திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற இந்து மக்கள் முன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அது ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மதிக்காமல் ,வேறு ஒரு இடத்தில் தீபத்தை ஏற்றியது. நான் ஏற்கனவே பல முறையில் சொல்லி இருக்கிறேன். இவர்கள் வேண்டுமென்றால் சட்டத்தை மதிப்பார்கள் .வேண்டாம் என்றால் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். இல்லை என்றால் மிதிப்பார்கள். அந்த வேலையை தான் இன்று ஸ்டாலின் செய்திருக்கிறார்.

சட்டத்தை மதிக்காத இவர்கள் எதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு ஓடினார்கள்? அங்கு எதற்காக எஸ் ஐ ஆரு(SIR)க்கு தடை கேட்டார்கள்? அப்படி என்றால், உங்களுக்கு வேண்டுமென்றால் சட்டம் ,வேண்டாம் என்றால் காரணம் சொல்வீர்களா?

ஒவ்வொரு நீதிமன்றமும், நீதிபதிகளும், இவர்களுடைய நிலை என்ன? சட்டத்தை மதிக்கிறவர்களா ?அல்லது மதிக்காதவர்களா ?என்பதை பற்றி நீதிபதிகள் தான் இந்த விஷயத்தில் ஆய்வு செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல,இந்துக்கள் வணங்கக்கூடிய முருகனின் மலையில் தீபம் ஏற்றினால், உங்களுக்கு மத கலவரம் வரும். ஆனால், அவர்களுடைய ஓட்டு மட்டும் காலில் விழுந்து, கெஞ்சி கூத்தாடி வாங்கிக் கொள்ளலாம். பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

அந்த அளவுக்கு இந்த மக்கள் பைத்தியக்காரர்கள், முட்டாள்கள், பேசியே கவிழ்க்கக்கூடிய திறமை என்பதை எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு தெரியும். அது பாமர மக்களுக்கு தெரியாது. அதனால்தான், பலமுறை இந்த ஏமாற்று அரசியலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மீண்டும் ஏமாற்றப்படுவீர்கள்.

இவர்கள் பொய்யை ,மெய்யாக பேசி நடிப்பவர்கள். அதுதான் திமுகவின் கைவந்த கலை. இந்த எச்சக் கலை அரசியல்! அரசியல் தெரியாத ,படிக்காத, பாமர மக்களிடம் பயன்படுத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் கொடுக்கிறேன். அதை 5000 ஆக்கப் போகிறேன் .எல்லாம் வாயிலே கதை விடுவார்கள்.

இந்த கதை எல்லாம் நீங்கள், மீண்டும் நம்பினால், மறுபடியும் உங்களுக்கு இந்த அரசியல் ஒரு மிகப்பெரிய போராட்டமான ,வாழ்க்கை அடித்தட்டு மக்களிடமிருந்து, நடுத்தர மக்களிடமிருந்து ,இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. இந்த வலியும், வேதனையும் 2026 தேர்தல் வரைக்கும் நீங்கள் மறக்கக்கூடாது.

மேலும், திருப்பரங்குன்றம் முருகன் ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றம் .இங்கே தீபம் ஏற்றக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்துக்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார்கள். இது இந்து சமயமா? அல்லது திராவிட சமயமா ?எது? என்பது 2026 இல் தெரியும்.மேலும்,

ஒட்டுமொத்த இந்துக்களும் , இந்த விஷயத்தில் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்கள். உங்களுக்கு ஆதரவாக பேசுபவன், இந்துக்களாக இருக்க மாட்டான் . அவன் இந்து விரோதியாக இருப்பான் .இல்லையென்றால்,உங்களிடம் வாங்கி தின்னும் கைக்கூலி தான் உங்களுக்கு ஆதரவாக பேசுவான். உங்களுக்கு வாக்களிப்பான் .அதில் ஒன்று மாற்று கருத்து இல்லை.
மேலும், உங்களுடைய அல்லக்கை கட்சிக்காரர்கள், கூட்டணி கைக்கூலிகள் ,வெத்து வெட்டு அரசியல் பேசும் கூட்டங்கள் ,வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறது. உன்னுடைய கையில ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்று இந்த மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியது மிகப்பெரிய தவறு. அதுமட்டுமல்ல,

