நாட்டில் நீதிபதி நியமனங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அந்தத் தேர்வு அரசியல் கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். கட்சி சார்ந்த வழக்குகளை அவர் வெற்றி கொண்டதற்காக அவரை நீதிபதியாக நியமனம் செய்யக்கூடாது.

மக்கள் நலனுக்காக போராடிய வழக்குகள் எத்தனை? பொதுநல வழக்குகள் எத்தனை? சட்ட சிக்கல் வழக்குகள் எத்தனை? சமூகநீதி போராட்டத்திற்கான வழக்குகள் எத்தனை? இப்படி ஒரு வழக்கறிஞர் தன்னுடைய வாழ்நாளில், எந்தெந்த ஒரு பிரச்சனைக்காக அவர் வாதாடி இருக்கிறார்?
அவருடைய ஒவ்வொரு வழக்குகளும், சமூகம், தனி மனித பாதிப்பு, அரசு துறை சார்ந்த பாதிப்பு, தேசம்,அரசியல் கட்சிகளின் அடாவடித்தனங்கள், சட்டப் பாதுகாப்பு, போன்ற முக்கிய கருத்துக்களின் அடிப்படையில் கொண்ட பிரச்சினைகளுக்காக அவர் எத்தனை வழக்குகள் போராடி வெற்றி பெற்றுள்ளார்?

அப்படி எத்தனை வழக்குகள்? ஒரு வழக்கறிஞர் வெற்றி பெற்று இருக்கிறார்? அதில் நீதி எப்படி நிலை நாட்டப்பட்டுள்ளது? இந்த அடிப்படையில், ஒரு வழக்கறிஞர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நீதித்துறை நீதித்துறையாக செயல்பட முடியும்.மேலும்,
இன்று நீதித்துறை அரசியல் கட்சியினர் சிபாரிசு பேரில் நீதிபதியாக உட்கார்ந்து கொண்டு, அவர்கள் நீதி வழங்கும் போது, அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்களாக செயல்படுகிறார்களா? என்ற ஐயம் நாட்டு மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இது, உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், சட்டம் படித்து தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள், சட்டப்படி வழக்குகளை எதிர்கொண்டாலும் ,அவர்களால் வெற்றி பெற முடியாமல், அந்த வழக்குகளில் ஏமாற்றங்கள் தான் கிடைக்கிறது என்கிறார்கள்.
இதற்குக் காரணம் நீதிபதிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நடுநிலையும் ,மக்களுக்காக நீதித்துறை என்பதையும் ,மறந்து விட்டு, ஆட்சியாளர்களின் பின் புலமும், அரசியல் கட்சிகளின் பின்புலமும், நீதி வழங்கினால் , அவர்களுக்கு மறைமுக ஆதாயம் இருக்குமா? அந்த ஆதாயத்திற்காக இப்படிப்பட்ட தீர்ப்புகள் கொடுக்கிறார்களா? என்ற சந்தேகம் நாட்டு மக்கள் மனதில் எழுப்பியுள்ளது .

இப்படிப்பட்ட நீதி !நாட்டு மக்களுக்கு எதிராக இருந்து வருகிறது. மேலும் இந்த தீர்ப்புகள் பொதுமக்களிடம் விமர்சனங்களாக பேசப்படுகிறது. பத்திரிகை துறையில் விமர்சனங்களாக அதில் ,கொண்டு வரப்படுகிறது. அந்த விமர்சனங்கள் அரசியல் கட்சி சார்ந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், அந்த கட்சியினருக்கு சாதகமாக இருந்தால், அதை கொண்டாடுகிறார்கள் ,பாராட்டுகிறார்கள்.

நடுநிலையான பத்திரிகைகள் !அதை விமர்சிக்கின்றன. இதே நிலைதான் பத்திரிக்கை துறையிலும் இருக்கிறது. இது தவிர,தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது செருப்பு வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை பற்றி இன்று நாடு முழுவதும் இப் பிரச்சனை பேசப்பட்டு வந்தாலும், நீதிபதி கவாய் உயர் பொறுப்பில் இருந்து கொண்டு சனாதன தர்மத்தை எதிர்ப்பவராக பேசியது தவறானது.

ஒரு நீதிபதி எப்படி தீர்ப்பு சொல்ல வேண்டும்? நடுநிலையான மனநிலையில் அவர் தீர்ப்பு சொல்ல வேண்டும். இவர் ஒரு மதத்திற்கு எதிராகவும் ,இன்னொரு மதத்திற்கு சாதகமானவராகவும், இருந்து தீர்ப்பு சொன்னால் , அவருடைய தீர்ப்பு எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மேலும், ஒவ்வொரு தீர்ப்புகளின் அடிப்படை நோக்கம் நடுநிலை இல்லாமல் இருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தவிர, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பு வீசியது தவறு என்றால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதும் தவறு தான். நீங்கள் விஷ்ணு பக்தர் அவரிடமே போய் கேளுங்கள்.

