நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர,
இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து சமூகத்திற்கும், பொதுவானவர்கள். ஆனால், இவர்கள் வழக்கறிஞர்கள் என்ற நிலையிலிருந்து இறங்கி இது ஒரு ஜாதி கூட்டமாக ,இவர்கள் ஆக்கி விட்டார்கள்.

அதனால்,இனி ஒருவன் கூட இவர்களை வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதி இல்லை. அதுவும் தகுதியான பத்திரிக்கையாளர்கள், இவர்களை வழக்கறிஞர்கள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம்.மேலும்,
அரசியல் கட்சிகாரர்கள் எப்படியும் பேசுவது போல் ,கத்துகிற இந்த கூட்டம் ,இவர்கள் படித்து வழக்கறிஞர்களாக ஆனார்களா ?இல்லை படிக்காமலே ஆந்திராவில் இருந்து 50,000 ,ஒரு லட்சம் கொடுத்து சான்றிதழ் வாங்கி வழக்கறிஞர்கள் ஆனார்களா? இந்த ரெண்டு சந்தேகம் தான் எனக்கு இருக்கிறது.மேலும்,

ஒரு படித்தவனுடைய தகுதி எப்படி இருக்கும்? படிக்காதவனுடைய தகுதி எப்படி இருக்கும்? என்பது எங்களால் ஆய்வு செய்ய முடியும் .முட்டாள்கள் இடம் பேசுவது போல் ,நீ எப்படியும் பேசி, அவர்களிடம் சான்று வாங்குவது போல், எங்களிடம் சான்று வாங்க முடியாது.மேலும் ,
உங்களுடைய கைதட்டளுக்கு நாங்கள் பத்திரிகை நடத்த மாட்டோம். என்ன நியாயமோ ,எது உண்மையோ ,அது சொல்வது தான் எங்களுடைய வேலை. நீ எப்படி பேசினாலும், உனக்கு கை தட்டுவதற்கு அடி முட்டாள்கள், உட்கார வைத்திருப்பீர்கள் .அவர்கள் தட்டிக் கொண்டிருப்பார்கள். பேசிக் கொண்டிருப்பார்கள் .இது அரசியல் கட்சி அல்ல .
மேலும், இது அரசியல் கட்சி பத்திரிக்கையும் அல்ல, இது மக்களுக்கான பத்திரிக்கை . தவிர இது உன் புகழ்ச்சிக்கோ ,இகழ்சிக்கோ, அல்லது பாராட்டுக்கோ, நடத்தும் பத்திரிகை அல்ல..

மக்களுக்கு எது ?உண்மையோ ,அந்த உண்மையைத் தான் நாங்கள் சொல்வோம், அவர்கள் உண்மையை புரிந்து கொள்ளத் தான் பத்திரிக்கை. எனவே, பத்திரிக்கையில் !சொல்வது தவறா? அல்லது உண்மையா ?என்பது மக்களுக்கு புரியும்.
மேலும், படிக்காத கட்சிக்காரர்களுக்கும், படித்த வழக்கறிஞர்களுக்கும் ,என்ன வித்தியாசம் ? எந்த வித்தியாசமும் இல்லை. கரை வேஷ்டி கட்டிக்கொண்டு திருமாவளவன் பின்னால் சென்று கத்துங்கள் தவறில்லை. ஆனால், ஒரு வழக்கறிஞராக ,வழக்கறிஞருக்கு எதிராக, கத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையைப் பேசி மறைக்க முடியாது .ஆர்ப்பாட்டம் நடத்தி மறைக்க முடியாது. நீதிமன்றம் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் மேடையோ அல்ல! அங்கே எப்படியும் பேசலாம். இங்கே சட்டத்தின்படி தான் பேச வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வழக்கறிஞருக்கு இருக்கும்போது!
ஒரு படிக்காதவனை போல் கத்தினால், நீங்கள் எப்படி சட்டத்தின் நுணுக்கங்களை ஆய்வு செய்து ,வழக்குகளை உங்களால் எதிர்கொள்ள முடியும்?
இது வழக்கறிஞர்களுக்கான தகுதி அல்ல, அரசியல் கட்சிக்காரனுக்கான தகுதி. எனவே ,இவர்களை நம்பி பொதுமக்கள் வழக்குகளை கொடுத்தால் !ஏமாற்றம்தான் உங்களுக்கு மிஞ்சும்.