திருமாவளவனும், அவரது கட்சியினரும், தமிழ்நாட்டில் எந்த தவறு செய்தாலும், ஒன்று ஜாதியை கொண்டு வந்து வைத்து விடுவார்கள்.
ஒருவேளை !அது பலன் அளிக்கவில்லை என்றால், தற்போது அவன் ஆர். எஸ். எஸ் காரன் என்று முத்திரை குத்தி ,அரசியல் ஆக்கி விடுவார்கள். இப்படி தான் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கும் ஆர். எஸ் . எஸ் காரன் , என்று முந்தரைக் கொடுத்து விட்டார்கள்.

மேலும், திருமாவளவனனுக்கும், அவருடைய கட்சிக்காரனுக்கும், இந்த ஆர்.எஸ்.எஸ் காரனுடைய அர்த்தம் தெரியுமா? அவர்களுடைய தேசப்பற்று ,சமூக பற்று பற்றி தெரியுமா? தவிர, திருமாவளவன் ஏதோ இவர்களைப் போன்ற ஒரு ரவுடி கூட்டம் போல் ,ஆர்.எஸ.எஸை நினைத்துக் விட்டாரா? தவிர, அவர்கள் எங்கேயாவது கட்டப்பஞ்சாயத்து செய்து பார்த்திருக்கிறீர்களா?
எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்கும் . சண்டை போட்டாலும், நியாயம் இருக்கும் .அநியாயத்திற்கு போக மாட்டார்கள். ஆனால், திருமாவளவனின் அராஜகங்கள் மற்றும் அவரது கட்சியினர் அராஜகங்கள் மனசாட்சிக்கு விரோதமானது. இதை எந்த சமூகமும், ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும், இதையெல்லாம் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது என்று பொதுமக்களும், மற்ற அரசியல் கட்சிகளும், புலம்புகிறார்கள் .ஆனால்,அரசியலை மீறி, அவர்களால், ஒன்றும் செய்ய முடியாது.ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கிறது என்று காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. நாட்டில் காவல்துறையை அரசியல் கட்சிக்காரனாக ஆக்கி விட்டார்கள்.

ஏனென்றால், அவர்கள் எல்லாம் கூலிக்கு வேலை செய்பவர்கள். யார் ?பணம் கொடுத்தாலும் ,கூலிக்கு வேலை செய்வார்கள். சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன்.
எந்த அரசியல் கட்சி வந்தாலும், வேலை செய்யப் போகிறார்கள் . அதனால், சட்டத்தைப் பற்றி ,நியாயத்தை பற்றி ,பேசக்கூடிய ஒரு சில காவல்துறை அதிகாரிகள் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்களால், இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு, அவர்கள் முன் வந்து போராடினால்! அவர்களுக்கே, அது பிரச்சினையாக இருக்கிறது. அப்படி என்றால் யார் ?முன் வருவார்கள்?

மேலும்,அரசியல் கட்சியின் பின் புலத்தில் இயங்குகின்ற கட்டப் பஞ்சாயத்து வழக்கறிஞர்களால், நாட்டில் சமூகப் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இது காவல்துறைக்கு ஒரு பக்கம் சவாலாகவும், மற்றொரு பக்கம் மன உளைச்சலையும், வேதனைகளையும், ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஜாதியை பார்த்து, பணத்துக்காக வேலை செய்யக்கூடிய போலீஸ்காரர்கள், இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், காவல்துறையின் கண்ணியத்தை காப்பாற்றக்கூடியவர்களுக்கு இது, தாங்களும் தவறு செய்கிறோமோ ,என்ற மனசாட்சி அவர்களை உறுதி கொண்டு தான் இருக்கிறது.
அப்படிதான் இந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் பிரச்சனையிலும், திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்களைக் கூட்டி வழக்கறிஞர்களுக்கு எதிராகவே ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். இவருடைய வழக்கறிஞர்கள் எத்தனை வழக்குகள்? தமிழ்நாட்டில் வாதாடி ஜெயித்திருக்கிறார்கள் ? அப்படி எத்தனை பேர் இவருடைய கட்சியில் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள்? அந்த புள்ளி விவரத்தை கொஞ்சம் திருமாவளவன் தமிழக மக்களுக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.மேலும்,

தகுதியான வழக்கறிஞர்கள் மத்தியில் இப்படி ஒரு அரசியல் கொண்டு வந்து ,அதுவும் ஒரு வழக்கறிஞரை இவருடைய கட்சியினர் ரவுடிகள் போல் , அடித்திருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதற்கு ஒரு நியாயமான அரசியல் கட்சி தலைவனாக இருந்தால், மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அதை விட்டு, விட்டு திமிரான பேச்சுக்கள், வழக்கறிஞர்கள் மத்தியில் வெறுப்பையும் ,வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.

இனி வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்து போராடுவதை விட்டு ,விட்டு இவருடைய பதவியை எடுக்க, இவர் ஒரு கட்சியை நடத்தக்கூடிய தகுதியற்ற தலைமை பண்பு அற்றவராக இருக்கக்கூடியவர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், இவரையும் தகுதி நீக்கம் செய்து, மேலும், திருமாவளவனின் எம்பி பதவியும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இதற்கு பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞர்கள் தீர்மானம் நிறைவேற்றி, வழக்கு தொடுத்தால், திருமாவளவன் கதி! அதோ கதி தான்.மேலும், ஆளும் திமுக அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கிற மதிப்பு, மரியாதை மொத்தமாக காலி செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .