மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

 

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள்.

இது முழுக்க, முழுக்க சமூக நலன் சார்ந்தது. இந்த தேச நலன் சார்ந்தது. இது பற்றி வாசகர்களுக்கும், நன்றாக தெரியும். மேலும், பொய்யான செய்திகள் நமது இணையதளத்தில் வராது. இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை என்பது அதிலும், சமூக நலன் பத்திரிகைகள் நடத்துவது மிகப்பெரிய போராட்டத்தில் இயங்கி வருகிறது. மேலும்,

இன்று கார்ப்பரேட் பத்திரிகைகளோடு போட்டி போடும் அளவில் மக்கள் அதிகாரம் இருப்பது வாசகர்களுக்கு தெரிந்த ஒன்று தான். அந்த செய்திகளுக்கும், இதற்கும் வேறுபாடு இருக்கும் என்பது வாசகர்களாகிய உங்கள் மனசாட்சிக்கு அது தெரியும். எனவே இந்த தளம், மக்களுக்கானது. மக்கள் நலனுக்கானது.

தவிர, இணையதளத்தில் பத்திரிகை நடத்துவது சாதாரண காரியம் அல்ல. இது கடும் போட்டியாளர்களை சந்திக்கும் இடம். இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் வாசகர்கள் ஆகிய உங்கள் மனதில் மக்கள் அதிகாரம் இடம் பிடித்தால் மட்டும்தான், அது முடியும்.

ஒரு அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் மட்டுமே, இதைப் பற்றி சிந்திப்பார்கள் .மேலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாவிட்டால், சமூக நலன், பத்திரிகைகளின் நலனில், அக்கறை இருக்காது. இதில் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, அதிகாரிகளும் அப்படி தான் இருப்பார்கள் ‌‌. தவிர,

இந்த ஆட்சியில் எதுவுமே மக்களுக்காக இல்லாத போது, எங்களுடைய சமூக நலன் பத்திரிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா? இவர்களுடைய அரசியல் வியாபாரத்தில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு எப்படி நல்லது நடக்கும்? இருப்பினும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு தொடர்ந்து அதிகாரிகள், நண்பர்கள் ஆதரவு கொடுப்பது, இந்த சமூக நலனில், அவர்களுக்கும் நிச்சயம் இதில் பங்கு உண்டு.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் மக்கள் அதிகாரம் அடுத்த ஆண்டு சமூகப் பணியில் ஈடுபட்டு, சிறப்பான முறையில் செய்து வருபவர்களுக்கு! அது அதிகாரிகளாக இருக்கட்டும், அரசியல் கட்சியினராக இருக்கட்டும், நீதிபதிகளாக இருக்கட்டும், வழக்கறிஞர்களாக இருக்கட்டும், அதில், தகுதியானவர்களை தேர்வு செய்து, மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், எமது சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், பாராட்டுக்கள், மற்றும் விருதுகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.மேலும்,

போராட்டங்களுக்கு முக்கிய காரணம் ,எல்லாத்துறையிலும் போலிகள் மலிந்து விட்டது. உழைப்பே இல்லாமல், உண்மையே இல்லாமல், அது போட்டி போடுகிறது. இது கலிகாலத்தின் வேதனை.

மேலும், அந்தப் போட்டியிலும் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. தவிர, இந்த பத்திரிக்கை துறையைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு தெரியாது. விளம்பரப்படுத்துவது தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.