அங்கே மதக்கலவரம் வரும் அளவுக்கு என்ன இருக்கிறது? இதை நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஸ்டாலினை அழைத்து அதற்கான விளக்கத்தையும் ,காரணத்தையும் கேட்க வேண்டும் .அப்போதுதான் இதற்கு உண்மையான தீர்வு? இதற்கு ஸ்டாலின் தரப்பில் அதிகாரிகள் பதில் சொல்லக்கூடாது .ஸ்டாலினே நீதிமன்றத்தில் நிற்க வைத்து நீதிபதிகள் கேள்வி கேட்க வேண்டும்.மேலும்,
நாட்டில் எட்டு கோடி தமிழ் மக்களில் 5 கோடி பேர் இந்துக்களாக இருக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே கடவுள் வழிபாடு செய்து வணங்கி, மனுதார கும்பிடுபவர்களாக இருந்தால், இதற்கு அத்தனை இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

ஒரு நீதிமன்ற உத்தரவு செயல்படுத்த முடியவில்லை .எதற்கு இந்த அரசு? சட்டத்தை மதிக்காத அரசு எதற்கு? சாமானிய மக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒரு நீதிபதிக்கு இல்லாத அதிகாரம் சாமானிய மக்களிடம் எதுவுமே இல்லை. அவர்கள் உத்தரவு பிறப்பித்தும், ஆட்சி கையில் இருக்கிறது என்று மதிக்காமல் அங்கே 144 தடை உத்தரவு போடுகிறார்கள் என்றால் எதற்காக?

முஸ்லிம்களும் ,கிறிஸ்தவர்களும் ஓட்டு போட மாட்டார்களா? ஓட்டுக்காக நடத்தக்கூடிய அரசியல் என்பது திமுகவின் அரசியல்! இங்கே ஒட்டு மொத்தமாக இந்துக்கள் ஓட்டு அடி வாங்கப் போகிறது! அப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? நீ பணத்தை கொடுத்து தான் விலை பேசலாம் என்று திமுகவின் திட்டம். அந்த திட்டம் மக்கள் பணத்தை வாங்கிக் கொள்வார்கள் .ஓட்டு போட மாட்டார்கள். இதுதான் மக்களின் மனநிலை.

உன் கட்சிக்காரன் என்ன ரவுடித்தனம் பண்ணாலும், வேலைக்காகாது. உன்னை யாருட பணம் கொடுக்க சொன்னது என்று கேட்பான்? நீ கோர்ட்டுக்கு போக முடியாது. போலீஸ் ஸ்டேஷன் போக முடியாது. அவனை மிரட்டினால், இருக்கிற கட்சிகாரன் பூரா அவனை நோண்டி நோங்கு எடுத்து அவன் மேல எப்.ஐ.ஆர் போட்டு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க சொல்லி விடுவார்கள்.
எனவே, மக்கள் திமுகவின் கொள்ளையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஊழல்களை பட்டியல் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அடாவடி தனத்தையும், பொறுக்கித்தனத்தையும், ரவுடி தனத்தையும், இவர்களுடைய பேச்சுக்களையும், மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல,

உங்களுடைய மனைவி வேஷம் போட்டு கோயில் கோயிலாக சாமி கும்பிட்டு இந்துக்களை ஏமாற்ற முடியாது. இனி எந்த இந்துக்களும் ஏமாற மாட்டான். முருகன் தான் தீய சக்திகளுக்கு எதிரியாக நிற்பான்.

நீங்கள் எல்லாம் முஸ்லிம் மதத்துக்கு பின்னாடியும், கிறிஸ்தவ மதத்திற்கு பின்னாடியும், ஒளிந்து கொண்டு இருந்தால், யாரை ஏமாற்ற இந்த வேலையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

மக்கள் 19 65 -70 அல்ல, இப்போது உடனுக்குடன் உண்மையை படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்களை இனி திமுக ஏமாற்றி அரசியல் செய்வது ரொம்ப கஷ்டம்.

திமுக ஊடகங்களும், எவ்வளவுதான் பொய்யை அவிழ்த்து விட்டாலும், அதையெல்லாம் மூட்டை கட்டி மக்கள் குப்பையிலே போடுவார்கள் என்பது உறுதி.