ஆமா! அவர் ஒரே வார்த்தை சொன்னார். செருப்பை கழட்டி அடிக்க சொன்னார் சரியா போச்சு. அவர் செருப்பை வீசியது சட்டத்திற்கு தவறாக இருந்தாலும், நீதிபதி தீர்ப்பு சொல்லும் நிலையில் இருந்து கொண்டு பேசியது, சட்டப்படி அதுவும் தவறு தான். இந்த விஷயத்தில் வழக்கறிஞரை மட்டும் குறை சொல்வது தவறு .நீதிபதி சொன்ன கருத்தும் தவறு தான்.

முதலில் தவறு செய்தவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இங்கே ஒருவர் தனக்கு பிடித்தவர், தனக்கு வேண்டாதவர் ,இந்த வேலைக்கு அங்கே இடமில்லாமல் இருக்க வேண்டும், அதுதான் நீதி.
நீங்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் ,அரசியல் கட்சிக்கு வேண்டியவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கும் ,தீர்ப்பை சொல்லிக் கொண்டிருந்தால் , நாட்டு மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். மேலும், நீதித்துறை !
நாட்டின் கடைசி மக்களின் நம்பிக்கை என்பதை ஒவ்வொரு நீதிபதியும், உணர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும். தவறான தீர்ப்புகளின் பின் விளைவு சமூகத்தில் போராட்டங்களும், நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு அது ஊக்கம் அளிப்பதாகவும் இருந்து வருகிறது. இதனால், நாட்டுக்கும், தேசத்திற்கும் ஆபத்து.

மேலும் ,தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகளில் சீக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியை ,இலாக்கா இல்லாத மந்திரியாக திமுக அரசு, ஒரு வருடத்திற்கு மேல் தொடர்கிறார். அதற்கு ஆளுநர் ஆர் .என். ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அப்போதே நீதித்துறை அவருடைய மந்திரி பதவியை எடுத்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. அவருக்கு ஜாமீன் கொடுக்கிறார்கள்.
மீண்டும் அவர் தற்போது அமைச்சராக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து இருக்கிறார். அதற்கு நீதித்துறை என்ன சொல்கிறது? என்றால், அவர் மந்திரியாக பணியாற்றுவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அவர் சாட்சிகளை அதிகாரத்தை பயன்படுத்தி களைக்க கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் நாங்கள் ஜாமீனை ரத்து செய்வோம். எதுக்கு இத்தனை விஷயங்கள் கொண்டு வந்து செந்தில் பாலாஜிக்கு முட்டு கொடுக்கிறீர்கள்? நேரடியாகவே ஒரு ஊழல் மந்திரி வெளிப்படையாகவே தெரிகிறது.

ஆனால், அதற்கு முட்டுக் கொடுக்கும் வேலை ,நீதிபதிகள் செய்வது நீதித்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வேலை. அந்த வேலையை தான் நீதித்துறையில் இன்று பல நீதிபதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது .

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் வீட்டில் பண மூட்டை எரிக்கப்பட்ட சம்பவம் ,நாட்டு மக்களிடையே விமர்சனங்களாக இன்று பேசு பொருளாக ஆகியுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வஃப் சட்ட திருத்தத்திற்கு, இடைக்கால தடை விதித்தார்கள். அந்த சட்டத்தின் சாராம்சம் ,உண்மை, எதுவுமே தெரியாமல் தடை விதித்திருக்கிறார்கள் .
தவிர ,இன்று ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை கூட வஃப் இடம் என்று சொல்கிறார்களாம் அதுவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எந்த அளவுக்கு இந்த சட்டத்தை பயன்படுத்தி, நாட்டில் எவ்வளவு சொத்துக்கள் ஏமாற்றப்பட்டுள்ளது ?என்பது பற்றியாவது நீதிபதிகள் சிந்தித்து இருக்க வேண்டும்.
இப்படி நீதித்துறை! நீதி வழங்குவதில், நீதிபதிகளின் நேர்மை மக்களிடம் கேள்விக்குறியாகவும் ,பேசு பொருளாகவும் ,ஆகி உள்ளது மிகவும் வேதனைக்குரியது.

இப்படி நீதித்துறைக்கே, கலங்கத்தை ஏற்படுத்தும் நீதிபதிகள், குறித்த பட்டியலை ஆய்வு செய்ய குழு நியமனம் ,ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய மக்களின் கோரிக்கை.
இதன் மூலம் நீதிபதிகளின் தீர்ப்பின் நேர்மை என்ன? என்பதை அந்த குழு நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் . அப்போது தான் நீதித்துறை சரி செய்ய முடியும்.