திமுக அரசு ஒரு நபர் கமிஷன் விசாரணை ஆணையத்தை ,அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற உத்தரவிட்டது.
இப்போது இவர்கள் என்னென்ன ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் பற்றிய விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் இனி விசாரணை தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் இவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு என்ன நடந்தது? இது எல்லாமே பத்திரிகையாளர்களுக்கும் சரி, பொதுமக்களும் சரி, இது ஒரு மிகப்பெரிய சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மைகள் வெளிவராமல் மறைக்கப்பட்டுள்ளது.
மேலும்,அந்த 41 பேர் உயிரிழப்பு எப்படி ஏற்பட்டது? இதுதான் முக்கிய விசாரணையின் நோக்கமாக சிபிஐ விசாரணையில், வெளிவரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

இந்த துயரமான சம்பவத்தை வைத்து, அரசியல் கட்சிகள் இதை அரசியல் செய்கிறார்கள் என்று நினைக்கும் போது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மனசு வருத்தமாக தான் இருக்கிறது.
ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எவ்வளவு மன வேதனை அடைவார்கள்? பணத்தை வைத்து ,அதிகாரத்தை வைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள்! மக்களின் மனவேதனை பற்றி, அவர்களுடைய மனக் குமுறல்களைப் பற்றி, வெளியில் சொல்ல முடியாமல் புலம்பி வருவது, அவர்களுடைய பேச்சிலிருந்து தெளிவாக தெரிகிறது.
மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்பதில் திமுகவும் ,திமுக வழக்கறிஞர்களும் ,அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அது பலன் அளிக்கவில்லை.

தவிர, ஒரு தவறும் செய்யாத செத்த ஆத்மாக்கள், வேதனை சும்மா விடாது. யார் ?என்னென்ன தவறு செய்திருக்கிறார்களோ ,அதற்குரிய தண்டனை அது வாங்கி கொடுத்துவிட்டு தான், அந்த ஆத்மக்கள் சாந்தி அடையும்.
மேலும், எடப்பாடி பழனிசாமி சொல்வது போல, திமுக ஆட்சியில் நீதி துறையும், நீதிக்காக போராட வேண்டி இருக்கிறது. அது உண்மைதான் நீதி என்பது கடையில் விற்கும் சரக்கு அல்ல .

ஆனால், திமுக எல்லாவற்றையும் பணத்தாலே, நீதியை கூட விலை பேசிக்கொண்டு இருக்கிறது. இது நீதித்துறையில் வெளிவராமல் மறைக்கப்பட்ட உண்மைகள் .மேலும், கரூர் வழக்கு குறித்து ,அதிமுக சார்பில் ,ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் 41 பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பிரபாகரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு, பிரபாகரனை அப்பகுதி ஒன்றிய செயலாளர் அவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும், பணம் கொடுப்பதாகவும், தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வாபஸ் வாங்க சொல்லி ஒரு பக்கம் அவருக்கு ஆசை வார்த்தைகளும், அதாவது வேலை வாங்கி தருவதாகவும் ,பணம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தவிர ,அவருக்கு இன்னொரு பக்கம் மிரட்டலும், வருவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று அவர் போட்ட வீடியோவில் ,அதை சொல்லி உள்ளார்.
அப்படி என்றால்! திமுக எதற்காக இவ்வளவு பதற்றம்? என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி முன்வைக்கிறார்? குற்றவாளி யாராக இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும். இதில் திமுக எதற்காக இவ்வளவு உச்சபட்ச பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிபிஐ விசாரணை கிடைக்கக்கூடாது என்பதில் திமுகவும், அவர்களுடைய வழக்கறிஞர்களும் பதறுவது ஏன்?
மேலும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவிப்பது ,திமுக கொத்தடிமைகள் கவனத்திற்கு ,இந்த Document-களை ,Record-களை எல்லாம் இனிமேல் மாற்றவோ, மோசடி என்று கூறவோ, தொலைந்துவிட்டது என்றோ, கரையான் அரித்துவிட்டது என்றோ, கூற இது ஒன்றும் உங்கள் மாநில அரசு Record அல்ல!
இது உச்ச நீதிமன்றத்தின் உச்சபட்ச நீதி விசாரணை! இங்கே, இனி எதையும் மறைக்க முடியாது. இந்த விசாரணையில் சிபிஐ ஒவ்வொரு வாரமும் தனது விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒருவரை நியமித்துள்ளனர். பதற்றத்தில் திமுக மற்றும் அதன் வழக்கறிஞர்கள்......!