திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்ற கொடுத்த நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் உத்தரவு நீதித்துறையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.-இதை விமர்சிக்கும் தகுதி ,அரசியல் கட்சிகளுக்கு இல்லை.

 

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ,சாதகமாக தீர்ப்பு சொல்ல நீதிபதிகளா? அல்லது நீதி துறையா? இன்று நாட்டில் நீதித்துறை ,பத்திரிக்கை துறை, ஏன் ?அரசியலை விமர்சிக்கும் போது ,உங்களுடைய ஆட்சி ,அதிகாரம் கேவலமாக இருக்கும் போது நீங்கள் எப்படி அடுத்தவர்களுடைய நேர்மையை விமர்சிக்க முடியும்? நாட்டில் ஊழலும் ,ரவுடிசமும் ஆட்சியாக நடத்திக் கொண்டு ,நீங்கள் நீதிபதிகளை விமர்சிப்பீர்களா?

உங்களுக்கு நீதிபதிகளை விமர்சிக்க தகுதி இருக்கா ?தகுதி இல்லை. மேலும்,தகுதியற்ற ஒரு ஆட்சி ,அதிகாரத்தை, மக்களிடம் செயல்படுத்திக் கொண்டு ,சரியான தீர்ப்பு, நியாயமான தீர்ப்பு ,சட்டத்தின்படி கொடுத்த தீர்ப்பை விமர்சிக்க திமுக அரசுக்கு அல்லது அவர்களுடைய கட்சிக்கு மேலும் அவர்களுடைய கூட்டணி கட்சிக்கு அந்த தகுதியே இல்லை .எந்த அருகதையும் இல்லை.

நீங்கள் ஒருவரை குறை சொல்வதற்கு முன், உங்களுடைய தகுதி என்ன ?உங்களுடைய தரம் என்ன ? உங்களுடைய நேர்மை என்ன ?உங்களுடைய ஒழுக்கம் என்ன? உங்களுடைய அரசியல் நிர்வாகத் திறமை என்ன?இதையெல்லாம் சேர்த்து வைக்க பார்த்து தான், ஒருவன் ஒருவரை விமர்சிக்க கூடிய தகுதி உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.

அந்தத் தகுதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இல்லை. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு தெரியாது. ஆனா ,அதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

அரசியல் தெரியாத மக்களிடம் பேசுவது போல் தெரிந்தவர்களிடம் பேச முடியாது. நீங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டிக் கூடியவனிடம் பேச வேண்டும் அவனுக்கு எது பேசினாலும், புரியாது.

மேலும்,திருப்பரங்குன்றம் கோயிலின் வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து பாருங்கள் .இதன் உண்மைகள், வரலாற்று கல்வெட்டுக்கள், தொல்லியல் துறையின் ஆய்வுகள் இதையெல்லாம் படிக்காமல் பேசக்கூடாது .இதை எல்லாம் படித்து தான் ஒரு நீதிபதி இந்த தீர்ப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், நீதிபதியின் தீர்ப்பு இவர்கள் அரசியல் கட்சி மேடைகளில் பேசுவது போல விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இதையெல்லாம் படிக்காத முட்டாள்கள் எப்படியும் பேசலாம். எப்படியும் பேசுவது படிக்காத, அரசியல் தெரியாதவனிடம் காட்டுகின்ற திறமை. படித்தவர்கள் கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்விக்கு இவர்களால், பதில் சொல்ல முடியுமா?

மேலும், இன்று நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பு சட்டத்தின்படி கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பு .இது ஒரு மதத்தினருக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நீங்கள் உச்ச நீதிமன்றம் கூட செல்லலாம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எல்லா இடத்திலும் அந்தக் கோயிலினுடைய வரலாறு, தொல்லியல் துறையின் ஆய்வுகள் ,கல்வெட்டின் ஆய்வுகள், அத்தனையும் ஆதாரத்துடன் நிரூபிக்க போகிறார்கள்.

மேலும்,இடையில் இந்த தர்கா எப்படி வந்தது? என்பது 1947 க்கு பிறகு, நாட்டு மக்களுக்கு தெரிந்த உண்மை. அப்படி இருக்கும் போது, திமுக மிகப்பெரிய தவறு ,இந்துக்களுக்கு, இந்து கோயில்களுக்கு செய்து வருகிறது.

அதுவும் நீதித்துறை கொடுத்த தீர்ப்பின்படி, நீங்கள் எங்கு ஏற்ற வேண்டுமோ, அங்கு தான் தீபத்தை ஏற்றி இருக்க வேண்டும். ஆனால், நீங்களாக ஒரு இடத்தை தேர்வு செய்து ,அங்கு ஏற்றுவது அரசியல் உள்நோக்கம்.

மேலும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சொன்ன ஒரு உண்மை, இந்த வழக்கு யார் எதிர் தரப்பாக இருக்கிறார்களோ ,அவர்கள் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதாவது இந்த வழக்கை முஸ்லிம்கள்தான் இதை மேல்முறையீடு செய்ய தகுதி உள்ளவர்கள்.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேல் முறையீடு செய்கிறார்கள். இது இந்து சமய அறநிலையத்துறையா? அல்லது இந்து கோயில்களுக்கு எதிரான அறநிலைத்துறையா? என்பது 2026 தேர்தலில் மக்கள் கண்டிப்பாக திமுகவுக்கு பதில் சொல்வார்கள்...! 

பக்தர்கள் பயங்கரவாதி என்றால், உன்னுடைய கட்சிக்காரர்கள் யார்? திருமாவளவன் என்று பொதுமக்கள், திருமாவளவனை திருப்பி கேட்கிறார்கள்? இதற்கு திருமாவளவன் பதில் சொல்ல தயாரா?மேலும், நீதிபதியை விமர்சிக்கிற தகுதி உனக்கும் இல்லை திமுகவுக்கும் இல்லை.