அண்ணாமலை அரசியலில் திமுக, அதிமுகவை விட ஊழலில் மிஞ்சி விட்டாரா?

 

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டோ, ஊழலோ ,இல்லை. அது ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்.மேலும்,

பிஜேபியில் துணைத் தலைவராக இருந்தவரை ,அதிலும் எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், மாநிலத் தலைவராகி மூன்று ஆண்டுகளில், அவருடைய அரசியல் தமிழ்நாட்டில் பட்டித் தொட்டி எங்கும் பேர் பரவியது. அது எதனால் ?என்றால், திமுகவை எதிர்த்து அரசியல் செய்ததால், அது அந்த அளவிற்கு உச்சத்தை தொட்டது.

மேலும்,தொட்ட உச்சம் எந்த அளவுக்கு போனதோ ,அதே அளவுக்கு கீழே இறங்கிவிட்டது. இவர் மீது நல்ல மதிப்பு, மரியாதை வைத்திருந்த பிரதமர்மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அத்தனையும் கெடுத்துக் கொண்டார். பிஜேபியில் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

மேலும்,இதனால் வரை சோசியல் மீடியாக்களில் இவரைப் பற்றி வந்த தகவல்கள் பொய்யாக இருக்கலாம் , உண்மையாக இருக்கலாம் ,என்றுதான் மக்கள் நினைப்பார்கள். அது உண்மைதான். அங்கே பொய்யும் வரும் ,உண்மையும் வரும்.

தவிர, இவரே ஒரு ஐம்பது youtube பர்களை வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இவரைப் பற்றி பெருமையாக மக்களிடம் பேசுவதற்கு, பாராட்டுவதற்கு, இவர் ஒரு சின்ன விஷயத்தை செய்தாலும்' அதை பெரிய அளவில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்வார்கள்.

இந்த வேலையெல்லாம் ஒரு தகுதியான அரசியல்வாதி எப்போதும் செய்ய மாட்டான் அதை விரும்பவும் மாட்டான். மேலும் ன்ய ,இது ஊரை ஏமாத்துற கூட்டம் செய்யும் வேலை தான் அண்ணாமலை செய்து கொண்டிருந்தார்.மேலும்,

நான் இவரை இரண்டு ,மூன்று முறை கமலாயத்தில் சந்தித்தேனோ ,முதலில் பார்த்தபோது பயங்கரமான நடிப்பு ,எல்லோரும் முதல் தடவை பார்க்கும்போது ஏதோ அண்ணாமலை பெரிய அளவில் செய்து விடுவார் என்று அந்த நடிப்பை பார்த்து நினைப்பார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை.

பிறகு தான் தெரிந்தது, இவர் எல்லோரையும் காட்டிலும் நடிப்பதில் திமுக, அதிமுகவினரை விட மிஞ்சி விடுவார்.தவிர , இவர் முதலமைச்சரை ரேஞ்சு விட ,கமலாயத்தில் இவர் ரேஞ்ச் அதிகமாக்கிவிட்டது.மேலும்,

மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி இவரை விட அதிக பொறுப்பில் இருந்தவர் .அவரையே ஒரு நாள் ஒரு காக்க வைத்திருக்கிறார். இவருடைய அரசியல் என்ன அரசியல்? என்பது அப்போதே தெரிந்து கொண்டேன்.

மேலும், அண்ணாமலைக்கு ஒரு தலைவனுக்கு உரிய தகுதி நிச்சயம் கிடையாது. இப்போது கூட பெரிய அளவில் ஊழல் பேசப்பட்டு வருகிறது. பல கோடிகளில் சொத்து கோவை, கர்நாடகா போன்ற ஹாட் சிட்டிகளில் வாங்கி இருப்பதாக தகவல் வெளிவருகிறது. தவிர, லண்டனில் கூட சொத்து வாங்கி இருப்பதாக தகவல் .இவரைப் பற்றி ஊழல் பட்டியல் எடுக்க அமித்ஷா உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்கள் இந்நேரம் உளவுத்துறை இவருடைய மொத்த files ம் கொண்டு போய் கொடுத்து விட்டு, இருப்பார்கள்.

மேலும்,திமுக மந்திரிகளிடம் எவ்வளவு வாங்கியது? அந்த புள்ளி விவரமும் போய் இருக்கும். அதனால் தான், இவரை பிஜேபி ஓரம் கட்டி வைத்துள்ளது. மேலும், இவருடைய மச்சான் பெரிய பைனான்சியர் அளவுக்கு பேசப்பட்டு வருகிறாரம் ஏனென்றால், ஓரளவுக்கு சொத்து கொள்ளையடித்தால் அது தெரியாது.

ஆனால்,இது ஓவராக ஆட்டம் போடவே ,அண்ணாமலையின் ஆப்போசிட் குரூப் (opposite group) டெல்லி தலைமைக்கு இவருடைய ஆதியந்தம் ,பூராவும், ஒவ்வொருவராக அனுப்பி வைத்து விட்டார்கள்.

மேலும்,அரசியலில் அதிக யோகியனாக பேசினால், அவர்கள் தான் மிகப்பெரிய ஊழல் செய்வார்கள். அப்படித்தான் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார். இப்போது, இவர் எந்தப் பக்கம் ஓடலாம்? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓடினாள் பிஜேபி நம்மை என்ன செய்து விடுவார்களோ? என்ற ஒரு பயமும் இருக்கிறது.

இங்கே இருந்தால், நமக்கு எந்த பதவியும் கொடுக்க மாட்டார்கள். அதுவும் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை தனிக்கட்சியை ஆரம்பிக்கலாமா? என்ற ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கலாம் என்கிற தகவல். மேலும்,தனிக்கட்சி ஆரம்பித்தால், இவர் காணாமல் போய்விடுவார். இவரை சுற்றி அந்த அளவுக்கு ஒன்றும் பெரிய மாஸ் கிடையாது.

இவருடைய மாசெல்லாம் பிஜேபியால் வந்த மாஸ். இப்போது, இவரிடம் வாங்கி சாப்பிடும் கூட்டம் இருப்பார்கள் அல்லவா? அது எல்லோரும் வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஜால்ரா போட்டுக் கொண்டு வாழ்க என்று கத்திக் கொண்டு, ஒரு கூட்டத்தில் பார்த்தேன் ,தலையில் இருக்கக்கூடிய துண்டை எடுத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் காட்டினால் தான் அண்ணாமலைக்கு ஏதோ ,ஒரு பெரிய கூட்டம் இருப்பது போல், மக்கள் நினைக்கட்டுமே .இனி அண்ணாமலை அரசியலில் பெரிய அளவுக்கு வர முடியாது .

தவிர ,உயர்ந்த பொறுப்புக்களுக்கு பிஜேபி இவரை இனி நம்பாது. இதை விட்டு அடுத்த காலடி வேறு எங்காவது வைத்தால், இவர் கதை கந்தல் தான்.

எப்படியோ அண்ணாமலை இவருடைய போலீஸ் புத்தியை தீட்டி விட்டார்.