உடல்- சக்தி பீடம்


 கால் முதல் அரை வரை- பிரம்ம பீடம் எனக் கொண்டால்! மானுடராக்கை வடிவு சிவலிங்கமாக தோன்றும்.


பிண்டத்தை சிவலிங்கமாக காண்பது உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது .


சதாசிவ லிங்கம்


லிங்கத்தை கத்தியும் சிவமும் இணைந்த உருவமாக காண்பது.


சிவனுக்கு இருதயம்- ஞான  சக்தி


தலை- பராசக்தி                                                   


தலைமுடி- ஆதிசக்தி


கவசம்- இச்சாசக்தி


நேத்திரம்- கிரியா சக்தி


சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும்.


சதாசிவம் உருவமும் அருவமும் இருந்து உயிர்களுக்கு உதவி செய்யும்.


சதாசிவ லிங்கம் சிவமும் சக்தியும் பெற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது .


ஆத்ம லிங்கம்


அனைத்து உயிர்களையும், இறைவனாகக் காண்பது ஆத்ம லிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கும் நிலை. நாதமும் விந்துவும் காலத்தலே, ஆத்மலிங்கம் என்று திருமூலர் குறிப்பிடுகிறார் .


திருமூலர் முதலிய தவயோகியார் சிவ லிங்க வடிவங்களை பீடமும், லிங்கமாக வைத்து பீடத்தை விந்து வடிவம் எனும் லிங்கத்தை நாத வடிவம் எனவும் உணர்த்தியுள்ளார்.


நாதம் என்பது முதல்வனது ஞானசக்தி நோக்கத்தினால், சுத்த மாயையில் நேர்கோட்டு வடிவில் மேலும்,கீழுமாக எழும் ஒரு அசைவைக் குறிக்கும். இவ்விரண்டு அசைவும் முறையே முதல்வன் அது ஞான சக்தியினாலும், கிரியா சக்தியினாலும், விளைவாக சில சக்திகள் சேர்க்கையை உணர்த்தும் என பெரியோர்கள் கருதுகின்றனர்.


 இவ்விரு அலைகளும் இணைந்து, பிணைந்து மாறுபடும் உலகப் பொருட்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் தேய்ந்து மாறுதலையும் உண்டாக்குகின்றன என்கின்றனர்.


ஞான லிங்கம்                                                       


உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும். இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம் என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.


சிவலிங்கம்


அனைத்துமாக விளங்கும் சிவனை ஒருகுறியின் இடமாக எழுந்தருளச் செய்வது ஆன முறையை உணர்த்துகிறது.


அடையாளமும், உருவமும் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால், நினைக்கவோ, வழிபடவோ முடியாது.


 பக்குவமில்லாத உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய முறையாக இறைவனை உணர்த்தும், ஒரு அடையாளம் தேவையாக இருக்கிறது. அதனால்,


எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அக்குறியிலும், எழுந்தருளியுள்ளான் .


என்று கூறுவதை நினைவில் கொண்டு! இறைவனை லிங்க வடிவில் வணங்கி நற்பேறுகளை பெற்று சிறப்புடன் வாழ்வோம்.


 இதை மலேசியாவின் சைவநெறிக் கழகம் வெளியிட்டுள்ளது.


Popular posts
இந்து மதத்தை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளுக்கு, பிறவியின் நோக்கம், எதற்கு என்பதாவது தெரியுமா?
படம்
நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் இந்திய செயற்கைக்கோள்கள் - இஸ்ரோ தலைவர் நாராயணன்.
படம்
நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்
படம்
நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை - விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.
படம்
நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!
படம்