மதத்துக்குள் தான் கோயில் இருக்கிறது. அது இந்து கோயில், இந்து மதம்! அப்படி இருக்கும்போது அந்தப் பிரச்சனையை பற்றி பேசினால் ,அது மத அரசியலா?

அதுவே, ஒரு கிறிஸ்தவ கோயிலாக இருந்தால், அந்தப் பிரச்சினையை பற்றி நீங்கள் பேசினால், அது மத அரசியல் இல்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், இந்துக்களுக்கு ஒரு நியாயமா? மேலும்,
கிறிஸ்தவ மதத்திலிருந்து நீ மதம் மாறினாயா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது.
அதைப் பற்றி பேச கூட ,உனக்கு தகுதி இல்லை. ஆனால், அரசியல் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்து விட்டு, தமிழ்நாட்டில் எப்படி உங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கலாம். கிறிஸ்தவனோ, முஸ்லிமோ சொன்னால், அது மதம் இல்லை .ஆனால் ,இந்து சொன்னால்,அது மத வெறி? மேலும்,

உங்களுக்கெல்லாம் மதம் இருக்கிறது .இந்துக்களுக்கு மதம் இல்லையா? கிருத்தவன், முஸ்லிம், இவர்களெல்லாம் மதத்தில் அரசியல் செய்யலாம்.
ஆனால், இந்தியாவில் பழமையான இந்து மதம், அரசியல் செய்யக்கூடாது. சீமானைப் போல பல அரசியல் கட்சிகள் ,அதற்கு அறிவுரை சொல்லுவார்கள். அறிக்கை விடுவார்கள். சீமான் உன்னுடைய அறிவு எவ்வளவு ? என்று விஜயலட்சுமி சொல்லி இருக்கிறது .அது, தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.அதனால்,

தொடர்ந்து சைமன் அறிவாளி போல் இந்துக்கள் எல்லாம் முட்டாள்கள் போல் அறிக்கை விடாதே, உன்னுடைய அறிக்கை, கிறிஸ்தவர்களுக்கு விடு, இந்துக்களுக்கு விடாதே, ஏனென்றால், உன்னுடைய தாய், மதம் அதுதான்.
அங்கே உன் அறிக்கையை விட்டு அரசியல் செய்! இந்துக்களில் வாங்கித் திண்ணும் கூட்டம், பதவிக்கு அலைகிற கூட்டம், இவர்களை எலலாம் சேர்த்துக் கொண்டு கட்சி என்று இந்துக்களை கேவலப்படுத்தி பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

இவ்வளவு பேசக்கூடிய சீமான் என்கிற சைமன்,திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போய் எப்படி சாமி கும்பிட்டாய்? அது வேஷமா? அல்லது இது வேஷமா? தமிழ்நாட்டில் ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்துவிட்டு, ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக் கொண்டு, இந்துக்களையும் இந்து மதத்தையும் கொச்சைப்படுத்தி கொண்டு நீ அரசியல் செய்தால் , உனக்கு இந்துக்கள் வாக்களிக்க வேண்டுமா?
அதனால் தான் ,அந்த காலத்தில் எம் ஆர் ராதா என்ற நடிகர் சொல்வார் அரசியலுக்கு தகுதியில்லாதவன் எல்லாம் அரசியல் பேசுகிறான்.
இந்த பத்திரிகை காரார்களை கூப்பிட்டு, படம் எடுக்க சொல்லி ,சேற்றிலே புரண்ட சீமான், என்று படம் எடுக்க சொல்லி ,அந்தப் படத்தை வீட்டுக்குள்ளே மாட்டி, மக்களை ஏமாற்றிய காலமெல்லாம் முடிந்து விட்டது.அதுவும், உன் பாஷையில் சொல்ல வேண்டுமானால், இனி அதுவெல்லாம் வேலைக்காகாது ராசா.

ஆக கூடி இந்து மதமும் இந்துக்களும் என்றால் அரசியல் கட்சியினருக்கு கேவலமாகிவிட்டது. இதை வைத்து அரசியல் செய்வார்கள். மேலும், இந்துக்களை கேவலமாக பேசி, முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் முட்டாளாக்கி அவர்களிடம் ஓட்டுக்களை வாங்குவார்கள்.

இப்படி ஓட்டுப் பிச்சை கேட்கிறவர்கள் எப்படி இந்த நாட்டு மக்களுக்காகவும், தேசத்திற்காகவும், பாடுபடுவார்கள்? என்ன சினிமா டிராமாவா? பாட்டு,பாடிட்டு கூத்தாடிட்டு, வேஷம் போட? அதுவெல்லாம் சினிமாவில் காட்டு, அங்கே காட்ட முடியாமல் தான், இப்போது அரசியலில் காட்டிக் கொண்டிருக்கிறாய் சைமன். அதனால், இந்துக்கள் விழித்து விட்டார்கள்.

இனி எத்தனை கட்சிக்காரர்கள் தமிழ்நாட்டில் இந்துக்களை முட்டாளாக்கி அரசியல் செய்து ஓட்டு பிச்சை எடுப்பீர்கள்?அது முடியாது. இந்துக்களுக்காக அரசியல் செய்ய பிஜேபி ,இந்து முன்னணி, இந்த அமைப்புகள் வந்துவிட்டது.
இவர்கள் செய்தால்! அது மதம், நீங்கள் செய்தால்! அது அரசியலா ?யாரை ஏமாற்றுகிறீர்கள்? நீ சொல்வதை எல்லாம் பத்திரிக்கையில் எழுதி இந்துக்களை முட்டாளாக்க நாங்கள் விட மாட்டோம்.

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம், எப்படியும் எழுதிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கதை எல்லாம் இனி வேகாது ராசா.
மேலும், எதிர்க்கட்சிகளுக்கும், திமுகவுக்கும், நீதிபதி ஜி ஆர். சுவாமிநாதன் மீது பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் எம்பிக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்?

இது அரசியல் இல்லையா? இது மதமா? ஒரு நீதிபதியின் தீர்ப்பு !சட்டத்திற்கு உட்பட்டது. அதையே மத அரசியல் ஆக்கிவிட்டார்கள் . அப்படி என்றால், இது நீதித்துறைக்கு அரசியல் கட்சியினர்கள் விடுகின்ற சவால்களா?

நீங்கள் எப்படி பேசினாலும், அது அரசியல்! அதைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்கின்ற பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், நாட்டில் நான்காவது தூணா? தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. அதை சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எதிர்க்கும்...! மேலும் ,இது இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்கும் வேலை. இந்துக்கள் அனைவரும் விழித்தெழ வேண்டிய நேரம் இது...!