உயர் நீதிமன்ற நீதிபதி ஜி .ஆர். சுவாமி நாதனை தகுதி நீக்கம் செய்ய மு க ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா ? - திமுகவின் கொள்கை ஆட்டம் காணுகிறதா ?

 

தமிழ்நாட்டில் திமுகவின் கொள்கை, கடவுள் மறுப்பு கொள்கை ,கடவுளை எதிர்த்து பிரச்சாரம், கோயில்களை இடித்து பிரச்சாரம் ,தெய்வங்களுக்கு எதிரான பிரச்சாரம் ,இன்று அந்த கொள்கையான அரசியலுக்கு, இந்த ஆன்மீக அரசியல் ஒரு போட்டியான அரசியலாகிவிட்டது. ஜி.ஆர் .சுவாமிநாதனின் திருப்பரங்குன்றம் மலையின் தீர்ப்பு.

இதனால், திமுகவின் அஸ்திமாரமே ஆடிப் போயிருக்கிறது. எந்த இந்துக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களோ, அது இப்போது அடிபட்டு இருக்கிறது.

அதாவது ஆன்மீக அரசியல்! இவ்வளவு கூட்டம்? இவ்வளவு மக்கள்? மனதில் ஒரு எழுச்சி!நம்மளுடைய தெய்வங்கள், நம்மளுடைய கோயில்கள், நாம் வணங்க அனுமதி இல்லையா? என்று இந்துக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு.

அதை தான் இவர்கள் ஜி .ஆர். சுவாமிநாதன் உடைய தீர்ப்பை வைத்து, திமுக செய்த அரசியல் அங்கு பலன் அளிக்கவில்லை. மக்களுக்கு நன்றாக புரிகிறது. நம்முடைய இந்து கோயில்கள் பழமையானது. பாரம்பரியமிக்கது. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மலை இருந்து வருகிறது .

இப்போது இந்த தர்கா அந்த இடத்தில் இருக்கிறது . அதற்கு முக்கியத்துவம் அதுதான் திமுகவின் அரசியலாக இருக்கவே, இந்துக்களுக்கு இந்த சம்பவம் தமிழக முழுதும் ஒரு வெறுப்பை இந்துக்கள் திமுக மீது ஏற்படுத்தியிருக்கிறது. இங்கே ஸ்டாலின் அரசியலை பார்க்கிறார். நமக்கு எதிரான ஒரு அரசியல் இந்த மலையின் தீர்ப்பால் வந்திருக்கிறது. ஐயா உங்களுக்கு சர்வே ரிப்போர்ட் போய்க் கொண்டிருக்கிறது அல்லவா?

திமுகவுக்கு இவ்வளவு சீட்டு கிடைக்கும். அதிமுகவுக்கு இவ்வளவு சீட்டு கிடைக்கும். 70 சீட்டு கிடைக்கும். இந்த சர்வே எல்லாம் உண்மையான சர்வே அல்ல. அரசியல் கட்சிகள் அத்தனை பேருக்கும் சொல்கிறேன். முருகனின் சக்தி .ஒரே நாளில் மாற்றக்கூடிய சக்தி. இந்த சர்வே எல்லாம் ஒன்றுமே இல்லை. அதனால், திமுகவுக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய மரண அடியை திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பு மட்டுமல்ல ,முருகனே தீர்ப்பு எழுதப் போகிறான்.

மேலும், இந்துக்கள் மனதில், இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவன் யார் நம்மளை தீபம் ஏற்றக்கூடாது? இதுதான் ஒட்டுமொத்த இந்துக்களின் கேள்வி?

மேலும்,கூலிக்கு மாரடைக்கக்கூடிய தொலைக்காட்சி, பத்திரிகைகள் எப்படியும் மாரடைப்பார்கள் அதைப்பற்றி மக்கள் கவலைப்படவில்லை. ஆனால்! ஸ்டாலின் அதிகாரத்தை வைத்து

நீங்கள் இங்கே தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்வது மக்களுக்கு நாம் கொடுத்த அதிகாரம் நமக்கே இவர்கள் நம்மை அழிக்க பார்க்கிறார்கள் என்பதை ஒவ்வொரு இந்துக்களும் சிந்தித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஸ்டாலினை சுற்றி இருக்கக்கூடிய திருமுருகன் காந்தி பல பல அமைப்புகள் இந்துக்களுக்கு எதிராக பேசியிருக்கிறார்கள். இதே நீதிமன்றத்திலே திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகிறார்கள்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியலாக்கும் போது மக்கள் பார்த்துக்கொண்டு அதற்கு ஆதரவாக கைதட்டுவார்கள் என்று ஸ்டாலின் நினைத்தது தான் தவறான கணக்கு. மேலும், கூலிக்கு கூவுகின்ற youtubers, என்னென்னமோ சொல்லிப் பார்க்கிறார்கள். மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சியில் அரசியல் செய்வதுபோல இவர்களும் பிரித்தாலும் பேச்சுக்களை நியாயப்படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. இது இந்துக்களின் கோபமாக தான் வெளிப்படுகிறது. மேலும்,



ஒரு நீதிபதியின் தீர்ப்பை கூட மதிக்காமல் ,அரசாங்கம் நம்முடைய இந்து கோயில்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை இந்துக்கள் மனதில் ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் ஓட்டுக்கு அரசியல் செய்யக்கூடிய ஸ்டாலினுக்கு, இது கொடுக்கப்பட்ட மரண அடி தீர்ப்பு.

