பத்திரிக்கை என்றால் என்ன... எது பத்திரிக்கை..

பத்திரிக்கை என்றால் இன்று ஒருபுறம் செய்தி என்று தான் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பொது கருத்து. | இந்த கருத்து படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் நினைப்பது இந்த செய்திகள் என்பது தான். இதில் எல்லாமே செய்தி என்று தான் அதை செய்தித்தாள் ஆகவும், புத்தகமாகவும், மேலும் பல வடிவங்களில் அவை வெளிவருகிறது. இப்படி வரும் செய்திகளைத் தான் இன்று பத்திரிக்கை என்று அரசாங்கமும், மக்களும் நினைக்கிறார்கள்.



ஆனால், இந்த செய்திகளில் எது முக்கியமானது? முக்கியத்துவம் வாய்ந்தது? அவசியமானது? அதிக தேவையானது? என்று பிரித்தால், தினத்தாள்களில் வருவது என்ன? வார இதழ்களில் வருவது என்ன? மாதம் மற்றும் மாதமிருமுறை போன்றவற்றில் எந்த மாதிரியான செய்திகள்? எப்படிப்பட்ட செய்திகள்? அதன் நோக்கமும் பயன்களும் யாருக்கு? அரசுக்கா ? இல்லை மக்களுக்கா? இல்லை அதிகாரிகளுக்கா? இதையெல்லாம் தரம் பிரித்தால்! எது பத்திரிக்கை? எதற்காக அது? என்ற விவரம் எல்லோருக்கும் புரியும். இன்று வரை இந்த விவரம் செய்தித்துறைக்கு கூட தெரியுமா? அல்லது தெரியாதா? என்று எனக்கே தெரியவில்லை . எல்லாம் இது ஒரு குருட்டு தனமான செயல்பாட்டிலே நடந்து வருகிறது. இதற்கு இவர்கள் கூறும் காரணத்தை ஆராய்ந்தால், தவறான கருத்தாகவே உள்ளது.


இந்த கேள்விக்கு சரியான விளக்கம் தரமுடியாது ஏன் என்றால்! இன்று வரை அரசாங்கத்தால் கொள்கை முடிவாகவே அது செயல்பட்டு வருகிறது. இதில் உண்மைகள் பல..! அதைப் பற்றி என்னைவிட மூத்த பத்திரிக்கையாளர்களிடம் கூட விவாதிக்க விட்டேன். முக்கிய கருத்து என்றால் ஓவோ! அல்லது அக்மார்க்கோ என்ற தரச்சான்று பெற்றது அல்ல..! இதை எழுத நிறைய பக்கங்கள் தேவை! ஆனால், அதன் சுருக்கத்தை மாறும் இங்கே வெளிப்படுத்துகிறேன்.


மக்களும், அதிகாரிகளும். ஆட்சியாளர்களும் இதுதான் பத்திரிக்கை! இதற்கு மேல் எதுவும் இல்லை என்று சராசரியாக நினைப்பவர்கள் ஒருபுறம்! பத்திரிக்கை என்றால் பல வித்தியாசமான, தேவையான, உண்மையான, அவசியமான செய்திகள்! கட்டுரைகள்! இதற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்! அவர்களால் தான் பத்திரிக்கையை தரம் பிரிக்க முடியும். அவர்கள் கூறும் கருத்துதான் பத்திரிக்கையைப் பற்றி விமர்சனம் செய்யத் தகுதியானவர்கள். எழுத்துக்கூட்டி படிப்பவர்கள் எல்லாம் பத்திரிக்கையை தரம் பிரிக்க முடியாது.


மேலும், செய்தித்துறை பத்திரிக்கையை தரம்பிரிப்பது circulation மற்றும் அரசு செய்தியை போடுவது மட்டுமே! அரசின் செய்தியில் பல உள்ளன. அதில் எது முக்கியம்? எது மக்களுக்கு தேவையானது..! என ஆய்வு செய்வது முக்கியமானது. இதை பற்றி மேலும்...! அடுத்த இதழில்...! - ஆசிரியர்.