அதனால் தான் இவரை பதவி நீக்கம் செய்யும் அளவிற்கு டெல்லியில் உள்ள எம்பிக்களை அதாவது ஒட்டுமொத்த இந்திய கூட்டணி எம்பிக்களை இவருக்கு எதிராக கையெழுத்து போட்டு ,அதற்கான தீர்மானத்தை நேற்று ஓம் பிர்லாவிடம் கொடுத்து இருக்கிறார்கள் .


அதில் சுமார் 100 எம்பிக்கள் கையெழுத்து இட்டதாக தெரிகிறது. இந்தத் தீர்மானம் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதனை மிகவும் மனதளவில் ஒரு வேதனையை ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால் அவர் சட்டப்படி தான் தீர்வு கொடுத்திருக்கிறார். ஒரு மதத்திற்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. ஒரு கோயிலின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் .

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவீர்கள். எந்த பக்கம் வேண்டுமானாலும், நின்று கொண்டு அரசியல் செய்வீர்கள், அதற்கெல்லாம் நீதிமன்றம், உங்கள் கருத்துக்காக ,அல்லது உங்களுடைய எண்ணத்திற்காக ,தீர்ப்புகளை நீதிபதிகள் எழுதிக் கொண்டிருக்க முடியாது.


தற்போது நீதிமன்றத்திலும் ,வழக்கறிஞர்கள் மத்தியிலும் ,திமுக அரசியல் செய்ய நீதிமன்றம் தான் கிடைத்ததா?

நீங்கள் அரசியல் செய்வதென்றால் அரசியல் கட்சிகளுடன் அரசியல் செய்யுங்கள். நீதிமன்றத்துடன் அரசியல் செய்ய எந்த சட்டத்திலும் இடமில்லை.

அதனால் ஸ்டாலின் இந்த இம்பீச்மெண்ட் என்கிற நீதிபதிகளின் தகுதி நீக்கம் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்து விட்டனர். மேலும்,

ஏதோ ஆயிரம்,500 க்கு ஓட்டை விக்கிறவன் ,ஓட்டு போட்டு விட்டான் .நீங்கள் பதவிக்கு வந்து விட்டீர்கள். உங்கள் தகுதி பார்த்து எவனாவது ஓட்டு, போட்டு இருக்கிறானா?

நீதிபதிக்கு தகுதி இருக்கிறது. படித்து சட்டம் பயின்று, பல வழக்குகளை சந்தித்து, அதிலும் வெற்றி பெற்று ,ஒரு நீதிபதியாக பதவியில், தகுதியோடு இருப்பவர்களை ,எந்த தகுதியும் இல்லாமல், அதிகாரத்திற்கு வருகிறவர்கள், மக்களின் ஓட்டு இவர்களுக்கு தகுதியா? தகுதியானவர்களா? உனக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள்? இதற்கு ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா?

உன்னுடைய கட்சிக்காரன் எப்படியும் பேசுவான், அவன் பேச்சு! ஒரு பேச்சா? குடிகாரன் பேசுவான், அவன் பேச்சு ஒரு பேச்சா? ஒரு தகுதியானவன் பேச்சு தாண்டா, தகுதி! தகுதிக்கு அர்த்தம் தெரியாத கூட்டம், ஜி ஆர் .சுவாமிநாதனை தகுதி நீக்கம் ,செய்ய டெல்லிக்கு ஓடுகிறார்கள். உங்களுடைய தகுதி என்ன? என்பது முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .பிறகு, நீதிபதியின் தகுதியைப் பற்றி நீங்கள் பேசலாம்.

மேலும் ,நீங்கள் செய்கின்ற தமிழ்நாட்டின் அரசியல். உங்களுடைய அரசியல் தகுதி என்ன? தகுதியான அரசியல்வாதிகளிடம், நீங்கள் எல்லாம் நிற்க முடியாது. கொள்ளையடிக்கிற கூட்டம், நீங்கள் எப்படி தகுதியை பற்றி பேச முடியும்? ஒவ்வொரு அமைச்சரும், பல ஆயிரம் கோடிகளில் கொள்ளையடித்து, ஊரே காரி துப்பிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் போய் நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய, உங்களுக்கு தகுதி இருக்கிறதா? அப்படியே தகுதி நீக்கம் செய்வதாக இருந்தால் ,மூன்றில் இரண்டு பங்கு, எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தேவை. அது இந்தியா கூட்டணிக்கு இல்லை.

இருப்பினும், இதை வைத்து நீ அரசியல் செய்ய முற்பட்டால், இந்து அமைப்புகள், பிஜேபி அதற்கு எதிர் தாக்குதல் அரசியல் நடத்துவார்கள் ஸ்டாலின் கதை கந்தல் தான்.